முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்து பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னியாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுதீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்காண பொதுமக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவசமடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்ததாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துபட்டு சிறிஸ்தவ ஆலய வளாகம் பரபரப்பாக காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (நன்றி: ஒன் இந்தியா)


  • இயேசு சிலையில் வடியும் ரத்தத்தை என்ன வகை (குரூப்) ரத்தம் என்று பரிசோதனை செய்து அறிவிப்பதற்கான அரிய வாய்ப்பு அல்லவா இது! 
  • இதே போல் உலகம் முழுக்க இயேசு சிலையின் கண்ணில் இருந்து வழியும் ரத்தங்களையும் பரிசோதித்து ஒப்பு நோக்கலாம். அதன் மூலம் இயேசு வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரமாகவும் இதைப் பயன்படுத்தலாம். 
  • வழக்கமாக இயேசு ரத்தம் என்று ஒயினை வழங்கிக் கொண்டிருக்கும் மோசடிக்கு விடை கொடுத்து, எந்த குரூப் ரத்தமோ அதில் நனைத்து அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கலாம். 
  • ஏற்கெனவே உலகின் ரத்தக் கொடைஞராக இருக்கும் ஓ பாசிட்டிவ் வகை ரத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதுவதையும் சரி பார்த்துக் கொள்ளலாம். (http://wiki.answers.com/Q/What_was_the_blood_group_of_Jesus_Christ?)
  • அப்படியே கன்னி மேரி கண்களிலிருந்து ரத்தம் வடிவதாக சொல்லப்படும்போதும் இதைப் பின்பற்றலாம். 
  • தாய்க்கும் மகனுக்கும் என்ன வகை ரத்தம் என்பது தெரிந்தால், அது மனித ரத்தமா அல்லது தேவ ரத்தமா என்பது தெரியக்கூடும். 
  • இந்த ரத்தம் எப்போது உற்பத்தியானது என்பதையும் கூட அறியும் வாய்ப்பு ஏற்படலாம். எப்படியும் குறைந்தது 1981 (கி.பி.2014- இயேசு மறையும் போது அவரது வயது 33)  ஆண்டுகள் பழமையான ரத்தம் கிடைப்பது வரலாற்று, அறிவியல் அபூர்வம் அல்லவா? 
  • இந்த அரிய வாய்ப்பை நழுவ விடலாமா? பரிசோதனைக்கு நாங்கள் தயார்! இயேசுவுக்கு வசதி எப்படி?

கருத்துகள்

ராஜி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல யோசனைகள்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நெற்றியடி. அது மட்டுமில்லை அவ் ரத்தத்தின் மரபணுக்களை ஆராய்ந்து இயேசுவுக்கு தந்தை வழி குரோமோசோம்கள் கிடையாது, கன்னித் தாய்க்கு பிறந்தவர் என்பதைக் கூட நிரூபித்துவிடலாமே. எங்கே நம் தமிழகத்து பகுத்தறிவு பிற்போக்குவாதிகள்? வந்து ஆராய்ந்துவிட்டு விடை சொல்லட்டும். சில வேளை சிலைக்குள் ரத்தம் வடியும் ஆய்வை மேற்கொள்வோருக்கு நோபல் பரிசும் கிட்டலாம், அரிய சந்தர்ப்பம் தான். உண்மை பகுத்தறிவை பேசிய தபோல்காரை கொன்று விட்டோம், யேசுவின் கண்ணீரல்ல கழிவறை நீரே சிலையில் வடியுது எனக் கூறிய உண்மையால் இந்திய அரசே சனல் எடமருக்குவை நாடு கடத்தி விட்டது. அவர்கள் இருந்தாவது முதுகெலும்போடு இப்படிப்பட்ட கூத்துக்களை ஆராய்ந்திருப்பர். நம் உள்ளூரில் பெரியாரின் வாரிசுகள் என தம்பட்டம் அடிக்கும் பலரும் எங்கே?!!
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த இரத்தம் வடிவது அடிக்கடி இத்தாலியில் தான் நடப்பது, இப்போ இடம் மாற்றி விட்டார்களா?
உங்கள் ஆலோனையைப் பின்பற்றலாம்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent.

All religions fool people.

Some years ago, Pillayar drank Milk. They fooled people.

This time Jesus.

Tomorrow Allah.

Day after tomorrow Murugan

etc.etc.

All are cheats and rascals.
காரிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏசுவைப் போல விமர்சனங்களுக்கும் தாக்குதல்களுக்கும் உட்பட்டவர் உலகத்தில் வேறுயாரும் இருக்க முடியாது. அதையெல்லாம் மத தீவிரவாதிகள் எதிர்த்த காலங்கள் ஏறக்குறைய முடிந்தே போய்விட்டன.இன்றைக்கு டேன் பிரவுன் போன்று மற்றொருவர் இன்னொரு புனை கதையை எழுதினாலும் அப்படியா என்று கேட்டுவிட்டு தங்கள் வேலையை பார்க்கப்போகும் கிருஸ்துவர்களே அதிகம்.
Saravana இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Saravana இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Saravana இவ்வாறு கூறியுள்ளார்…
முக்கியமான ஒன்றை இந்த நேரத்தில் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன், இதே போல் தான் மும்பை மகீம் மற்றும் பாந்திரா மவுண்ட் மேரி(மலைமாதா) கோவில் ஏசு சிலை மற்றும் மேரி சிலையில் இருந்து இரத்தம் வடிவது பற்றிய செய்தி வெளியானது. உடனே நாடு முழுவதிலுமிருந்து பல பேர் ஆலயத்திற்கு வந்து குவிந்தனர். சிறப்பு ரெயில் ஒன்று கோவாவில் இருந்து விட்ட சம்பவம் கூட நடந்தது, ஆனால் இது குறித்து இரகசிய ஆய்வு செய்த நாத்திகவாதி நரேந்திர தபோல்கர் ஓர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார். அது சாதாரணமாக பழைய கட்டிடங்களில் உள்ள கீரல்களில் கசிந்து வரும் இரும்பு துரு கலந்த நீர். இங்கும் அதே தான் நடந்த ஈரப்பதம் கலந்த காற்று சிலையில் இடைவெளிகளில் உள்ள புகுந்து சிலையில் உள்ள இரும்பு சட்டம், மற்றும் கம்பியில் படிகிறது, நாட்கள் ஆக அவை நீராக மாறி இரும்புத்துருவுடன் கிடைத்த இடைவெளியில் கசியத்துவங்குகிறது, பொதுவாக ஏசு சிலை மற்றும் மாதா சிலை தூய வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் அந்த துரு நிறம் அடர் சிவப்பில் வெளிவருகிறது, இதனைத்தான் ஏசு சிலையில் இரத்தம் வடிகிறது, மாதா சிலை இரத்தக்கண்ணீர் வடிகிறது என்று கூறுகிறார்கள், என ஆதாரத்துடன் கூறினார். இதை சில பத்திரிக்கைகளும் வெளியிட்டனர். இந்த செய்தி வெளிவந்த பிறகு வடக்கே இது போன்ற செய்திகள் நீண்ட நாட்களாக வரவில்லை. ஆனால் இப்போது சென்னையில் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
சரவணா. இராசேந்திரன்
காரிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
சரவணா,
மிகத் தெளிவான அறிவியல் கண்ணோட்டம். ஆனால் இதை மதவாதிகள் (எந்த மதமாக இருந்தாலும்) ஏற்றுக்கொள்ளவார்களா என்பது சந்தேகமே.
காரிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…