முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கட்டிய வீடுகளே கல்லறைகளாய்...

“வாழ்க்கை இரும்படிக்கும்போது கலை பூப்பறிக்கலாமா?” என்ற தலைப்பில்
இம்மாத விகடன் ஒன்றில் (11.12.13) கண்ட ஒரு செய்தி. கலையை மனிதநேயத்திற்குப் பயன்படுத்தும் விதமாக, நிகழ்காலத்தின் மக்கள் பிரச்சினைகளையும் கலை மூலமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் உத்தர்காண்ட் பேரழிவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுதி, அதனை ஸ்ரீநிதி கார்த்திக் அவர்கள் பரதநாட்டியமாக அரங்கேற்றவுள்ளார். ’வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது கலை பூப்பறிக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு தங்கள் படைப்பை அறிமுகப்படுத்தியிருந்தனர். 


இதைப் படித்ததும் என் நினைவுச் சக்கரம் சுழன்று சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் என்னை இழுத்துச் சென்றது. 2001 ஜனவரி 26 - பூஜ் நகரத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் பல்லாயிரம் பேரை பலிகொண்டது. நாடெங்கும் மனிதநேய உணர்வோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டினர். அதன் ஒரு பகுதியாக, காரைக்குடியில் குஜராத் மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அந்த காலகட்டத்தில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்டிருந்தது எங்கள் குழு தான். அதெல்லாம் பிறகொரு சூழலில் பதிவேன். இருக்கட்டும். இப்போதைக்கு குஜராத் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு வருகிறேன். 

நிதி திரட்டும் நிகழ்ச்சி காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அப்போது முனைவர் சரளா அவர்களின் முதன்மை மாணவிகளில் ஒருவராக இருந்த என் அருமைத் தோழி வீர.தேவியின் நிகழ்ச்சியும் இருந்தது. அதை வழமையான ஒன்றாகச் செய்யாமல் பின்னணியில் இசை ஒலிக்கவிட்டு (உபயம்: ஏ.ஆர்.ரகுமான், இசைஞானி இளையராஜா), நான் எழுதிய வரிகளை நானே இசைக்கேற்ப வாசிக்க, மேடையில் வீர.தேவியின் பரத நாட்டியம். அரங்கம் அள்ளிய கைதட்டல், உள்ளூர் தொலைக்காட்சியின் நேரலை, பாராட்டு என நிறைவாக அமைந்தது. எங்கள் கல்லூரியின் பங்களிப்பாக நாங்கள் செய்தது அது. அந்த வரிகளை கிழிந்து போகும் நிலையிலிருக்கும் காகிதத்திலிருந்து பதிவுக்காக இங்கே இடுகிறேன்.

சரித்திர இடம்பெற்ற‌
கூர்ச்சர பூமி...
தனக்கு
நேரப்போகும்
கோரத்தை அறியாமல்
இயல்பாக‌
இயங்கிக் கொண்டிருந்த நிலை...

பத்து விநாடி பயங்கரம்..
பதறினர்... சிதறினர்...

பயந்து ஓடப் பார்த்தவர்களை
பாய்ந்து அமுக்கின‌
பக்கத்துக் கட்டிடங்கள்!


இயற்கை ஆடிய 
ஆட்டத்தில்
இடிந்து விழுந்தது பூமி!

தன்னுடைய பிள்ளைகளை 
தாயே விழுங்கிக் கொண்ட‌
கொடூரம் நிகழ்ந்திருக்கிறது
குஜராத்தில்.

பூ‍க்கம்பம்
காற்றிலாடிய பூமியில்
பூகம்பம் சற்று நேரம்
விளையாடிப் பார்த்தது.

கட்டிய வீடுகளே
கல்லறைகளாய்
மாறிப் போயிருக்கின்றன.சத்தம் எழுப்பக் கூட‌
வழியின்றி
செத்துக் கொண்டிருந்த மக்கள்!

கட்டிய வீடு காணாமல் போனதால்
சித்தம் கலங்கிய தாத்தா!

பத்து விநாடியில்
பரதேசிகளாகிப் போன‌
பணக்காரர்கள்!

பால் குடித்த குழந்தை ஒன்று
செத்துவிட்ட தாயின்
இரத்தம் குடித்த 
கொடுமை!

குழந்தை 
தாய்ப்பால் குடிப்பது வழமை.
செத்துவிட்ட தாயின்
இரத்தம் குடித்ததே...
எத்தனைக் கொடுமை!

அழுத கண் போல
இருந்த குஜராத்..
இப்போது 
ஏந்தும் கை போல் 
காத்திருக்கிறது.*


சண்டையிட்டுக் கொண்டிருந்த‌
பாகிஸ்தானும்
சமாதானப் பறவை
உதவி விமான வடிவில்
பறக்கவிட்டிருக்கிறது.

தேவைப்பட்ட 
இந்து உடல்களுக்கு
ரத்தம் வழங்க 
இஸ்லாமிய‌
உடல் சித்தமாய் காத்திருந்தது.
மன்னிக்கவும்...
அது 
மனித இரத்தமாகத் தான்
போய்ச் சேர்ந்துள்ளது.

பூகம்பத்தில் இறந்தது
மனிதர்கள் மட்டும் அல்ல...
மதமும் கூட.

மாண்டவர்களுக்கு ஒரு துளி
மீண்டவர்களுக்குப் புது வழி! ‍இது 
உலகோர் எழுப்பிய ஒலி

வெல்லும் மனிதநேயம்
இன்றும்... 
நாளையும்...
என்றும்...

* அப்போது ஆனந்த விகடனில் வெளிவந்த இரண்டு கார்ட்டூன்களை அடிப்படையாகக் கொண்டது.


இதே போல் 2004 சுனாமியை ஒட்டிய நிகழ்ச்சியிலும் தேவியின் முயற்சியில் இன்னொரு நாட்டியமும் நடந்தது. அதன் வரிகள் இங்கே!

கருத்துகள்

முனைவர். வா.நேரு இவ்வாறு கூறியுள்ளார்…
இன்றைக்கும் வரிகள், வலி கொடுக்கும் வ்ரிகளாய், இயற்கையின் கொடுமையை இயம்பும் வரிகளாய் அமைந்துள்ளது. தொடர்ந்து பதியுங்கள். வாழ்த்துக்கள். முனைவர் வா, நேரு
Bagawanjee KA இவ்வாறு கூறியுள்ளார்…
பூகம்பத்தை எழுத்தில் வடித்து விட்டீர்கள் ,பாராட்டுக்கள் !
thenaruvi இவ்வாறு கூறியுள்ளார்…
very nice..amazingly descriptiv

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…