முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாய்பாபா மேஜிக் ஷோ! டிக்கெட் ரெண்டு ரூபாய்

தெலுங்கு கங்கை திட்டத்திற்காக 200 கோடி வழங்கிய சாமியார் சாய்பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் "ஆன்மீக சக்தியால் மொதிரம் வரவழைத்து கொடுத்தார் பாபா" என்று பெருமிதம் கொண்டாராம். செய்தி வெளியிட்டிருக்கிறது 'தினமலர்'.


அதே கூட்டத்தில் (21.1.2007 காலை நிகழ்ச்சியில்) மத்திய அமைச்சர் மாண்புமிகு தயாநிதி மாறன் பேசும் போது, "அருள்மிகு பாபா முதலமைச்சர் வீட்டிற்கு வந்தபோது, எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். அப்போது அவருக்கு மோதிரம் கொடுத்துவிட்டீர்கள், எனக்கும் ஒரு மோதிரம் தாருங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டார். உடனே அவருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். எங்களுக்குக் கொடுத்து விட்டீர்கள்; கலைஞருக்குக் கொடுங்கள் என்று (துரைமுருகன்) கேட்டபோது, அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்.’’ (`தினத்தந்தி’, 22.1.2007) என்று கூறியுள்ளார்.

ஆகா! அற்புதம்...அற்புதம்....மோதிரம் ஸ்டாக் தீர்ந்து போச்சுங்கிறதை எவ்வளவு அழகா சமாளிச்சிருக்கிறாரு பாபா! இல்லாட்டி இவ்வளவு காலம் தப்பிச்சிருக்கமுடியுமா? எத்தனை கொலைகள், எத்தனை பாலியல் வன்முறைகள் (நடமாடும் கடவுளுக்கு பேதம் கிடையாது.. அதனால் இருபாலரும்...)... அத்தனையையும் சமாளித்து வருபவருக்கு இதெல்லாம் ஜுஜுபி..தான்! என்னமோ... என்ன மாயமோ தெரியல... அவருக்கு ஒன்னுமே ஆவறதில்ல.... இன்னும் நடத்திக்கிட்டே இருக்காரு!

பொதுப்பணித்'துரை' தான் புளகாங்கிதம் அடையுதுன்னா, தகவல் தொழில்நுட்பம் அதுக்கும் மேல! இந்திய வாய்க்காலை அறிவியலை நோக்கித் திருப்பிக்கிட்டிருக்கிற தயாநிதி மாறன் என்னடான்னா, எனக்குதான் 'முதல் மரியாதை'... அவருக்கு 'அடுத்த மரியாதை'ன்னு உரிமை கொண்டாடுறாரு!

வெறுங்கையை நீட்டினால் மோதிரம் வருதுன்னா, சாய்பாபாவை அரசுடமையாக்கி வெறுங்கையை விசுக் விசுக்குன்னு நீட்டச் சொல்லி தங்கம் வரவழச்சு, இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்து, இந்தியா வாங்குன கடனை எல்லாம் அடைச்சு, அப்துல் கலாம் போறதுக்குள்ள வல்லரசாக்கிட வேணாமா? அரசுடமையாக்கலைன்னாலும் குறைந்தபட்சம் சன் குழும உடமையாகவாவது ஆக்கி, குங்குமம் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்'-ல சாக்லெட், முட்டாயி, எவர்சில்வர் டம்ளரெல்லாம் குடுக்கிறதுக்கு பதிலா... வாரம் 7 தங்க மோதிரம் பரிசுன்னு விளம்பரம் பண்ணவாவது ஏற்பாடு பண்ண வேண்டாமா?

அதென்னையா.. வெறுங்கையை நீட்டினா விபூதி குங்குமமும், செயினு மோதிரமும்... இப்படி வெறும் கைக்கு அடங்குற பொருளாத்தான் வருமா? பத்து பைசாக்கு பெறாத விபூதிக்கு பதிலா, ஒரு புடலங்காயோ, ஒரு பூசணிக்காயோ குடுத்து வாயடைக்க வேண்டாமா?

பருத்தி புடவையாக்காய்ச்ச மாதிரி 'செய்கூலி இல்லாம', 'சேதாரம் இல்லாம' சும்மா கம்ப்யூட்டர் கட்டிங்கோட தங்க செயினும், மோதிரமும் வருதே... அட கூறுகெட்ட கூபேக்களா... இந்நேரம், கோலார் தங்கச் சுரங்கத்துக்கு பதிலா பாபா தங்கச்சுரங்கம்-னு ஆரம்பிச்சு அதுக்கு சாய்பாபாவையே சி.இ.ஓ. வாப் போட்டு, புரொடக்சனை டெவலப் பண்ணக்கூடாதா?

