முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னும் "இளமை இதோ இதோ"...

நான் அடிக்கடி சொல்வதுண்டு. இன்று புலர்ந்தபோது கூட அருகில் இருந்த தம்பியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்னும் "இளமை இதோ இதோ" பாடலை அடித்துக் கொள்ள ஒரு பாட்டு வரவில்லை என்று! அதே போன்று ஒரு தொகுப்பையே பதிவு செய்திருக்கிறார் நண்பர் Muralikannan Rengarajan.

நிறைய முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், இளமை இதோ... தான் இன்னும் இளமையுடன்! இவ்வளவுக்கும் அப்பாடலின் தொடக்கத்தில் வரும் "ஹாய் எவ்ரி படி... விஷ் யூ ஹேப்பி நியு இயர்" என்ற வரிகளைத் தவிர புத்தாண்டுக்கும் அப்பாடலுக்கும் யாதொரு தொடர்பும் இருக்காது; கமல்ஹாசனின் பெருமை பேசும் பாடலாகத் தான் அது இருக்கும். ஓரிடத்தில் 'இந்தியிலும் பாடுவேன்' என்று எஸ்.பி.பி.யின் பெருமையும் உள்ளே வரும். ஆனாலும் நம் மனதில் அப்பாடல் நின்று நிலைப்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் என்பது சிந்திக்கத்தக்கது.

ராஜாவின் துள்ளலான அதன் இசை அதற்கு முக்கியக் காரணம். பாடல் எங்கும் பாடுபவர் உற்சாகம் கொள்ளத்தக்க பாவனைகள் வெளிப்படும் (யார் பாடினாலும்). பைக், ஸ்கேட்டிங், டார்ஜான் மாதிரி கயிற்றில் தொங்குதல், ஆடுதல், ஒடுதல், தாவுதல் என்று அத்தனை குரங்குச் சேட்டைகளும் பாடலில் இருக்கும். பாடுபவர் தன்னை சகலகலா வல்லவன் என்று கருதிக் கொள்ளும் வாய்ப்பை அப்பாடல் தரும். இன்னும் நிறைய இருக்கு!

வருங்காலம் குறித்த கனவுகளை விதைத்த ஆண்டே நூற்றாண்டே, நல்லோருக்கு வாழ்த்துச் சொன்ன சங்கிலி படப் பாடல்களையெல்லாம் தாண்டி 'இளமை' நிலைப்பதற்கு இதெல்லாமும் காரணம். ஒருமுறை பாட்டோடு சேர்ந்து பாடிப் பாருங்கள்... உங்களுக்கும் புரியும்!!


பின்னிணைப்பு -1
முரளிகண்ணன் பதிவு
https://www.facebook.com/muralikannan6/posts/541416815953760
இந்த ஆண்டும் புத்தாண்டுக்கு இளமை இதோ இதோ தானா என பலர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். சிவாஜி கணேசன் நடித்த சங்கிலி (பிரபுக்கு அறிமுகப் படம்) படத்தில் ஒரு நல்ல நியூ இயர் பாடல் உள்ளது. நமக்காக நன்மைக்காக எனத் தொடங்கும் பாடல். முகவரியில் வரும் ஆண்டே நூற்றாண்டே பாடலில் நூற்றாண்டு வராமல் இருந்தால் அதை உபயோகிக்கலாம். 

முன்பெல்லாம் கல்லூரி பேர்வெல் பார்ட்டிகளில் ரத்தத்திலகத்தில் வரும் பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் தான் ஒலிக்கும். அதை ரஹ்மானின் முஸ்தபா முறியடித்தது. அதுபோல இளமை இதோ இதோவை முறியடிக்க ரஹ்மான் தான் மனது வைக்க வேண்டும்.

அதேபோல் கல்யாண வீடுகளில் பெண் அழைப்புக்கு மணமகளே மருமகளே வா உன் வலது காலை எடுத்து வைத்து வா என்னும் சாரதா படப் பாடல்தான் ஆட்சி புரிகிறது. தேவர்மகனில் வரும் மணமகளே மருமகளே பாடலுக்கு இன்னும் அங்கீகாரம் கிட்டவில்லை. திருமணம் முடிந்ததும் பணக்காரனில் வரும் நூறு வருஷம் பாட்டே இன்னும் போடப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு கூட மகாநதியின் தை பொங்கலும் பொங்குது பாடலுக்கு அடுத்து ஏதும் வரவில்லை. 

இப்போது மதுரை வட்டாரங்களில் முதலாமாண்டு மற்றும் தொடர்ந்த ஆண்டுகளில் கண்ணீர் அஞ்சலிக்கு லோக்கல் கேபிளில் விளம்பரம் கொடுக்கிறார்கள். வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி. தேம்புதய்யா பாவம் தேவர்களின் பூமி என்ற பாடல் பிண்ணனியாக ஒலிக்க.

பின்னிணைப்பு -2
நல்லோர்கள் வாழ்வை...
http://www.youtube.com/watch?v=VvffL2njuCc

கருத்துகள்

Philosophy Prabhakaran இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல அலசல்...

'இந்தியிலும் பாடுவேன்' என்ற வரிகூட ஒருவகையில் கமலின் பெருமை தான்... அடுத்த வரியில் ஏக் துஜே கேலியே என்று வருகிறதே...

தேவர்மகனில் வரும் மணமகளே மருமகளே பாடல் கொஞ்சம் சோக இசை கலந்திருக்கும் என்பதால் அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறேன்...

PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
//'இந்தியிலும் பாடுவேன்' என்ற வரிகூட ஒருவகையில் கமலின் பெருமை தான்... // ஆம். இருவருடையதும் தான்... 'தேரே மேரே..'வில் இருவருக்கும் தானே புகழ்!
காரிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
இளமை இதோ இதோ பாடலை முறியடிக்கும் மற்றொரு பாடல் இதுவரை வரவில்லை என்பது உண்மையே. நீங்கள் சொல்லியிருப்பதுபடி இந்தப் பாடலில் உள்ள குதூகலம் ஆர்ப்பாட்டமான இசை இதை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது. ஏன் பிற இசை அமைப்பாளர்கள் இதுபோன்ற ஒரு பாடலை தரவில்லை என்ற கேள்வி என்னிடம் எப்போதுமே உண்டு. பதிவுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…