தண்ணியடிக்கிறவனைக் கூட மன்னிச்சிடலாம். தக்காளி... புகைப்பிடிக்கிறவனை மன்னிக்கவே முடியாது. தண்ணியடிக்கிறதனால் ஒண்ணு அவன் சாவான், இன்னொன்னு அவன் குடும்பம் அழியும். தறுதலையை அப்படியே விட்டுக்கிட்டிருக்கிறதுக்கு அல்லது பொறுத்துக்கிட்டிருக்கிறதுக்கு அது தண்டனைன்னு கூட சொல்லிறலாம். (குடிச்சுப்புட்டி வண்டி ஓட்டி சாகிறதை விட, சாகடிக்கிறது தான் என்னைப் பொறுத்தவரை மோசம்.)
ஆனால் இந்த புகைக் கூட்டம் இருக்கு பாருங்க.... தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்து... இவன் பாதி உறிஞ்சி, மிச்சத்தை சுத்தியிருக்கிறவனுக்கெல்லாம் ஊதிவிட்டு... என்னமோ பெரிய சாதிச்சவன் மாதிரி ஒரு லுக்கு வேற கொடுப்பானுங்க... ங்கொய்யால... அப்படியே சிகரெட்டை திருப்பி வச்சு வாய்க்குள்ள அமுக்கிவிட்றலாம்னு தோணும்... அதிலேயும் டாய்லெட்டுக்குள்ள பீடி, சிகரெட், சுருட்டு குடிக்கிறங்களையெல்லாம்..... நற... நற... அப்படியே அங்கேயே அமுக்கிடலாம். காத்தே வெளியில போகாத இடத்தில ஊதி, உள்ள போறவனையெல்லாம் சாவடிப்பானுங்க...
பேருந்து நிறுத்தத்தில, பேருந்துக்குள்ள, தொடர்வண்டியில, சாப்பிடுற, டீ குடிக்கிற இடத்துக்கு பக்கத்தில, பொது இடங்களில ஊதி ஊதி உசிரை எடுக்கிறவங்களையெல்லாம் அங்கேயே மானங் கெடப் பேசி ஊதுறதை நிறுத்த சொல்லிடணும். பார் வைத்திருக்கும் பெரிய ஹோட்டல்களில் ஸ்மோக்கிங் ஹப் என தனியாக இடம் வைத்து ஒதுக்கிவிட்டுடறாய்ங்க போல! முக்கியமான திரையரங்கங்களில் இப்போது இந்நிலை தடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் நிம்மதியா இடைவேளைகளில் வெளியில போக முடியுது. இல்லைன்னா ஒரே புகை மூட்டமாத் தான் இருக்கும். இப்போ வாசல்லயே வளைச்சுப் புடிச்சு குப்பைல தூக்கிப் போட வச்சிடறாங்க... இந்த நிலை அனைத்து திரையரங்கத்திலயும் வரணும். பொது இடங்களிலும் வரணும். வீடுகளுக்குள்ளேயும் வரணும்.
"பகையைவிட பயங்கரமானது புகை"
திருவாரூர் வி.மணி நல்ல கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
அவசியம் படிங்க: http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=694

கருத்துகள்