கொஞ்சமாவது அறிவுன்னு ஒன்னு இருந்து அதையும் கொஞ்சமே கொஞ்சம் பயன்படுத்தினாலும் போதுமே! விபூதி வருதுன்னா சரி, அது பக்தி புராடக்ட், டைரக்டா நடமாடாத கடவுள்கிட்ட இருந்து நடமாடும் கடவுளுக்கு சப்ளை ஆகுதுன்னு சொல்லலாம். கோலார்ல கிடைக்கிற தாதுக்களிலயே, எவ்வளவுதான் சுத்தப்படுத்திப் பார்த்தாலும் பக்கத்து ஏரியால சின்னப்புள்ள தொலைச்ச தோடுதான் கிடைக்குதே தவிர, தங்கத் துகள்கள் கிடைக்க மாட்டேங்குதுங்கறான். இங்க என்னடான்னா பாபா நினைச்சா தங்கம் வருது... அதுவும் பிரிச்செடுத்து, சுத்தப்படுத்தி, உருக்கி, செம்பு கலந்து 22 காரட் அளவுக்கு வந்து, அதுவும் கரெக்ட்டான சைஸ்ல, 916 ஹால்மார்க் முத்திரை தரத்தில தயாராகி வருதுன்னா சாய்பாபா எவ்வளவு பெரிய தங்க பேக்டரியா இருப்பாரு! என்னங்க சாதாரண காரியமா? இந்த தங்கம் எங்க தயாரானது, சரவணா ஸ்டோர் தரமா... சென்னை தங்கமா? மும்பை தங்கமா? இல்ல சிங்கப்பூர் சரக்கா? கஸ்டம்ஸ் கஷ்லமெல்லாம் இல்லாம எப்படிப்பா இந்த தங்கம் பரந்து வருது?

ஆமா! அதென்ன மோதிர சைஸ் எல்லாம் மீடியம் சைஸ்லயே வருது.. லார்ஜ், ஸ்மால் எல்லாம் புரொடக்சன்-ல இல்லயோ? துரைமுருகன் கேட்டதால தப்பிச்சாரு... இதுவே கலைஞர் பேரன் எனக்கு ஒரு மோதிரம் குடுங்கன்னு கேட்டிருந்தா... என்ன செஞ்சிருப்பாரோ? பணக்காரன் பதவிக்காரன்-க்கு மட்டும் தங்க செயின். மத்தவன் கேட்டா பிரயோஜனத்துக்கு இல்லாத விபூதியைத் தர்றாரு.

இப்படிதான் ஒருதடவை பி.வி.நரசிம்மராவ்-னு ஒரு பிரதமர் இருந்தாரே (ஞாபகம் வருதா?) அவர் கலந்துக்கிட்ட ஒரு விழாவில ஒரு பிரமுகருக்கு தங்க செயினை திடீர்னு வரவச்சுக் கொடுத்தாரு. அதை படமெடுத்த டிடி தொலைக்காட்சி கேமராமேன் திரும்பப் போட்டுப்பார்த்தா, மனிசன் வெறுகையால செயினு கொடுக்கிற லட்சணம் தெரியுது.... அதை நீங்களும் இங்க பாருங்க! இந்த மாதிரி தான் துரைமுருகனுக்கும், தயாநிதி மாறனுக்கும் மோதிரம் கொடுத்தது..(இந்த மோதிரம் இந்த வருசத்து இன்கம் டாக்ஸ் கணக்கில வருமா மத்திய அமைச்சர் சார்?)

இப்படி சின்னப்புள்ளத்தனமா, ரொம்ப சாதாரண மேஜிக் கத்துக்கிறவன் கூட நல்லாச் செய்வான் போல, அந்தளவுக்கு கேவலமா செய்யிற வித்தைக்கே இவ்வளவு இளிச்சவாய்க்கூட்டம், பாராட்டு, பணம், பவிசு, பாதுகாப்புன்னா பி.சி.சர்க்காரெல்லாம் சாமியார் வேஷம் போட்டா, இந்தியாவையே கொண்டு வந்து அடகு வச்சிடுவாங்க போலிருக்கே!

சரி, சரி இப்போததக்கு அந்த சிக்கல் இல்ல... சாய்பாபாவோட சின்னப்புள்ள விளையாட்டுக்கள்..... like விபூதி கொடுக்கிறது, லிங்கம் கக்குறேங்கிற பேரில காமெடி பண்றது... இதையெல்லாம் பார்க்க ரெண்டு ரூபா! ரெண்டு ரூபா! ரெண்டு ரூபா! சார்.........................................!

தொடுப்பு: இன்னிக்கு 'விடுதலை' ஆசிரியர் அறிக்கை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…