தலைப்பைப் பார்த்ததும் சிலர் குதிக்கக்கூடும்...
"இது துவேஷம், அர்த்தமற்ற ஆவேசம், இதற்கும் பிராம்மானோத்தமர்களுக்கும் என்ன தொடர்பு? நகைத் தொழில் செய்வது எங்கள் குலத் தொழில் அல்லவே, லாபம் எங்களுக்கா வருகிறது???"
இப்படியெல்லாம் கேள்விகள் வரக்கூடும், அதனால் செய்தியைப் படித்துவிட்டு பிறகு குதிக்கவும்...
இந்த வருடம் அட்சய திருதியை ரெண்டு நாளாம்! ஒரே நாளில் ஒட்டுமொத்தக் கூட்டமும் வந்தால் சமாளிக்க முடியாது என்பதால், இரண்டு நாள் என்று ஆக்கிவிட்டார்கள்!
அடுத்த ஆண்டு ஆடித் தள்ளுபடி மாதிரி ஒரு மாதம் முழுக்க என்று அறிவித்தாலும் இந்த பேராசைக் கூட்டம் வரிந்து கட்டி வரிசையில் நிற்கத்தான் போகிறது. (என்ன ஆடியில் எது செய்தாலும் விளங்காது என்ற மூடத்தனத்தை ஆடித் தள்ளுபடி அடித்து உடைத்தது என்பது தான் ஒரு மகிழ்ச்சி!)
சரி,இதில் ஏன் பார்ப்பனர்களைக் குறை சொல்கிறாய் என்பவர்களுக்கு ஒரு செய்தி:
இன்று மதியம் சன் தொலைக்காட்சியில் (19.04.07) அட்சய திருதியை பற்றிக் கருத்துச் சொன்ன ஜோதிடத்திலகம் ஒருவர், "இந்த ஆண்டு அட்சய திருதியை கரிநாளில் வருகிறது; அதனால் அது தோஷம். அந்தப் பிரச்சினை தீர வேண்டுமானால் பிராமணர்களுக்கும் தானம் செய்துதான் தீர்க்க வேண்டும்" என்று யோச'னாய்' சொல்லி இருக்கிறார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
இப்பச் சொல்லும்வோய் தலைப்பு தப்பா?
கருத்துகள்
உலகத்தில நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் (சன் தொலைக்காட்சி) கிடைச்சுடுதே .... எப்படி?" ன்னு 'மகாநதி' படத்தில கமல் அழுவார். அது மாதிரிதான் இருக்கு!
அட்சய திருதியை. கூட்டு களவாணித்துவம்!
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த (tamil) நாட்டிலே!