முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசிஸ்டெண்ட் டைரக்டருகளா... நோட் பண்ணுங்கடா... நோட் பண்ணுங்கடா...

திரைப்படம் என்பது காட்சிக்குக் காட்சி தொடர்பிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஏமாற்று வித்தையின் தொகுப்பு தான். ஒரே காட்சிக்கான அடுத்தடுத்த காட்சித் துணுக்குகள் (Shots) சில நாட்கள்... ஏன் பல மாதங்கள் கழித்துக் கூட எடுக்கப்படும். ஏ.வி.எம் செட்டுக்குள்ளிருந்து கதவைத் திறந்தால் அமெரிக்காவோ, அண்டார்டிகாவோ கூட தெரியும். இது தான் சினிமா.

நம்பமுடியாத பல விசயங்களைக் கோர்த்துத் தான் உருவாக்குவார்கள். அவை பற்றி யோசிக்க நேரம் தராமல் அடுத்தடுத்த காட்சிகளுக்குள் பார்வையாளனை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால், இது எதுவும் பார்வையாளர்களை உறுத்தாதபடி உருவாக்குவதில் தான் திரைப்படத் துறையினரின் உழைப்பு இருக்கிறது. இவை அதிகம் உறுத்தத் தொடங்கினால் படத்தின் ஒவ்வொரு நொடியிலும் திரைக்குப் பின்னாலான குறைகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒரு காட்சி எடுக்கும்போது இருந்த துணை நடிகர்கள் இல்லாமல் இருக்கலாம்; கால நிலை மாறிப்போகலாம்; திரையில் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது பெரும்பாலானவை கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் பார்த்தாலோ, கணினி உதவி கொண்டு முன்னுக்குப் பின் ஓட்டிப் பார்த்தாலோ நிச்சயம் பல விசயங்கள் அகப்பட்டுக் கொள்ளும்.

இதில் பொதுவாக தொடர்ச்சி (Continuity) தான் பிரச்சினையாக இருக்கும். அது தான் முதன்மை உதவி இயக்குநர்களின் பணி. கொஞ்சம் அவர்கள் அசட்டையாக இருந்துவிட்டாலோ அல்லது உதவி இயக்குநர்களே மாறியிருந்தாலோ ஆட்டம் காலி தான்.

நாமளும் அப்பப்போ... ’பாருப்பா... இது டூப்பு!’, ‘இங்க பாரு அப்பவே வந்தது வேற ஒருத்தன்; இது வேற ஒருத்தன்’, ‘நல்லா புளுகுறாய்ங்க பாரு’ என்று சில பல குறைகளை அடையாளம் கண்டு கிண்டலடித்திருப்போம்..

ஆனா ஒரு குரூப் இதையே முழுசா உட்கார்ந்து ஆராய்ஞ்சிருப்பாய்ங்க போலிருக்கு... ஃப்ரேம் பை ஃப்ரேம் போட்டு உதவி இயக்குநர்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்காய்ங்க... அதிலிருந்து சில உங்களுக்காக...

இதில் இயக்குநர்கள் தெரிந்தே அடித்த பீலாக்கள்... உதவி இயக்குநர்கள் தெரியாமல் செய்த தொடர்பின்மை... காட்சியில் தெளிவாகத் தெரியாது என்று நினைத்து ஒளிப்பதிவாளர்கள் நிரப்பிய அவசரக் கோல frame fill upகள், frame beautyக்கான முயற்சிகள், கத்திரிக்கோல் கையிலிருந்தும் படத் தொகுப்பாளர் வெட்டாமல் விட்ட உதிரிகள், உடை, சிகை அலங்காரம், ஒப்பனை, கலை, நடனம், சண்டை, கால - தேச- வர்த்தமானங்கள் என்று எல்லாத்திலும் நடந்த சொதப்பல்களையெல்லாம் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

இதில் இன்னார் - இனியர் என்றெல்லாம் இல்லை; இந்தியா- தமிழ்நாடு என்று தானும் இல்லை... உலகப்படங்கள், ஹாலிவுட் ஹிட்டுகள் என்று எல்லாவற்றிலும் இதே வேலையாக இருந்திருப்பார்கள் போல! இருந்தாலும் இவர்களும் கோட்டை விட்ட ஒன்று உண்டு... அது என்ன என்று பிறகு சொல்கிறேன். அதைச் சொல்வதற்கு எனக்கு அவசியமும், பொறுப்பும் கடமையும் (!) இருக்கிறது. இப்போது மற்ற படங்களைப் பாருங்கள். (படங்களின் அகலம் அதிகமாகவும் பக்கத்தின் அகலம் குறைவாகவும் இருப்பதால் முழுமையாகப் பார்க்க முடியாமல் போகலாம். ஏதேனும் ஒரு படத்தை சொடுக்கினால் தொகுப்பு album போல பார்க்கலாம்.)

https://www.facebook.com/MoviesFunnyMistakes
ஷ்ஷ்ஷ்ஷங்கர் சார்ர்ர்

தமிழில் மட்டுமல்ல...


(பாக் மில்கா பாக் 1950களில் நிகழும் கதை. இதில் எப்படி செல் கோபுரம்?)ஆப்பிளா? பிளாக்பெர்ரியா?

இந்தியாவில் மட்டுமல்ல...

ஹாலிவுட்டிலும்...


டைட்டானிக்கிலும்...


இன்னும் பெரும்பட்டியல் அவர்களிடமும் இருக்கிறது, நம்மிடமும் இருக்கும்... இனி பெருகும்!

சரி, இவர்கள் கோட்டை விட்டது என்ன என்று சொல்வதாகச் சொன்னேனே! அது பின் வரும் காட்சி தான். வாரணம் ஆயிரம் படத்தில் வண்டியில் ஏறும்போது இல்லாத கித்தார், உள்ளே மாயமாக வந்தது எப்படி என்பது தான் இவர்களின் கேள்வி!நியாயம் தானே! இதில் என்ன தவறாகக் கேட்டிருக்கிறார்கள் - என்று கேட்கத் தோன்றும். அதற்கு முன் இந்தக் காட்சியையும் பார்த்துவிடுங்கள்.
http://www.youtube.com/watch?v=KsCTk3H9YWA#t=2241

ஆச்சா.... வண்டியில் ஏற ஓடிவரும்போதே ”பேக் உள்ளே வைக்கப்பட்டிருக்கிறது” என்று நண்பர்கள் கூவிக் கொண்டே வருகிறார்கள். ஏனெனில் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்புபவர் அல்லவா? அதனால் காட்சியை மட்டும் அல்லாமல் வசனத்தையும் கவனிங்க பாஸ் என்று சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்..

”இதில் மட்டும் உனக்கு ஏன் அக்கறை? மற்ற படங்களில் இல்லாத அக்கறை?” என்று கேட்பீர்கள். என் விளக்கத்தில் சுயநலமும் அடங்கியிருக்கிறது. காரணம்... டிரெயின் ஏறும் காட்சியில் இல்லை என்றாலும், வண்டிக்குள் இருக்கும் காட்சியில் நான் இருக்கிறேன். எங்கே என்று கேட்பீர்கள். சூர்யாவுக்கு மேலே இருக்கும் upper berthஇல் படுத்திருப்பவன் நான் தான். உதவி இயக்குநராக முதல் படத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்து, இந்தக் காட்சியை படமாக்கும் போதே அருகிலிருந்து ரசித்தவன் நான் - என்பதால் தான் அந்த அக்கறை! :)

காட்சியை கவனித்தீர்களா... எங்கள் குழுவில் பிழை இல்லையே!

ரைட்... இப்போது மற்ற உதவி இயக்குநர்களுக்கு....

”அட. அசிஸ்டெண்ட் டைரக்டருகளா... நோட் பண்ணுங்கடா... நோட் பண்ணுங்கடா.... ”

கருத்துகள்

இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
ரசிக்கவைத்த நுணுக்கமான கவனிப்புகள்..!
அதிஷா இவ்வாறு கூறியுள்ளார்…
குட் ஒன் ப்ரோ
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
//Not sure anyone noticed this, in Mouna Raagam Movie. At First Night scene they used the flower decaration on bed. It seems it was taken from someone's head, you can see hairpin, hairs on that.// - நண்பர் ஒருவர் இதனையும் குற்ப்பிட்டு அனுப்பியிருக்கிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…