முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசத்தப்போவது யாரு? - சன் டிவியின் தோல்விசனியன்று (17.2.2007) சன் தொலைக்காட்சியில் 'அசத்தப்போவது யாரு?' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. விஜய் தொலைக்காட்சியின் 'கலக்கப்போவது யாரு?' -இன் காப்பி, மறுபதிப்பு என்பது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தது. அத்தோடு மட்டுமல்லாமல், அதில் பங்கேற்ற அனைவரும் இந்நிகழ்ச்சியில்...!

'பிரபல தொலைக்காட்சிகளில் புதிய முகங்களால் புதிதாக சொல்லப்படும் கருத்தக்கங்கள் அவர்களிடம் நிராகரிக்கப்பட்டு, அடுத்த வாரமே புதிய தலைப்பில், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிடும்' என்ற குற்றச்சாட்டு வெகுநாளாக நிலவிவருகிறது. இந்நிலையில்தான் இந்த நிகழ்வு!
வியாபார உலகில் இது சாதாரணமானதுதான் என்று சொல்லிவிடலாம். வெளிநாட்டு நிகழ்ச்சிகளை தமிழில் எடுத்து வெற்றியடைச் செய்வது போல்தான் இதுவும். ஆனால், சன் தொலைக்காட்சி தனக்கென வள்ர்த்து வைத்திருக்கும் பிம்பத்திற்கு இது முற்றிலும் மாறானது.

இதுநாள் வரை தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் அதிகமாக திரைப்படம் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளையும் தயாரித்து அதன் மூலம் தனது தயாரிப்புச் செலவுகளைக்க் குறைத்துக் கொண்டு, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது. எப்படி என்கிறீர்களா? பின்னணியில் blue matt போட்டு எதாவது வண்ணக் கலவைகளை ஓடவிட்டு, ஒரு தொகுப்பாளரைப் பேசவிட்டு ஒரே படத்தின் காட்சிகளை சண்டைக்காட்சிகள், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், செண்டிமென்ட் காட்சிகள் என கூறு கட்டி வைத்துவிற்றுக் கொண்டிருந்தது. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது தொடர் நாடகங்கள்.

சரி, மற்ற தொலைக்காட்சிகள் எல்லாம் ஒழுங்கானவைகளா? என்றால் இல்லைதான். அவையும் திரைப்படக்காட்சிகளை வைத்தே பிழைப்பை ஓட்டத் தயாரகத் தானிருக்கின்றன. ஆனால்ம் புதிதாக தயாரிக்கப்படும் மிக்கைத் திரைப்படங்கள் உள்பட எல்லாத் திரைப்படங்களையும் முன்கூட்டியே அதிக விலைக்கு சன் தொலைக்காட்சி வாங்கி விடுவதால் மற்றத் தொலைக்காட்சிகள் வேறு வழியின்றி புதிய நிகழ்ச்சிகள் தயாரிக்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் விஜய் போன்ற தொலைக்காட்சிகளுக்கு சன் குழுமம் கொடுத்த தொல்லைகள் காரணமாக அவர்கள் தங்கள் வழக்கமான பாணியிலிருந்து மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படித் தான் ஜெயா, விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் விளையாட்டு உள்பட மற்ற நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தத் தொடங்கின.

இதனாலேயே, வெறும் மெகாத் தொடர் மற்றும் பெரியதிரைகளால் நிரம்பிக்கிடந்த தொலைக்காட்சிகளில் சலித்துப்போயிருந்த மக்களுக்கு மற்ற தொலைக்காட்சிகளின் மீது கவனம் திரும்பியது. இதில் விஜய்-க்கு நல்ல பெயர் கிடைக்கக் காரணம்.. அதிலிருந்த புதிய இளைஞர்களின் சிந்தனைப் பாய்ச்சல்தான். இக்காரணங்களால் மெல்ல மெல்ல தன்னுடைய பார்வையாளர்களை இழந்துவந்தது சன் தொலைக்காட்சி. இப்போது அதைப்புரிந்து கொண்டு தன்னுடைய கணிப்பில் ஏற்பட்ட தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இரண்டாவது நிகழ்வுதான் 'அசத்தப்போவது யாரு?'

