முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளர் பைரவன் alias வாஞ்சி அய்யர்!

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறப்பு விழாவிலிருந்து, அதன் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி அரசால் இடிக்கப்பட்டது வரை எல்லாமே விவாதப்பொருளாகிக் கொண்டிருந்தது ஒரு புறம். அதே வேளையில், தோழர்கள் சிலர் அதில் பெரியார் படம் இல்லையென்றும் வருத்தப்பட்டார்கள். அது தொடர்பான பல பதிவுகளும், அதற்கு நெடுமாறன் தரப்பிலிருந்தும், மணியரசன் போன்றோர் தரப்பிலிருந்தும் சாக்குகளும், சால்ஜாப்புகளும், ஜெயமோகன் செய்ததற்கிணையான ’யார் இலக்கியவாதி’ போன்ற ஆராய்ச்சி முடிவுகளுமாக போய்க் கொண்டிருந்தது.


நேரிலேயே முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சென்று பார்த்து தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்தவர்களிடமும், “பாருங்கள்... இங்கே வெறும் இலக்கியவாதிகள் கவிஞர்கள், படைப்பாளிகள் படம் தான் இருக்கிறது. இதில் பெரியார் படம் வைக்கமுடியுமா?” என ரொம்பவே இலக்கிய அணிவகுப்பின் மீது அக்கறையோடு ’அங்கே’ இருந்தவர்கள் பதில் சொன்னார்களாம். முள்ளிவாய்க்கால் முற்றம்கிறது போராட்டத்தின் நினைவுகூரல் தானே, இதென்ன இலக்கியவாதிகள் கண்காட்சியான்னெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. தமிழ்த் தேசியமாச்சே! சொன்னது சொன்னது தான் மாத்த முடியாதே!

எனக்கென்னவோ, இதில் தொடக்கம் முதலே எந்த வருத்தமும், எதிர்பார்ப்பும் சுத்தமாகவே இல்லை. இவர்கள் யார் பெரியாரை வரிசைப்படுத்த, தரம் பிரிக்க, விட்டுவிட, சேர்க்க...? ஒரு சிலரின் பின்பு(ப)லத்தில், ஒரு சிலரின் வாழ்விடமாக, அவர்களின் விருப்பம் மற்றும் தெரிவுக்கேற்ப உருவாக்கப்பட்ட ஓர் இடத்தில், இது ஏன் இல்லை? அது ஏன் இல்லை? என்றெல்லாம் கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அப்படி சில தோழர்கள் எழுதிக் கொண்டிருந்தபோதும், வருத்தப்பட்ட போதும், இதைக் குறித்தே சில நாட்கள் பேசிக் கொண்டிருந்தபோதும் பெரும் எரிச்சல் தான் ஏற்பட்டது. இதைப் போய் பேசுறதுக்கு என்ன இருக்கு? இவர்கள் யார் பெரியாரை அளவிட? இவர்கள் இந்த இடத்தில் விட்டுவிட்டால் பெரியாரின் வரலாறு மறைக்கப்பட்டுவிடுமா? அப்புறம் ஏன் இது குறித்து தொடர்ந்து பேசப்படவேண்டும் என்று தான் என் எண்ணம் இருந்தது; இருக்கிறது. அதனால் தான் இது நாள் வரை ஒரு நிலைத்தகவல் கூட முகநூலில் இடவில்லை. (பெரியார் படம் இல்லை என்பது பற்றி கமெண்ட் போட்டதாகக் கூட நினைவில்லை) இது குறித்துப் பேசுவது அநாவசியமாகவே தோன்றியது. 

ஆனால், வந்த வினாக்களுக்கு விடை தரும் முகமாக, அந்த முற்றத்தில் இடம் பெற்றிருக்கும் படங்களின் வரிசையில் இடம்பெறுவதற்குப் பெரியாருக்குத் தகுதி இல்லை என்பது போல மறைமுக வார்த்தைகளில் பூசி மெழுகிக் கொண்டிருந்தார்கள். தனித்து கவனிக்கப்பட்டுவிட்டதனாலும், அதற்கு தாங்களும் ஏதேதோ பதில் அளிப்பதாக உளறிவிட்டதாலும், இனியும் பெரியார் படத்தை சேர்த்துவிடக் கூடாது என்று வறட்டு கவுரவம் பார்க்க வேண்டியதாகவும் ஆயிற்று அவர்களுக்கு! 

