நமது ஆடைகளில் இருக்கும் வாக்கியங்கள் என்ன பொருள் கொண்டிருக்கின்றன என்று என்றைக்காவது படித்திருக்கிறோமா? ஆபாசத்தின் அடையாளங்களாக, பெண்கேலியின் வடிவங்களாக படங்களும் எழுத்துகளும் அச்சிடப்பட்டிருக்கின்றன். இளைஞர்களும், இளைஞிகளும் 'அழைக்கும்' தொனியில் அமைந்த வாசகங்களையும் கூட கூச்சமின்றி அணிந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் எதாவதொரு நிறுவனத்தின் விளம்பரத்தை கட்டணமின்றி உடலில் சுமக்கிறோம். அதிலும் விளையாட்டு வீரர்கள் அணிதிருக்கும் நிறுவனங்களின் விளம்பரம் என்றால் அதற்கு தனி மவுசு.. (அட எலிக்குட்டி இல்லப்பா..) இல்லாவிட்டால் நடிகர் நடிகைகளின் விளம்பரம் தாங்கிய பனியன்கள் கிடைக்கின்றன. இங்கிலீஷில் என்ன எழுதியிருந்தாலும் வாங்கி அணிந்து கொள்ளவும் நாம் தயார்.
அந்த வகையில் தமிழ் எழுத்துகள் அடங்கிய சேலையை வடிவமைத்து விளம்பரப்படுத்திய சேரன் பாராட்டுகுரியவர். புரட்சியாளர்களை நெஞ்சில் சுமந்து அதை அதிக அளவில் விளம்பரப்படுத்தியவர் அண்ணன் சீமான் தான்! சேகுவேராவை தமிழகமெங்கும் திரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது சீமானே! அது அவரது அடையாளமாகக் கூட ஆனது.
தந்தை பெரியாரின் உருவம் தாங்கிய பனியன்கள் அவ்வப்போது வெளிவந்தாலும் இப்போது அதிக அளவில் அணியப்படுகிறது. இந்தத் தலைவர்களுக்கு விளம்பரம் தேவையில்லையாயினும் எமக்கு அது அடையாளமாகிறது. இன்னும் பலரிடம் இந்த தலைவர்களை அறிமுகப்படுத்த, நினைவூட்ட இவை பயன்படுகின்றன. 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்ற வாசகம் பொறித்த அய்யா பனியனும், 'வெற்றி நமதே' சே பனியனும் நான் அதிகம் அணியக்கூடியவை.
கல்லூரி செல்லும்போதும், பொது இடங்களிலும் அனைவரின் கவனமும் ஒருமுறை பெரியாரை நோக்கித் திரும்பும், அல்லது சேகுவேராவை விசாரிக்குத் தூண்டும்.
கல்லூரி செல்லும்போதும், பொது இடங்களிலும் அனைவரின் கவனமும் ஒருமுறை பெரியாரை நோக்கித் திரும்பும், அல்லது சேகுவேராவை விசாரிக்குத் தூண்டும்.
கடந்த வாரம் வடபழனி வசந்தபவனுக்குள் நுழைந்தேன். உடன் உள்நுழைந்த பையன் என் பனியனையே வெறித்துப்பார்த்தபடி வந்தான். அதில் உள்ள வாசகத்தை படிக்க முயன்றான். அதற்காக கொஞ்சம் இழுத்துப் பிடித்துக் காண்பித்தேன். படித்துவிட்டு நன்றி சொல்லி விடைபெற்றான்.
உணவை முடித்துவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தேன் (பணம் கொடுத்துவிட்டுத்தான்). பின்னாலேயே ஒருவர் விரட்டி வந்துகொண்டிருந்தார். வாசலை அடையும்போது கவனித்துத் திரும்பினேன்.
"சார், கேட்டா தப்ப எடுத்துக்க மாட்டீங்களே?"
என்ன கேட்கப்போகிறார் என்று தெரியாததால் "சொல்லுங்க" என்றேன்.
என்ன கேட்கப்போகிறார் என்று தெரியாததால் "சொல்லுங்க" என்றேன்.
"சார், இந்த பெரியார் பனியன் எங்க சார் கிடைக்குது?" என்றார்.
"இதுக்கென்னங்க, பெரியார் திடல்-ல கிடைக்குது" என்று சொல்லிவிட்டு மகிழ்வுடன் திரும்பினேன்.
அப்படி எல்லாம் நீங்கள் விரட்டிவிரட்டிக் கேட்கவேண்டாம்.
பெரியாரின் உருவம் பொறித்த பனியன்கள் ஓவியர் மருதுவின் கைவண்னத்தில் புதிதாக வெளிவந்திருகின்றன. கருப்பு வண்ண பனியனில் "மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - பெரியார்" என்ற வாசகத்தோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் போடும் வகையில், பல அளவுகளிலும், காலர் வைத்தும் கிடைக்கிறது.
பொது இடங்களில் அணிந்து செல்ல வெள்ளை மற்றும், சாம்பல் வண்ண உடைகள் S, M அளவுகளில் கிடைக்கிறது. வெள்ளையில் பெரியார் படம் மற்றும் வாசகத்துடனும், சாம்பல் பனியனில் படம் மற்றும் கையெழுத்துடனும் கிடைக்கிறது.
மற்ற இடங்களிலும் கிடைக்க செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கழிவுத் தொகையோடு சேர்த்து அதிக விலைக்குத்தான் வழங்க வேண்டும். இப்போது அடக்கம் மற்றும் போக்குவரத்து செலவு மட்டும் கணக்கிடப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள்(106-154) (கருப்பு)- ரூ.80
சிறியது, நடுத்தரம் (காருப்பு, வெள்ளை, சாம்பல்) - ரூ.100
பெரியது, மிகப் பெரியது (காலருடன் கருப்பு மட்டும்) - ரூ.110
நல்ல தரத்துடன் விற்பனையில் கிடைக்கிறது.
சென்னை பெரியார் திடல் - திராவிடன் புத்தக நிலையத்தில் கிடைக்கும்.
திருச்சி பெரியார் மாளிகை, தமிழர்தலைவர் வீரமணியின் சுற்றுப்பயணங்கள், தமிழகமெங்கும் உள்ள பெரியார் புத்தக விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் கிடைக்கும்.
பெரியார் திடலுக்கு வழி எப்படினெல்லாம் கேட்கப் ப்டாது ? இங்க பாருங்க!
கருத்துகள்
இதுல தமிழ் வாசகங்கள் உள்ள பனியனாலே,ஏதோ சோப் கம்பெனி டீ,சர்ட் என்று இருக்கும் ஒரு கருத்தாக்கமும் உடைப்படும்...
உங்களுக்கில்லாததா...சொல்லுங்க லக்கி... வாங்கி வைக்கிறேன்.
நன்றி tbcd, லக்கி, அனானி
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - பெரியார்" என்ற வாசகத்தோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் போடும் வகையில், பல அளவுகளிலும், காலர் வைத்தும் கிடைக்கிறது.பொது இடங்களில் அணிந்து செல்ல வெள்ளை மற்றும், சாம்பல் வண்ண உடைகள் S, M அளவுகளில் கிடைக்கிறது.
//
நல்ல இடுகை !
பெரியார் இறந்துவிட்டார் என்று நினைப்பவர்களுக்கு புளியை கறைக்கும் !
சே பனியன் முற்போகு நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்... திருப்பூர் முகில் தான் சேபனியன் தயாரிக்கிறர். வாய்ப்பிருப்பின் அந்த முகவரியை தருகிறேன்.