இதற்குமுன்பே, இங்கிலீஷ் திரைப்படங்களின் தமிழ் மொழியாக்கத் திரைப்படங்களால் விஜய் பெற்ற கவனம் சன் குழுமத்தையும் அதை நோக்கி திரும்பவைத்தது.

இந்தப் பாடங்களிலும் அது கற்கவில்லையானால், பெருங்காய டப்பாவாகவே இருக்க வேண்டியிருக்கும். முதன்முதலில் வந்த தனியார் தொலைக்காட்சி என்பது தான் சன் டிவிக்கு பெரும் வாய்ப்பு. ஆனால் அது எத்தனை நாளைக்கு நிற்கும் என்பது முக்கியம். யாராலும் வீழ்த்த முடியாத ஆலமரம் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் அந்த ஆலமரத்தின் கீழ் எடுக்கும் ஓய்வில் நச்சு மட்டுமே தொடர்ந்து இல்லாமல் இருக்கவேண்டும் என்பது தான் நமது கவலை.


இதில் குறிப்பிடப்ப்டவேண்டிய இன்னொரு அம்சம்:


நல்ல நிகழ்ச்சிகள் பார்க்கப்படாது; நல்ல திரைப்படங்கள் வரவேற்கப்படாது; மக்களுக்கு பிடிப்பதையே நாங்கள் தருகிறோம் என்று சொல்லும் வணிகர்களுக்கு மீண்டும் ஒரு பாடம் இது. நல்லவை எங்கிருந்தாலும் ஏற்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.


இது சொந்தக்கதை சோகக்கதை:
தினமும் என்னைப் பாதிக்கும், யோசிக்க வைக்கும் செய்திகளை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில், இரவு வெகுநேரமானாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். உறக்கம் கண்களைச் சுழற்றி கொஞ்சம் எழுத்துகள் பிசகும் நேரத்தில் 'சரி, சேமித்து வைத்துக்கொண்டு காலையில் வந்து எழுதுவோம்' என்ற ஆசையில் நான் எழுதி சேமித்து வைத்த (Save Drafts) சில பதிவுகளை காலையில் காணவில்லை என்றதும், அதனால் ஏற்பட்ட கோபமும் சலிப்பும் நான்கு நாட்களாக என்னை எழுதவிடாமல் செய்து வந்தது. காதலர் தினத்துக்கு எழுதிவைத்த பதிவு உட்பட சுமார் நான்கு பதிவுகள் இப்படி தொலைந்தன. போகட்டும். இனியாவது விழித்து எழுத முயற்சிக்கிறேன்.

கருத்துகள்

♠ யெஸ்.பாலபாரதி ♠ இவ்வாறு கூறியுள்ளார்…
:-)
சினேகிதி இவ்வாறு கூறியுள்ளார்…
இருந்த பதிவுகள் எப்பிடிக் காணமப்போகும்??? நித்திரையில அழித்துவிட்டீர்களோ??
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
இல்ல சிநேகிதி இல்ல!

'save as draft' கொடுத்துட்டு அப்படியே கீ போர்டு மேலயே விழுந்து தூங்கிட்டேன்னு நினைக்கிறேன்.
பெப்பி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக உறங்கி பின் விழித்து திறம்பட உம் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்திருக்க்லாம்! அல்லது... அயராது விழித்து,முழித்து,முடித்து (TR ஸ்டைல் மா....கண்டுக்காத!!) பின் உறங்கி இருக்கலாம்!!

