முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அட்சய திருதியை! - ஆரியக் கொள்ளை!!

தலைப்பைப் பார்த்ததும் சிலர் குதிக்கக்கூடும்...

"இது துவேஷம், அர்த்தமற்ற ஆவேசம், இதற்கும் பிராம்மானோத்தமர்களுக்கும் என்ன தொடர்பு? நகைத் தொழில் செய்வது எங்கள் குலத் தொழில் அல்லவே, லாபம் எங்களுக்கா வருகிறது???"

இப்படியெல்லாம் கேள்விகள் வரக்கூடும், அதனால் செய்தியைப் படித்துவிட்டு பிறகு குதிக்கவும்...

இந்த வருடம் அட்சய திருதியை ரெண்டு நாளாம்! ஒரே நாளில் ஒட்டுமொத்தக் கூட்டமும் வந்தால் சமாளிக்க முடியாது என்பதால், இரண்டு நாள் என்று ஆக்கிவிட்டார்கள்!

அடுத்த ஆண்டு ஆடித் தள்ளுபடி மாதிரி ஒரு மாதம் முழுக்க என்று அறிவித்தாலும் இந்த பேராசைக் கூட்டம் வரிந்து கட்டி வரிசையில் நிற்கத்தான் போகிறது. (என்ன ஆடியில் எது செய்தாலும் விளங்காது என்ற மூடத்தனத்தை ஆடித் தள்ளுபடி அடித்து உடைத்தது என்பது தான் ஒரு மகிழ்ச்சி!)

சரி,இதில் ஏன் பார்ப்பனர்களைக் குறை சொல்கிறாய் என்பவர்களுக்கு ஒரு செய்தி:

இன்று மதியம் சன் தொலைக்காட்சியில் (19.04.07) அட்சய திருதியை பற்றிக் கருத்துச் சொன்ன ஜோதிடத்திலகம் ஒருவர், "இந்த ஆண்டு அட்சய திருதியை கரிநாளில் வருகிறது; அதனால் அது தோஷம். அந்தப் பிரச்சினை தீர வேண்டுமானால் பிராமணர்களுக்கும் தானம் செய்துதான் தீர்க்க வேண்டும்" என்று யோச'னாய்' சொல்லி இருக்கிறார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

இப்பச் சொல்லும்வோய் தலைப்பு தப்பா?

கருத்துகள்

ஜாலிஜம்பர் இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்து விதமான முட்டாள்தனங்களையும் கடைப்பிடித்து ஒழுகும் ஒரு கும்பல் சமூகத்தின் உச்சியில் இருப்பது எப்படி?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தியச் சமூகத்தில் இவர்கள் உச்சத்தில் இருப்பதால் தான் உலகச் சமுதாயத்தில் நாம் இன்னும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம்.
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
"உலகத்தில நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைச்சுடுதே .... எப்படி?" ன்னு 'மகாநதி' படத்தில கமல் அழுவார். அது மாதிரிதான் இருக்கு!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்து விதமான முட்டாள்தனங்களையும் கடைப்பிடித்து ஒழுகும் சன் தொலைக்காட்சியில் ??????????...

உலகத்தில நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் (சன் தொலைக்காட்சி) கிடைச்சுடுதே .... எப்படி?" ன்னு 'மகாநதி' படத்தில கமல் அழுவார். அது மாதிரிதான் இருக்கு!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சன் தொலைக்காட்சி - ஜோதிடத்திலகம்
அட்சய திருதியை. கூட்டு களவாணித்துவம்!


எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த (tamil) நாட்டிலே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…