முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“மர்ம சாமியார் சாயிபாபா”

பி.பி.சி.யில் பரபரப்பாகப் பார்க்கப்படும்
“மர்ம சாமியார் சாயிபாபா”


யோகிகள், குருக்கள் என்று கருதப்படும் சாமியார்கள் புனிதமானவர் களாகக் கருதப்படுவது இந்தியாவின் பாரம்பரியமாகும். ஏறுக்குறைய 3 கோடி பக்தர்களைக் கொண்ட சத்ய சாயி பாபாதான் இத்தியாவிலேயே மிகப்பெரிய ஆன்மீகத் தலைவராகக் கருதப்படுகிறார். தென்னிந்தியாவில் பெங்களூர் நகரின் அருகே உள்ள புட்டபர்த்தியை அவர் தன் இருப்பிடமாகக் கொண்டுள் ளார். அவரது ஆரஞ்சு வண்ண உடையும், அடர்ந்த தலை முடியும் அவரைத் தனித்து அடையாளம் காட்டுபவை.

மனிதப் பிறவியான இவர் தன்னையே கடவுளாக, கடவுளின் அவதாரமாக அறிவித்துக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இந்தியாவில்; இருந்து மட்டுமல்ல உலகின் 165 நாடுகளில் தனக்கு பக்தர்கள் உள்ளனர் என்று அவர் பெருமையுடன் கூறிக் கொள்கிறார்.

ஆனால் பி.பி.சியின் உலகக் குழு ஒன்று இந்தியாவில் இருந்து கலிபோர்னி யாவுக்குப் பயணம் செய்தபோது, தங்களின் வாழ்வையே பாபா கெடுத்து விட்டதாக அவரின் முன்னாள் பக்தர்கள் பலர் தெரிவித்தனர்.

பாபா தன்னைப் பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறும் முன்னாள் பக்தர் அலயா கூறினார்: “நான் கூறுவதைப் போல நீ செய்யாவிட் டால், உனது வாழ்வே துன்பம் நிறைந்ததாக ஆகிவிடும் என்று அவர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது.” தாங்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பதை அலயாவின் குடும்பத்தினரே வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

இந்தியாவில் அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாகவே தோன்றுவதால், அவர்களைப் பற்றி பல கேள்விகள் எழுகின்றன. சாயிபாபாவின் காலடியில் விழுந்து கிடப்பதையே இவர்கள் விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். உயர் இடங்களில் பாபாவுக்கு நண்பர்கள் உள்ளதால், அவரது புகழும் பெருமையும் மங்காது இருக்கிறது.” என்று பி.பி.சி தெரிவிக்கிறது. மர்ம சாமியார் (The Secret Swami) என்னும் பி.பி.சி.யின் படம் 2004 ஜூன் மாதத்திலிருந்து தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…