பிஞ்சா...திருந்துடா!!எப்படி உன்னால மட்டும் முடியுது...என்னமோ போடா!
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்ஸ்,
ப்ளாக்கரில் எழுதினால் இந்தப் பிரச்சனை வரும். ஜிமெயிலில் compose mail பகுதியில் தட்டச்சுங்கள், அப்புறமாக எடுத்து ப்ளாக்கரில் போட்டுக் கொள்ளுங்கள்.. அந்த வகையில் ஒழுங்காக வரும்..

ஜிமெயில் அவ்வப்போது சேமித்துக் கொண்டே இருப்பதால், இந்த வகையில் வசதி.

இணையத் தொடர்புப் பிரச்சனை வருமென்றால், வோர்டிலும் தட்டலாம் :)
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி பொன்ஸ் அக்கா! அப்பப்ப இப்படி தொழில்நுட்பத் தகவல்களித் தந்துதவுங்க! அப்படியே செய்திகள் தொடர்பான விமர்சனங்களையும் வச்சிட்டுப் போங்க!
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
//ப்ளாக்கரில் எழுதினால் இந்தப் பிரச்சனை வரும். ஜிமெயிலில் compose mail பகுதியில் தட்டச்சுங்கள், //

நல்ல ஐடியா.

நான் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் டைப் செய்து டிராப்ட்ஸ்ல் சேமித்து வைத்துக் கொள்கிறேன்
prakash இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல அலசல். விஜய் டீவியின் நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிப்படையே, நேயர்களை அதிக அளவில் பங்கு பெறச் செய்ததுதான். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டி நடந்த போது, நாளொன்றுக்கு, 'அவருக்கு ஓட்டு போடுங்க, இவருக்கு ஓட்டு போடுங்க' என்று ஐந்துக்கும் குறையாமல் குறுஞ்செய்திகள் எனக்கு வரும்.

user generated content என்பது இணையத்துக்கு மட்டுமல்ல, தொலைக்காட்சிக்கும் பொருந்தும், இனி வரும் காலங்களில் :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னோரு விஷயம் நியாபகம் வச்சுக்கோங்க.

சப்போஸ் நோட்பேடுல அடிச்சீங்கன்னா, சேவ் அஸ் (Save AS) போடும்போது, Type யுனிகோடா செலக்ட் செய்யுங்க. (வழக்கமா ANSI ல இருக்கும்.). அப்படி ஆன்ஸியிலே சேவ் அடிச்சீங்கன்னா எல்லாமே கேள்விக்குறி கேள்விக்குறியா தெரியும்.. ?????????????????????????????????????????????? இப்படி..


செந்தழல் ரவி
மாரி இவ்வாறு கூறியுள்ளார்…
விஜய் டிவியில் சென்ற வாரம் வந்த சின்னி, "இந்த நிகழ்ச்சி மூலம் வாழ்க்கை பெற்ற மிமிக்ரி கலைஞர்கள் விஜய் டிவிக்கு ஆயுள்
முழுமைக்கும் நன்றிக்கடன் பட்டவர்கள்" என்று பஞ்ச் வைக்க, சன்னில் வந்த ஒவ்வொரு போட்டியாளரும், "சிலர் சன் டிவியைக் குறை
சொல்கிறார்கள். அது தவறு. உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் சன் வளரும் கலைஞர்களுக்கு புகழும் வாழ்வும் தர முன்வந்திருக்கிறது"
என்று நெக்குருகுகிறார்கள். இதை துயரம் (ஐரனி) என்பதா காமெடி என்பதா தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, "இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களிடையே புகழ்பெறத் துவங்கியிருக்கின்றன. அதனால் நாமும் இது போன்ற
நிகழ்ச்சிகள் வழங்குவது குறித்து சிந்திக்க வேண்டும்" என்று சன் எண்ணியதாகத் தெரியவில்லை. அவ்வாறு எண்ணியிருந்தால், அதே
போன்ற வேறொரு வித்தியாசமான நிகழ்ச்சி வழங்க முன்வந்திருக்கும். ஆனால் இங்கு நோக்கமே வேறாக இருந்திருக்க வேண்டும். அதாவது விஜயில் இந்த நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்று விட்டது. என்னதான் நாம் பிரமாதமாக நிகழ்ச்சி தயாரித்தாலும் கூட, அங்கிருக்கும் திறமையாளர்கள் மூலம் அந்த நிகழ்ச்சியின் வெற்றி தொடர்ந்து கொண்டு தானிருக்கும். எனவே, அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் அனைவரையும் இழுப்பதன் மூலம் அந்த நிகழ்ச்சியை சாரமில்லாததாய் ஆக்க வேண்டும். இதற்காக அந்த
நிகழ்ச்சியின் இயக்குநரையும், அவர் மூலம் மற்ற திறமை மற்றும் புகழ்மிகு பங்கேற்பாளர்களையும் விலைபேசி வாங்கி விட்டது.

