முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமிச செண்டிமெண்ட்!

மத செண்டிமெண்ட் கருதி, மாமிசம் விற்பதை ரிலையன்ஸ் நிறுத்திக் கொள்கிறதாம்.நாடு எங்க போய்க்கிட்டிருக்குன்னு நாங்களும் பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்...

நீ புலால் விற்கிறதை நிறுத்துறது மட்டுமில்ல, உன்னுடைய எல்லா சில்லறைக் கடைகளையும் நிறுத்தணும்..னு தான் நானும் நினைக்கிறேன்.

ஆனால், அதை நிறுத்துறதுக்கு நீ ஒரு காரணம் சொல்றபாரு...
.... ....
அதைத் தான் என்னால தாங்க முடியல!

எந்த மத செண்டிமெண்ட் கருதி மாமிசம் விற்கலையாம்? இந்து மதமா?

அதில எத்தனை சதவீதம் பேர் மாமிசம் சாப்பிடாதவங்க? அப்போ மாமிசம் சாப்பிடுறவனெல்லாம் இந்து கிடையாதா? (ஆமாம்னு சொல்லிடுங்கடா நல்லதா போச்சு)
இல்ல, மாமிசம் சாப்பிடுறவனுக்கு செண்டிமெண்ட் இல்லையா? அவனெல்லாம் இன்னும் வெட்கங்கெட்டுப் போய் உன் கடைக்கு சாமான் வாங்க வரலாமா?அதென்னடா எத்திகல் மூவ்? அப்போ, எங்களுக்கெல்லாம் எதிக்ஸ் இல்லையா? பார்ப்பான் சாப்பிடல... உயர்ஜாதிக்காரன் சாப்பிடல.... அதைத் தாண்டி குஜராத்தியும், ஜெயினும் சாப்பிடல... அதுக்காகத் தான் நிறுத்துறோம்னு சொல்றான்னா.... குஜராத் மாடலுக்கு இந்தியா வரணுமாம்ல... எல்லா பயலும் மாமிசம் சாப்பிடுறதை நிறுத்திடுங்கன்னு சொல்றாரு முகேஷு...

ஆடத் தெரியாத நாட்டியக்காரி தெருக் கோணல்னு சொன்ன கதையா...
சரக்கு விற்கலைன்னு கடையைக் கட்டுற பய... எத்திக்கல் மூவ்... மத செண்டிமெண்ட்டுன்னு கதையா கட்டுற!

குஜராத்திகள் மட்டும் பொருள் வாங்குனா போதும்னா, அப்புறம் என்னா இதுக்கு எங்க கிட்ட வந்த கடை விரிக்கிற?

ரிலையன்ஸ் பருப்பு நல்லாருக்கு... ரிலையன்ஸ் கத்திரிக்காய் நல்லாருக்கு...ன்னு சொல்லி பெருங்கடைகளில் மட்டும் பொருளை வாங்கி மற்ற சில்லறைக் கடைகளை அழிக்கும்
அருமை நடுத்தர வர்க்கமே,
நாளைக்கு அவன் எதை எத்திகல்-னு சொல்றானோ,
அதைத் தான் நீங்க சாப்பிடணும். வேற பொருள் வாங்க கடையிருக்காது...

உச்சநீதிமன்றம் சொல்றமாதிரி தான் உறவு கொள்ளணும். அம்பானி சொல்ற மாதிரி தான் திங்கணுமா? வெளங்கும் நாடு!

-------- ------------ ----------
கோழிக் குழம்பை விட அதிகமாகக் கொதித்தபடி முகநூலில் எழுதியதும், இன்னும் அடங்காத கொதிப்பில் எழுதியதும்... 
சும்மாவா... திங்குற அயிட்டமுங்க!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
போடா புடுங்கி! போன வருஷம் சரியான லாபம். எதுவுமே புரியாம அல்லோலுயா கும்பல் நீயெல்லாம்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பாய் மக்கள் கூட போட்டி போட முடியாமல் அம்பானியே கழண்டுகிட்டாரு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…