முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேங்காய் உரிக்கும் இயந்திரம்

எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரங்கள். இரண்டுமே நான் நட்டவை! ஒன்று எதிர்வீட்டு பாண்டியுடனும், மற்றொன்று பக்கத்துவீட்டு திலக்குடனும் கூட்டணி வைத்து நட்டது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைத் தொடும் எங்கள் வீட்டில் தென்னைக்கு எப்படியும் 18 வயதுக்குக் குறையாமல் இருக்கும். குறைந்த உயரத்திலேயே சுவையான இளநீரையும், தேவைப்படும்போது தேங்காய்களையும் தந்து கொண்டிருந்தன இரண்டு மரங்களும்! தொடக்கத்தில் அரிவாள் மூலம் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த எங்கள் அய்யா, பின்னர் தேங்காய் உரிப்பதற்கென்றே உள்ள கருவியை வாங்கி வந்தார். தொடக்கத்தில் ஆர்வத்துடன் அதில் தேங்காய்கள் உரிப்பதற்குத் தாவுவேன். எப்போதும் அய்யா தான் உரிப்பார். ஆனால், நாளடைவில் அதில் எனக்கு ஒருவித பயம் தோன்றத் தொடங்கியது. கையை வைத்து குத்தி, அழுத்தி, கம்பியை நிமிர்த்தினால், மட்டை பிய்ந்து வரும்.

கம்பியில் குத்தி அழுத்துவதில் கொஞ்சம் பிசகினாலும், ஸ்லிப்பாகி கருவியின் கூர்முனைப்பகுதி வயிற்றில் குத்திவிடும் ஆபத்து உண்டு. எனவே நீங்கள் தேங்காயே உரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அந்த கருவியில் கைவைக்காதீர்கள் என்று எங்கள் அய்யாவிடம் சொல்லிக்கொண்டேயிருப்பேன். ஆனால், வழக்கம் போல் தன்மேல் உள்ள நம்பிக்கையில் அவர் கேட்க மாட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்போதோ செய்வோருக்கே இப்படி பயம் என்றால், இதே தொழிலாய் இருப்போரை நினைத்தால்....

இதற்கு வேறு வழி இருக்க வேண்டுமே என்று தேடியிருக்கிறேன் முன்பு! இன்று கண்ட இந்த காணொளி மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. எங்கள் வீட்டிற்கு இது தேவைப்படாது என்றாலும், எத்தனையோ பேருக்கு பாதுகாப்பாக இருக்கும் அல்லவா! இத்தகைய கண்டுபிடிப்புகள் அல்லவா நாட்டிற்கு அவசியம்! உருவாக்கியவர்களை அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். இரவாகிவிட்டதனால், காலையில் பாராட்டிக் கொள்ளலாம். இப்போதைக்குப் பரப்புவோம்.. என்று உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். 

கருத்துகள்

குலவுசனப்பிரியன் இவ்வாறு கூறியுள்ளார்…
//இத்தகைய கண்டுபிடிப்புகள் அல்லவா நாட்டிற்கு அவசியம்! //
மிக உண்மை. பகிர்தலுக்கு நன்றி.

இதைப் போலவே கோவையில் செய்யப்படும், ”தானிய சுத்திகரிப்பு எந்திரத்தையும்” பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=Fikc3BiyAnQ
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா.... அருமை! இதனால் பெரிய தோப்புகளுக்கு நிறைய பலன் உண்டு.

என்ன..ஒன்னு.... குடுமி இல்லாமப் பிய்த்துப் போட்டுருது:(

அந்தப்பெண்கள், உடைத்த தேங்காய்மூடியில் இருந்து எத்தனை லாகவகமாக தேங்காயைப் பிரித்தெடுக்கிறார்கள், கவனித்தீரா!!!!
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அறிந்தேன்...
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
பார்த்தேன். நன்றி குலவுசனப்பிரியன்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
குடுமியோட பிய்க்கிறதுக்கும் ஒன்னு கண்டுபிடிச்சிட்டா போகுது!
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பர். அருமை, இந்த தேங்காயுரிப்பது நமக்கு தேவையானதே! கண்டுபிடித்தவரைப் பாராட்டவே வேண்டும்.
முடியுடன் தேங்காய் சில சமயச் சடங்குகளுக்குத் தேவை, அதற்கு கத்தியாலே உரித்துவிடலாம்.
ஆனால் இவ்வளவு தொகையான தேங்காய்களுக்கு சிரட்டை நீக்க , முடியின்றி உரிப்பதே நன்று.
கனடாவில் இடியப்பம் பிழியக் கருவியுள்ளதாகக் கூறினார்கள்.
கேரளாவில் தென்னை,பனை ஏறவும் இயந்திரம் உள்ளதாக அறிந்தேன்.
மேலைநாடுகளளவுக்கு நாமும் நம் தேவைக்கான கண்டுபிடிப்புகளில் முன்னேறுவது மகிழ்வே!
Dr B Jambulingam இவ்வாறு கூறியுள்ளார்…
தேவையுள்ள பகிர்வு. இவ்வாறாக ஒரு கருவி இருப்பதை தற்போதுதான் அறிகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hello, just wanted to tell you, I enjoyed this article.
It was inspiring. Keep on posting!

Review my web-site :: historical stock quotes

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…