சன்னிடம் தர்மசாஸ்திரம் (எதிக்ஸ்) எதிர்பார்க்கும் அளவிற்கும் சில அப்பாவிகள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இதில் போட்டியாளர்களையும் குறைகூற இடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், அவர்கள் டிவி அரசியலைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. மாறாக, அவர்கள் தங்களை புகழ் உச்சிக்குக் கொண்டு சென்ற நிகழ்ச்சி இயக்குநர் கேட்கும்போது அல்லது அறிவுறுத்தும்போது, அவர்கள் மறுக்க முடியாமலும் போயிருக்கலாம்.

எது எப்படியோ, சன் நினைத்தவாறே இனிவரும் கலக்கப் போவது யாரு - மூன்றாம் பாகம் புகழ்பெற முடியாமல் போய் விட்டாலும் கூட, இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது சன் டிவி தான். இதுவரை நிகழ்ச்சிகள் தயாரிப்பில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு போக்கு முன்னோடியாக (டிரெண்ட்செட்டராக- மொழியாக்கம் சரியா தெரியவில்லை?) தன்னை முன்னிறுத்திக் கொண்டது (அவை வட நாட்டு தொலைக்காட்சிகளை அல்லது வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளைக் காப்பியடித்ததாக இருந்தாலும்). இப்போது அந்த பிம்பத்திற்கு தானே பெரும் ஆப்பாக வைத்துக் கொண்டது இந்த நிகழ்வின் மூலம்.

இப்போது அவர்கள் பார்க்க விரும்பும் படம் "காலம் மாறிப் போச்சு" என்பதாக இருக்குமோ?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஸ்டார் என்ற உலகளாவிய நிருவனத்தின் பக்க பலமிருப்பதால் விஜய் டிவி இன்னும் சிறிது காலத்தில் சூரியனை பின்னுக்கு தள்ளிவிடும் என்றே தோன்றுகிறது
சோமி இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கும் சன்ன்னில் இதன் விளம்பரம் போடப் பட்டது அப்போது விஜய் டீவி பார்பதாகவே நினைத்தேன் நிகழ்ச்சி பார்க்கையிலும் கலக்கப் போவது யாருன்னே தோணியது.
இப்பிடியுமா பிரதியெடுப்பார்கள்.

