முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை...

நான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை...
நீ(யே/யோ) என் பெண்ணுறுப்பிலிருந்து வந்தாய்!

I didn't come from your Rib!
You came from my vagina!


இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்திருந்த இந்தப் படமும் வாசகமும் வெகுவாகக் கவர்ந்தது. 

பைபிளின் புரட்டுக்கு மறுப்பு சொல்லும் பகுத்தறிவு வாதமாகவும், பெண்ணின் முதன்மையைக் காட்டுவதாகவும் இருந்த இந்த ஆங்கில வாசகத்தை தமிழில் எழுதலாமே என்று தொடங்கினேன். Vagina என்ற சொல்லுக்கு சரியான வார்த்தையைத் தேட விக்சனரி சென்றேன். வசைச் சொற்களாக பயன்படுத்தப்படும் சொற்களும் பட்டியலில் இடப்பட்டிருந்தது. அதற்கு என்ன விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் என்று படிக்க அதையும் சொடுக்கினேன். ஒலிப்பு பகுதியும் இருந்தது. இயக்கினேன். 

ஹுப்ப்ப்..

பலமுறை வசையாகக் கேட்ட வார்த்தை தான். ஆறாம் வகுப்பில் முதன்முதலாகக் கேட்டது தொடங்கி பலமுறை செவியில் விழுந்த கெட்ட வார்த்தை தான். எப்போதும் யாரையும் திட்டுவதென்றால் முதலில் பெண்ணை இழிவுபடுத்தும் சொற்கள் தானே சமூகத்தில் புழங்குகிறது; பால்வேற்பாடற்ற ஒரு திட்டுச் சொல் வேண்டும் என்று கூட முன்பு நிலைத் தகவல் போட்டிருக்கிறேன், ஆனாலும், ஒரு பெண் குரலில் அழுத்தந் திருத்தமாக அதைக் கேட்டதும் ஒரு கணம் அதிர்ந்து போனேன். 

கெட்டவார்த்தையைக் கூட ஆண்குரலில் கேட்டே பழகிப் போனதால், இந்த அதிர்ச்சி போலும்! இதற்கே இப்படி எனில், சமூகத்தின் ஒவ்வொரு பெரிய மாற்றத்திற்கும் இத்தகைய அதிர்வுகள் இயல்பானவை தானே! 

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மதவாதிகளுக்கு சவுக்கடி தரும் அருமையான பெண்ணுரிமை வாசகம் !
இப்படி நெற்றியடியாய் நம் ஊர் பெண்கள் முழங்குவது எப்போது ?
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மதவாதிகளுக்கு சவுக்கடி தரும் அருமையான பெண்ணுரிமை வாசகம் !
இப்படி நெற்றியடியாய் நம் ஊர் பெண்கள் முழங்குவது எப்போது ?
மலரின் நினைவுகள் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆயா Rocks...!!
காரிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
There's a difference between 'from' and 'through'. What the Bible says is from. It's just a belief like any other religious dogma. The placard should say through not from. Ain't I right?
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நிதர்சனமான உண்மை...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam