"என்னத்த சொல்றது? கலி முத்திடுத்து... பாருங்கோ இந்தப் புள்ளாண்டானை எல்லாரும் என்னமா நம்பிண்டிருந்தா.... இப்போ என்னடான்னா... இப்படி நடந்திண்டிருக்கானே.. ஹிந்து மதத்துக்கே அவமானம். நம்ம மதத்தையே அசிங்கப்படுத்துற இந்த மாதிரி ஆசாமிகளையெல்லாம் என்ன பண்றதுன்னே தெரியலை... ஈஸ்வரா?" என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை நோக்கி தொழுகிறார்களாம்.
அருணாசலேஸ்வரப் பெருமானின் அருள்பார்வை விழும் திருவண்ணாமலையில் தானே இத்தனையும் நடந்திருக்கிறது. அதைக் கண்டு கொள்ளாதவனிடம் இதைக் கேட்கலாமா? அதெப்படி அவர் கண்டு கொள்வார்? அங்கே நடந்தது சிவலிங்க பூஜைதானே!
இதுவாவது அருணாசலேஸ்வரரின் பேரில் அவரது ஊர்க்காரரால் நடந்தது. கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாம்.
இன்னொரு ஈஸ்வரரான மச்சேஸ்வரரின் சன்னதியிலேயே தேவநாத லீலைகள் நடந்தபோதும் அல்லவா அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். பிறகு அவரிடம் முறையிட்டு என்ன பயன்?
இங்கேயெல்லாம் கடவுளின் கண்கள் வேலை செய்தனவோ இல்லையோ, கேமராவின் கண்கள் ஒழுங்காக வேலை செய்திருக்கின்றன என்பதை நம்மால் தெளிவாகப் (:P) பார்க்க முடிகிறது.
எல்லா படங்களையும் இவர்களே வாங்கி விநியோகிக்கிறார்கள் என்று அங்கலாய்ப்போர் வாய்க்கு அவலாக, நித்தியானந்தாவின் லீலா விநோதக் காட்சிகளும் வந்துசேர, அதையும் தீராத விளையாட்டுப் பிள்ளை விளம்பரத்தை விடவும், அதிக விளம்பரங்களுடன் விநியோகித்தது. அந்த தியான பீட விளையாட்டும் சூப்பர் ஹிட்டாம்!
2-ஆம் தேதி இரவு முதல் நேற்று வரை, ஏன் இன்றும் கூட தொடர்ந்து கலக்கி வருகிறார் நித்தி. ரஞ்சிதாவா? ராகசுதாவா? இல்லை வேறு 'ஆர்' எழுத்து நடிகையா என்றெல்லாம் நேற்று முன்னிரவு இருந்த குழப்பத்தை நக்கீரன் படம் போட்டு தீர்க்க, 'போதாது... சன் டி.வி-யின் ஒரு நாள் சஸ்பென்சை பார்த்துத் தான் தீர்த்துக் கொள்வோம்' என்று விரதமிருந்த பலருக்கு அதையும் சன் குழுமம் சொன்ன பின்னர் தான் ஓய்ந்தது.
நேற்று காலை முதல், பதிவர்கள் மடை திறந்த வெள்ளமென, போட்ட பதிவுகளில் எண்ணற்ற பஞ்ச் டயலாக்குகள்! எதைத் திறந்தால்... எது வரும்? என்ற எல்லா permutation, combination களும் முடிந்து விட்டதாகக் கேள்வி. ஒரு வழியாக நித்தி துவைத்துக் காயப்போடப்பட்டார். இதில் 'சாறு' பிழிந்தவர்கள் பட்டியல் தனி. அண்ணாச்சியை தனது வடிவமைப்பையே மாற்றிக் கொள்ள வைத்துவிட்டார்கள்.
அது சரி, சாரு யாரிடமும் பந்தயம் கட்டியிருந்தாரா என்ன? பாவம், பாதி மீசையோடு காட்சி தருகிறாரே! மீதப் பாதியில் மீசை இருக்கிறதா இல்லையா? அல்லது அது மண் ஒட்டிய பாதியா? என்றெல்லாம் எழும் கேள்விகளுக்கு.... (அட... எனக்கில்லீங்க) விரைவில் பதில் கிடைக்கக்கூடும்.
இப்போதைக்கு, ஒரு நாள் பதில் போடாமைக்கு, தனது மனைவியின் உயிரை மீட்கும் பொறுப்பே காரணம் என்று தெளிவுறுத்தியிருக்கிறார். இருந்தாலும், புற்று நோய் தீர்த்த கதையைப் பின்(நவீன!%*#)வருமாறு நிறுவுகிறார்.
(நாங்கதான் சொல்றோம்ல... மீசைல மண் ஒட்டலை.. மண் ஒட்டலை..ன்னு!
சார் அப்ப அந்த இன்னொரு பக்க மீசை....?
யோவ் விடமாட்டீங்களா?)
