முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாய்பாபாவும், வயதான ஹீரோக்களும்

ஏற்கனவே பார்த்த பதிவுகளில் உள்ள படங்களில் சாய்பாபா சிக்கியதைப் போல இப்போதும் சிக்குவார் என எதிர்பார்த்து நம்முடைய நண்பர்கள் யாரும் சாகச வேலைகளில் இறங்க முடியாது. பாபா சுதாரித்துக் கொண்டார். வருவோர், போவோர் எல்லாம் கையடக்க கேமரா வைத்துக் கொண்டு கண்ட கண்ட ஆங்கிள்களில் படமெடுத்து தனது 'கையடக்க' சித்து விளையாட்டுக்களை அம்பலப்படுத்த ஆரம்பித்தால் என்னாவது.
சினிமாவின் நுணுக்கம் தெரிந்த நமது ஹீரோக்கள் தான் எந்த ஆங்கிளில் தன்னை எடுக்கக் கூடாது என்று முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுவார்கள். எடுத்துக்காட்டாக , லோ ஆங்கிளில் இருந்து எடுத்தால், தாடையின் கீழ் சதை தொங்குவது துண்டாக தெரியும். அதனால் ஆரம்ப காலங்களில் வில்லனுடன் சண்டையிடும் காட்சிகளிலும், அறிவுரை வசனங்கள் பேசும்போதும் விரும்பிக்கேட்ட லோஆங்கிளை, வயதான பின்னாளில் அவர்களே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

இது நிற்க....
லோ ஆங்கிள் என்பது எடுக்கப்படும் பிம்பத்தை உயர்த்திக்காட்டப் பயன்படும் ஆங்கிளாகும். இதனால் அவ்வளவு பெரிய திரையில் நடிகரின் பிம்பம் தெரியும் போது, அதைப் பார்க்கும் நமக்கு, அவர் மிகப் பெரியவர், பலம் வாய்ந்தவர் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும். கீழ் இருந்து மேல்நோக்கி பார்க்கும்போது நீங்கள் தாழ்ந்தவராகவும், அவர் உயர்ந்தவராகவும் தெரிவதுபோல. அதுவே நீங்கள் மேலிருந்து கீழே பார்த்தால், பார்க்கப்படுபவர் நீங்கள் உயர்ந்தவராகவும் அவர் தாழ்ந்தவராகவும் உங்களுக்குத் தோன்றும். அது ஹை ஆங்கிள்.
நோஞ்சானான காமெடி ஹீரோவை, தெரு ரவுடி புரட்டி எடுப்பது போல் காட்சி வந்தால், ஹீரோவுக்கு, ஹை ஆங்கிளும், வில்லனுக்கு லோ ஆங்கிளும் வைத்து, பல்லை நறநற என்று கடிப்பதுபோல் காட்சி அமைப்பார்கள். பாலியல் வன்முறைக் காட்சிகளிலும் இத்தகைய வித்தியாசத்தை நீங்கள் பார்க்கமுடியும். (எஸ்.பி.முத்துராமன், விசு போன்றோரின் படங்களில் இவை அதிக அளவில் இடம்பெற்றிருக்கும்)

ஆக,
இந்த காரணங்களால் தான் சாயி இளைஞர்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மிக முக்கியமான குறிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
"மொபைல் போன், கேமரா மற்றும் வீடியோ கேமரா எடுத்து வருவதை தவிர்க்கவும்." இப்படி தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் எடுக்கும் வீடியோக்களிலும் கூட எந்த ஆங்கிளில் எடுக்க வேண்டும்; எந்த ஆங்கிளில் எடுக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்க தனியாக திரைமொழி தெரிந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கேள்வி!

பாபாவுக்கு இன்னொரு யோசனை:
கையடக்க கேமரா தான் வந்துவிட்டதே 'சோனி' வெளியிட்டுள்ள 'சைபர் ஷாட் கேமரா' வையெல்லாம் இனிமேல் 'try' செய்யலாமே!

நேற்றைய விடுதலை இதழில் முன்பு வெளிவந்த 'உண்மை' கட்டுரை....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…