சரி, விடுங்க! இந்த வரிசையில் வர்றதுக்கு பெரியார் என்ன இலக்கியவாதியா? 
  • ஏதோ குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, உண்மை-ன்னு தமிழ்ல 5, 6 பத்திரிகை நடத்தினாரு, இன்னும் நூற்றுக் கணக்கான பத்திரிகைகள் வர்றதுக்கு அடித்தளமா இருந்தாரு, அவ்வளவுதானே!
  • பத்திரிகை ஆசிரியரா இருந்து 48 வருசம் அப்பபோ தலையங்கம், சில ஆயிரம் கட்டுரைகள், உரையாடல் எழுதியிருக்காரு, அவ்வளவுதானே!
  • 55 ஆண்டுகளுக்கு மேல சொற்பொழிவாளரா தமிழ்நாடு முழுக்க சுத்தி வந்து பேசியிருக்காரு, அவ்வளவுதானே!
  • சில நூறு புத்தகங்கள் எழுதினாரு... சில நூறு புத்தகங்களைப் பதிப்பிச்சாரு, சில புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்டாரு... ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களை உருவாக்கினாரு, அதுக்காகவெல்லாம் சேர்த்துக்க முடியுமா?
  • தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் பண்ணினாரு, ஹ்ம்ம்ம்... இதெல்லாமா தமிழ்ப் பணி?
  • திருக்குறள் மாநாடுன்னு நடத்தி, எல்லாரையும் திருக்குறள் படிக்க வச்சாரு... ப்பூ!
  • இந்த மாதிரி சில்லறை விசயங்கள் செய்தவரையெல்லாம் இலக்கியவாதி, எழுத்தாளர், படைப்பாளர், தமிழுக்குத் தொண்டாற்றியவர்னு படம் போட முடியுமா?
ஆனால், வாஞ்சிநாதன் தெரியும்ல... அவர் படம் உள்ள இருக்கு! அவர் யாரு...?

அட, அது தெரியாதா உங்களுக்கு....? அவர் எவ்வளவு பெரிய இலக்கியவாதி? என்ன இது கூட தெரியாம இருக்கீங்க... அவரு...

ஒரு

கடிதம் எழுதியிருக்காரு... (முற்றத்துக்காரர்கள் மன்னிக்கவும். இந்த ’ஒரு’ என்ற வார்த்தையை இதற்கு மேல் பெரிதாக்க முடியவில்லை.)

அந்த கடிதத்தில 90 வார்த்தைகள் இருக்கு.. (அதில் எத்தனை தமிழ் வார்த்தைன்னு எல்லாம் நீங்க கேட்டா, துரோகியாயடுவீங்க!)

அந்த 90 வார்த்தையில 410 எழுத்து இருக்கு!

இது போதாதா?

பி.கு: அந்த கடிதமும், வாஞ்சி அய்யர் எழுதியதா? அல்லது மண்டபத்தில் வேறு யாராவது எழுதிக் கொடுத்ததா என்ற கேள்வி எழுந்தாலும், ‘எழுத்தாளர் பைரவன் @ பாவலர் தருமி @ வாஞ்சி அய்யர்!’ என்று தலைப்பை நீட்ட வேண்டியிருக்கும் ஆதலால் அந்தக் கேள்வி தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள்

viyasan இவ்வாறு கூறியுள்ளார்…
திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்றவர்களுக்கும் ஈழத்தமிழ்ப் போராளிகளுக்குமிடையே ஒற்றுமை உண்டு. அவர்கள் அரசாங்கத்துக்கெதிராக ஆயுதம் தூக்கி, பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள்.

பெரியார் தமிழ்நாட்டில் திராவிடர்களுக்கு சமவுரிமை பெற்றுக் கொடுப்பது போன்ற எவ்வளவோ பல தொண்டுகளைச் செய்திருக்கிறார். ஆனால் அதேபோல் ஏனைய திராவிட மாநிலங்களிலும் திராவிடர்களாகிய தமிழர்களுக்கு, தமிழ்நாட்டிலுள்ள தமிழரல்லாத திராவிடர்கள் அனுபவிப்பது போல் அரசியல், பொருளாதார உரிமைகள் கிடைக்க பெரியார் எதுவும் செய்யவில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில் தமிழரல்லாத திராவிடர்கள் முதலமைச்சராக முடிவது போல், வேறு எந்த தென்னிந்திய மாநிலத்திலும் தமிழர்கள் அதை நினைத்துப் பார்க்கவே முடியாது.

அதை விட பெரியாருக்கும் தமிழ்த்தேசியத்துக்கும் அல்லது பெரியாருக்கும் ஈழத்துக்கும் என்ன தொடர்பு? அப்படி ஏதும் பெரிய தொடர்பு இல்லாததால் தான் பெரியாரின் படத்தை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைக்கவில்லை.
Sekar இவ்வாறு கூறியுள்ளார்…
வாஞ்சி நாதன் தனது சுய பிரச்னை அல்லது தனது கூட்டத்தினர் பிரச்சனைக்காகவே ஆஷை சுட்டார். அவரை தமிழ் தேசிய போராளி என்று சொல்வது தவறு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam