சரியாக ஓராண்டாகிறது. விஜய் தொலைக்காட்சியின் 'நீயா? நானா?' விவாதத்திற்கு வந்த அழைப்புக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்கு வந்துவிடுங்கள் என்ற அழைப்போடு, எங்கள் அணியில் பேசத் தோழர்களையும் அழைத்துவருமாறு சொல்லியிருந்தார்கள். உடன் தோன்றிய சிலரில் 'மிதக்கும் வெளி' சுகுணா திவாகரும் ஒருவர். (அப்போது எனக்கு மிதக்கும் வெளியாக அறிமுகம் ஆகியிருக்கவில்லை.) தகவலைச் சொல்லி அழைத்தேன். தன் நண்பர் செந்தில் வந்திருப்பதாகவும், இணையத்தில் ப்ளாக் எழுதுகிற திராவிடத் தமிழர்கள் இன்றைக்கு மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் சந்திக்கவிருப்பதால் தான் அங்கே செல்வதாகவும் தெரிவித்தார். உடன் செந்திலின் எண் வாங்கிக் கொண்டேன். அவரிடம் பேசியபோதுதான், "திராவிட ராஸ்கல்கள் முன்னணி" என்று தாங்கள் இயங்கப் போவாதாக தெரிவித்தார். இணைய ஊடகம் நம் கையை விட்டுப் போய்விடுமோ என்று எண்ணியிருந்தவனுக்கு இப்படி ஒரு சந்திப்பு என்றதும் ஆனந்தம். அதிலும் சென்னை மட்டுமல்லாமல், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் வந்து சந்திக்கிறார்கள் என்றதும், பழைய பேனா நண்பர்கள் முறையின் நினைவு... மு...