முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மார்க்கமும் மனிதமும்!

முகநூலில் தோழர் அபுராயன் எழுதிய பதிவு
//சிந்திக்க மட்டும்...!!!

நேற்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த சையத் சுபஹானிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என விஜய் டிவி தொகுப்பாளர் கேட்டதற்கு அவர் " எல்லா புகழும் இறைவனுக்கே" என்றார்.

அவரின் தாயாரிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் " என் மகனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்" என்று கூறி தலையை சற்று தாழ்த்தினார்...

பிள்ளைகளைவிட பெற்றோர்களுக்கே இஸ்லாமிய மார்க்கம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைபடுகிறது... என்பதனை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியது...

# இறைவனை தவிர எதற்கும் எவனுக்கும் தலைவனங்குவது மாபெரும் குற்றமாகும்...!!! - @அபு ரயான்//

அபுராயன் அவர்களின் பதிவில் தோழர் மதி மதி அவர்களின் கருத்து:

//மகன் ஒரு பாடகராகத் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்; வெற்றி பெறும் அளவுக்கு தம் திறமையை வளர்த்து, தம் உழைப்பால் வெற்றிக்கனியைப் பறித்து விட்டார்;

ஆனால், இதில் எந்த தொடர்புமில்லாத 'இறைவனுக்கு' நன்றி கூறுகிறார்!
அறிவின் மீது நம்பிக்கையின்றி!

ஆனால், அவரின் தாயாரோ அறிவைப் பயன்படுத்தியுள்ளார்!

வெற்றிக்குத் துணையாயிருந்தோர்க்கு நன்றி கூறியுள்ளார்!

தாயாரைப் பாராட்டுவோம்! - @mathi mathi//

அது குறித்த என் பதிவு:

”கடவுளை மற! மனிதனை நினை!!” என்றார் தந்தை பெரியார். அது எத்தனை சரியானது பாருங்கள்! மகனின் வெற்றிக்கு உடன் நின்றோருக்கு நன்றி சொல்லுவது என்பது மனித மாண்பு! அதற்குக் கூட மதம் தடையாக இருக்கிறது. இஸ்லாத்தின் இறுக்கம் என்பதன் அடித்தளம் இருப்பது இங்கே தான். இஸ்லாத்தை உருவாக்கியவர்களின், நெறிப்படுத்தியவர்களின் சூட்சுமம் இருப்பதும் இங்கே தான். இதைத் தான் இணை வைத்தல் என்று பயங்கரமான பாவச் செயலாகப் பார்க்கிறார்கள்.


ஆம், சரி தான். இணை வைத்தல் கூடாது தான். எவரோடும் ஒப்பிட முடியாத நல்ல மனித மனங்களை, அவ்ர்தம் ஆற்றலை, அன்பை, உயர்வை, வேட்கையை, பண்பை, எதற்குமே பயன்படாத - இல்லாத - கற்பனையின் உச்சமான கடவுளுக்கு இணையாக வைத்தல் கூடாது தான் தோழர்களே! ஆஸ்கர் விருது வாங்கியதும் மேடையில் ரஹ்மான் சொன்னதைப் ’போலச் செய்த’ தம்பி சையத் சுபஹானை விட, தன் உணர்வை உண்மையாக வெளிக்காட்டிய, நன்றியை வெளிக்காட்டிய அவரது தாயார் தான் உயர்ந்தவர்.

மார்க்கம் குறித்து யார் பாடம் கற்க வேண்டும் என்பதற்கு முன், மனிதம் குறித்து பாடம் கற்க விரும்புவோர் அந்த தாயிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்!

மீண்டும் அழுத்திச் சொல்லுகிறோம்.
”கடவுளை மற! மனிதனை நினை!!”


பின் குறிப்பு: 
1. இவ்வளவுக்கும் சையதின் தாய் இறைவன் என்று அவர் கருதுவதற்கு/ கருதுபவர்க்கு நிகராக, தான் தலைவணங்குவதாகச் சொன்னவர்களை கருதியிருக்கவும் மாட்டார் - அப்படி சொல்லவும் இல்லை.

2. தலை தாழ்த்தி ஒருவரை வணங்கவேண்டும் என்றும் நான் சொல்லவில்லை; அது சரி என்றும் நான் வாதிடவில்லை. வணங்குதல் என்பதை வழிபடுதல் என்ற பொருளில் கொண்டால் அதை நான் ஏற்பதுமில்லை. மரியாதையைத் தெரிவிப்பதைத் தான் வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்துகிறேன். காலில் விழுதல் என்பதை (யார் காலிலும் விழுவதை- அதன் தத்துவ விளக்கத்தை) சுயமரியாதைக்கு இழுக்கு என்று சொல்பவர்கள் நாங்கள். ஆனால், தன் உணர்வை எளிமையான தலை தாழ்த்தலின் மூலம் உணர்த்தியதக் கூட மாபெரும் குற்றம் என்று சொல்லுவதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கருத்துகள்

காமக்கிழத்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
சொல்ல நினைத்ததைத் தெளிவாகவும் உறுதிபடவும் சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…