இன்னொரு பக்கம், என்ன சொல்வதென்று தெரியாமல், "ஊடக சண்டியர்த்தனம்" என்று சன் டி.வி.-யின் மீது வள்ளென்று விழுந்தவர்களும், மனித உரிமை மீறல் என்று கண்டனம் போட்டவர்களும் "பந்தை உதைக்க முடியாவிட்டாலும், காலையாவது உதைப்போம்" என்று உதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காமெடி பீஸ் ஜெயமோகனோ, " திட்டமிட்ட சிறுமைப்படுத்தல்", "ஊடகப் படையெடுப்பு", "ஊடக மோசடி" என்றெல்லாம் பசப்பி காவி உடைக்கும் இந்து
ஞான மரபுக்கும் இன்னும் மகத்துவம் இருப்பதாக பக்கா 'ஆர்.எஸ்.எஸ். பிராண்டு கதை'த்துக் கொண்டிருக்க, ருத்ர தாண்டவம் எடுத்து பீஸ்பீஸாக்கிவிட்டார் மருத்துவர் ருத்ரன்.
எத்தனை சுட்டிகள் தான் கொடுப்பது...? ஒவ்வொருவரின் பதிவிலும் ஒவ்வொரு பஞ்ச்... வினவு, மாதவராஜ், மதிமாறன், அக்னிப்பார்வை, தமிழ்ஓவியா என்று எத்தனை window-களில் எத்தனை tab-கள் திறந்து வைத்தாலும் பற்றாத அளவுக்கு பதிவுகள்.
சரி, இத்தனைக்கும் பிறகு நாம் என்னதான் எழுதுவது? இப்படிப்பட்ட நேரங்களில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் ஏமாந்தவர்கள் அதை உணர்ந்திருக்கும் நேரத்தில் அவர்களிடம் போய் 'நல்லா ஏமாந்தாயா?' என்று கேட்காமல் சிந்திக்க கொஞ்சம் அவகாசம் தரலாம் என்று தான் முதலில் நினைத்தேன். செய்தி வந்த சில நிமிடங்களில், gmail, facebook என எல்லாவற்றிலும் status message update செய்ததும், அண்ணன் உண்மைத்தமிழன் வந்து, "சான்ஸ் கிடைச்சவுடனே போட்டுத் தாக்குற..?" என்று வேறு கேட்டுவிட்டுப் போய்விட்டார். "உங்களுக்குன்னு வந்து மாட்றாய்ங்க சார்" என்றார் புரோட்டா கடைக்காரர். நாம் சான்ஸ் கிடைத்தால் மட்டுமல்ல.. எப்போதுமே போட்டுத் தாக்குவபவர்கள் என்பதால் வேடிக்கை மட்டும் பார்த்து வந்தேன்.
ஆனால் அந்த அவகாசத்தில், நம்பிக்கையின்மையிலிருந்து விடுபட்டு, அமைதி தேட இன்னொருவனிடம் கிளம்பிவிட்டால் என்ன செய்வது? அப்படி மக்கள் மயங்கிவிடாமல் இருக்கவே பல முனைத் தாக்குதல்கள் நண்பர்களால் நடத்தப்பெற்று, முற்றிலும் அந்த மாயை உடைக்கப்பட்டிருக்கிறது.
அதுவரை மகிழ்ச்சியே!
எனினும் சில கேள்விகளும், கருத்துகளும் இருக்கவே செய்கின்றன.
இந்தப் பதிவு எழுதிக் கொண்டிருக்கும்போது நண்பன் சந்திரசேகர் வந்து
"நண்பா, 2 வத் பாகம் 3 வது பாகம் எல்லாம் இல்லியா?
" என்று கேட்டான்.

"ஒரு ஹீரோயின் போரடிக்கும் என்பதால், அடுத்தடுத்த பாகங்களில் வெவ்வேறு ஹீரொயின்கள் கூட வரலாம். ஏனெனில், கொழுத்துத் திரிந்தவன் ஒன்றோடு விட்டிருக்க நியாயமில்லை.
மேலும், ஹீரோ மாற வேண்டிய அவசியமில்லை. ஹீரோயின் மாற வேண்டும் என்பதுதானே சினிமா விதி" என்றேன். அதன் படி, அங்கே அடுத்தடுத்த பாகங்கள் வருகின்றனவோ இல்லையோ, எனது கேள்விகளோடு அடுத்த பாகத்தில் வருகிறேன். (தீராத விளையாட்டுப் பிள்ளை - Part 2) இது வேற.....!
கருத்துகள்
ரசித்த ஹரன்பிரசன்னவின் டிவிட்டர்:
நித்தியோடு சேர்ந்து சாரு சாமியார் ஆவர்னு பார்த்தா, சாருவோடு சேர்ந்து நித்தி இப்படியாயிட்டாரே?
குமுதம் உஷார ஒன்னுமே நடக்காத மாதிரி ரியக்ட் பண்றான்..
ஒரே டவுட், இப்ப இவர் ஜெயிலுக்கு போன கத திறந்து வைப்பாங்களா மூடி வைப்பாங்களா?
சுட்டி கொடுத்ததற்கு நன்றி நண்பரே....