இது செரியான ஈ அடிச்சான் காப்பியாக இருக்கு.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
\\என்னைப் பொறுத்தவரை, "இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களிடையே புகழ்பெறத் துவங்கியிருக்கின்றன. அதனால் நாமும் இது போன்ற
நிகழ்ச்சிகள் வழங்குவது குறித்து சிந்திக்க வேண்டும்" என்று சன் எண்ணியதாகத் தெரியவில்லை. அவ்வாறு எண்ணியிருந்தால், அதே
போன்ற வேறொரு வித்தியாசமான நிகழ்ச்சி வழங்க முன்வந்திருக்கும். ஆனால் இங்கு நோக்கமே வேறாக இருந்திருக்க வேண்டும். அதாவது விஜயில் இந்த நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்று விட்டது. என்னதான் நாம் பிரமாதமாக நிகழ்ச்சி தயாரித்தாலும் கூட, அங்கிருக்கும் திறமையாளர்கள் மூலம் அந்த நிகழ்ச்சியின் வெற்றி தொடர்ந்து கொண்டு தானிருக்கும். எனவே, அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் அனைவரையும் இழுப்பதன் மூலம் அந்த நிகழ்ச்சியை சாரமில்லாததாய் ஆக்க வேண்டும். இதற்காக அந்த
நிகழ்ச்சியின் இயக்குநரையும், அவர் மூலம் மற்ற திறமை மற்றும் புகழ்மிகு பங்கேற்பாளர்களையும் விலைபேசி வாங்கி விட்டது//
நானும் இதையே வழிமொழிகிறேன்
vadivel இவ்வாறு கூறியுள்ளார்…
"அசத்தப்போவது யாரு? - சன் டிவியின் தோல்வி"
1. தலைப்பே தவறு என்றுதான் நினைக்கிறேன். சன் டி.வி. ஒரு பக்கா வியாபார நிறுவனம். அவர்கள் கவனம் செலுத்தும் ஒரே விஷயம் ஒரு நிகழ்ச்சியின் வெற்றி மட்டுமே. "அசத்த போவது யாரு" நிகழ்ச்சி வெற்றி பெற்ற காரணத்தினால்தான் இன்னும் அது ஒளிபரப்பாகிறது. ரேட்டிங் குறைய ஆரம்பித்தால் சன், நிகழ்ச்சியைத் தயங்காமல் மூட்டை கட்டிவிடும்.
2. சன் நிகழ்ச்சியை காப்பியடித்து விட்டது என்று ஒரு குற்றச்சாட்டு. விஜய் டி.வி.யில் வந்த
-(நடிகர்கள் பங்கெடுத்த) நடனப்போட்டி
-சுப்பர் சிங்கர் (பாடல்) போட்டி
-கலக்கப் போவது யாரு
போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் அமெரிக்க தொலைக்காட்சிகளால் உருவாக்கப்பட்டு வட இந்திய தொலைக்காட்சிகளில் வெற்றியடைந்து பின்னரே விஜய் டி.வி. முயற்சித்து பார்த்தது.
3. சன் திரைப்படங்களை நம்பி நிகழ்ச்சி நடத்துகிறது என்கிறார்கள். எனக்குத் தெரிந்து காலை முதல் இரவு வரை முக்கால்வாசி நேரம் நாடகத் தொடர்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. விஜய்யும் நாடகத் தொடர்களை முயற்சித்துப் பார்த்தது (காப்பியடித்தது என்று சொல்ல மாட்டேன்), ஆனால் வெற்றி பெற முடியவில்லை.
4. இன்னொரு விஷயம். வட இந்தியர்களின் கையில் இருந்த விஜய் டி.வி.யை திரு.ரூபெர்ட் மர்டாக் என்ற ஆஸ்திரேலிய வெள்ளைக்காரரின் ஸ்டார் டி.வி. சில வருடங்களுக்கு முன் வாங்கியது. அவர் உலகம் முழுக்க பல தொலைக்காட்சி நிறுவனங்களையும் பத்திரிக்கைகளையும் வாங்கி வருபவர். ஒரு இந்திய தொலைக்காட்சி சேனலையே ஒரு வெள்ளைக்காரன் வாங்கும்போது, ஒரு நிகழ்ச்சியை தன் சேனலுக்காக வாங்கிய சன் டி.வி. செயல் படுபாதகமானதா என்று கேட்கத்தோன்றுகிறது.
5. சன் டி.வி. ஒரு குறிப்பிட்டக் கட்சியின் ஆதரவாளர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு நிமிடம் கட்சி பாகுபாட்டை மறந்துவிட்டு தமிழன் நடத்தும் தொலைக்காட்சி வெற்றிபெறுகிறது என்று சிறிது மகிழ்ச்சி கொள்ளலாமே. அதிலொன்றும் தவறில்லையே.
-வடிவேல்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…