முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுத்தைகளுக்கு ஒரு இடம் மட்டுமா?’

ணர்ச்சி வசப்படுவதற்கான நேரம் இதுவன்று! நாம் நம்பி ஒப்படைத்துக் கொண்ட தலைவர்களை இக்கட்டான சூழலுக்குத் தள்ளிவிடக் கூடாது. சராசரியான நேரத்தில், உடனிருப்பதும், உயர்த்திப் பேசுவதும் அனைவரும் செய்யக் கூடிய ஒன்று. கடுமையான நேரத்தில் நம்மை முழுமனதோடு ஒப்படைத்துக் கொள்ளுதலே சரியான போராளியின் முதல் கடமையாக இருக்கமுடியும்.

இவர் சரியில்லை; நம்பி ஏமாந்தோம்; அ்னைவரையும் போல் இவரும் விலைபோய்விட்டார் என்று பேசுவதற்கு பலர் வருவார்கள். அதில் அக்கறையாக நடிப்பவர்களும் இருப்பார்கள்; உண்மையில் அங்கலாய்ப்பவர்களும் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இப்போது முக்கியமல்ல. அவர்களின் கருத்தும் முக்கியமல்ல. நேரடியாக கரம்கோர்த்து களத்தில் நிற்கிறவர்கள் உறுதியுடன் - கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது!

தவறான முன்னுதாரணத்தைப் பரப்ப ஊடகங்களும், பற்றவைக்க உளவுத் துறையும் துடித்துக் கொண்டிருக்கின்றன. கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாத வண்ணம் நிலைமையை அணுக வேண்டியது அவசியம் தோழர்களே! இன்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவுக்குப் பின்னால் எவ்வளவோ இருக்கிறது. இனி அடைய வேண்டியதும் எவ்வளவோ இருக்கிறது.


ஆனால், நாம் அடைவதற்கான இலக்கும், அந்த இலக்குக்கு நம்மை இட்டுச் செல்வார் என்று நாம் நம்பியுள்ள தலைமையும் சரியென்ற உணர்வோடு அணிவகுத்தால் மட்டுமே அதை நோக்கிச் செல்லமுடியும். கண்கூடு இட்ட குதிரைகளாக இத்தகைய சமயங்களில் நாம் இருத்தல் வேண்டும். இல்லையெனில், கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில், சல்லடைபோட்டு சலிக்கப்பட்டவராக, சரியான நிதானமுள்ளவராக, இலக்குக்கு நம்ம இட்டுச் செல்லும் நோக்கம் மட்டுமே உள்ளவராக நமக்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த தலைமையை அவதூறு செய்வதற்கும், அந்த தலைமையை அழிப்பதற்கும் இத்தகைய சூழலைப் பலரும் பயன்படுத்திக் கொள்வர்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!
மார்ச் 7, 2014 நள்ளிரவு 12:13 மணி 

ஸ்வானின் சாதனையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று காட்டி பலத்தை நிரூபிப்பதே இப்போதைய கடமை!

அதற்கான களத்திற்கு சிதம்பரத்திற்கு வண்டி ஏறும் ஆளெல்லாம் கிளம்புங்க...

சும்மா, வாய்ப்புக் கிடைச்சா இந்தப் பக்கம் ஆதரிக்கிறது - இல்லைன்னா அந்தப் பக்கம் ஆதரிக்கிறது - வாய்ப்புக் கிடைச்சாஅண்ணன் திருமான்றது... இல்லைன்னா திருமா அடிமைன்றது!

பொறுத்துப் பொறுத்து இயக்கத்தை வளர்த்தவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். வெளியில் நின்று உதார் காட்டிக் கொண்டிருப்போரெல்லாம் ஓர் இயக்கத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் பிரச்சினைகள் புரியும்.

ஆதரவாளர்கள் என்போரெல்லாம் விருப்பப்பட்டால் (நான் உள்பட) ஒரு கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கலாம்; அதுவே அது சிக்கலில் இருக்கும்போது இவய்ங்க இப்படித் தான் என்று கேலி பேசலாம். அவங்களுக்கு பதில் இன்னொருவரை ஆதரிக்கலாம். பின்னர் பழைய படி கூடிக் கொ’ல்ல’லாம். ஆனால், இயக்கத்துக்குள் இருப்பவனுக்குத் தான் உண்மை நிலை தெரியும்; சூழல் தெரியும். அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை அந்தந்தத் தலைமை முடிவு செய்யும் போது படைவீரனைப் போல கடமையாற்றவும் தெரியும்.

நான் முன்பு எழுதியதும், இன்று எழுதுவதும் சிறுத்தைகளுக்கு மட்டுமே! வேண்டுமென்றால் மட்டும் புள்ளிகளை இட்டுக் கொள்பவர்களுக்கு அல்ல! (dot)
மார்ச் 7, 2014 மதியம் 1:56 மணி 

குறிப்பு:
திமுக கூட்டணியில் ‘சிறுத்தைகளுக்கு ஒரு இடம் மட்டுமா?’ என்று பலரும் புலம்பிக் கொண்டும், சீறிக் கொண்டும் இருந்த நேரத்தில் எழுதியது.

திமுக தொண்டர்கள், விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பலரின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுத்து, மார்ச் 8 அன்று விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு இடங்களை ஒதுக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். மகிழ்ச்சியடைந்தோம்.

ஒரு இடம் தான் என்றாலும், நிதானத்தால் தன் கொள்கை உறுதியைக் காட்டினார் திருமா. அதை மதித்தார் தலைவர் கலைஞர். என்றும் இது கொள்கைக் கூட்டணி என்பது உறுதிப்பட்டது.

“விடுதலை சிறுத்தைகளின் உணர்வுகளை புரிந்து கூடுதல் தொகுதி வழங்கிய கருணாநிதிக்கும், தொகுதி பங்கீட்டு குழுதலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கும் விடுதலை சிறுத்தைகளின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார் திருமா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…