முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கப்பலேறிப் போயாச்சு! - கதாகாலட்சேபம்




Kappaleri poyachu ...

(எங்கள் தங்கம் படத்தில் மொட்டை போட்டபடி எம்.ஜி.ஆர் நடத்தும் நிலாவுக்கு இந்திய ராக்கெட் போவது பற்றிய கதாகாலட்சேபப் பாணியில் நிமிட்ஸ் கப்பலின் சென்னை வருகைப் பற்றி...)

கதா : ஆதௌ கீர்த்தன ஆரம்பத்திலே... அமெரிக்கா... அமெரிக்கா... எனப்பட்ட தேசத்திலேயிருந்து ராணுவக் கப்பல் ஒன்று கீழைத் தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டது.நிமிட்ஸ்-ங்கிற அந்தக் கப்பல் இந்தியா வந்து சென்னைத் துறைமுகத்தில நிக்கறதுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பியது.
ரங்கு : ஏன்னா.... கப்பல்னா துறைமுகத்திலதான் நிக்கும். பின்ன ரோட்டிலயா வந்து நிக்கும். அதுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிச்சா.
கதா :அடே ரங்கு! வந்த நிமிட்ஸ் இருக்கானே அவன் சாதாரண கப்பல் இல்லேடா...

அண்ட பகிரண்டமொடு எத்திசையும் அதிர
சண்டப் பிரசண்டனென குண்டுகளும் அதிர...

ரங்கு, சுப்புனி : சண்டப் பிரசண்டனென குண்டுகளும் அதிர...
கதா : உலகெல்லாம் சுற்றிய போர்க் கப்பல்டா அது...
வெறும் போர்க்கப்பல் இல்ல...
அணு உலையில இயங்குற அணு ஆயுதக் கப்பல்...
சுப்புனி : உலகெல்லாம் சுத்தினதா...எந்தெந்த நாடு மாமா...
கதா : ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம்னு அமெரிக்கா அமைதிப் பணி செய்யப்போன நாடுகள்லாம் சுத்தி வந்த கப்பல்டா அது. அது ஈராக்ல இருந்தப்போஅந்த மக்கள்லாம் என்ன பாடினா தெரியுமோ?


குண்டு மழை பொழிகிறது
ஒவ்வொருநொடியிலும் எம்முடல் எரிகிறது


அப்படிப் பாடினா... அந்தளவு அமைதிப் பணியாற்றின கப்பல் அது!
ரங்கு : குண்டு போட்ட கப்பலா? ஏன்னா சண்டைக்காரக் கப்பல் ஏன் இந்தியாவுக்கு வரணும்? அணு ஆயுதம் எல்லாம் இருக்குன்னா, ஏதாவது சின்ன சிக்கல்னா கூட ஆபத்தாச்சே!
கதா : ஆபத்தா... அணு உலையில ஆபத்துன்னா... சென்னையே பஸ்பம் ஆயிடும்டா... இதையெல்லாம் சொல்லித்தான் எல்லோரும் போராட்டம் பண்ணா... பத்திரிகைகாரால்லாம் நன்னா எழுதினா... நிமிட்ஸோட ஆபத்தைப் பத்தி...
சுப்புனி: எதிர்ப்புக் கிளம்பினதனால கப்பல் வரலையோ...
கதா : வரலையாவது? அமெரிக்காக்காரா கேட்டா முடியாதுன்னுட முடியுமோ... நம்ம சென்ட்ரல்ல இருக்கிறவாளும் ஒத்துனுட்டா... யார் எதிர்ப்பு சொன்னா என்னடா... கேட்டது அமெரிக்காவாச்சே! இவாளண்ட எதிர்ப்பெல்லாம் அவாளண்டே நடக்குமோ?
வாங்கோ... வாங்கோன்னு நம்ம அரசாங்கம் அவாளை வரவேற்றது.


வந்தேனே ராஜன் வந்தேனே
வந்து நின்னு வந்தனம் பெற்றேனய்யா...
துறைமுகத்துக்
கு வந்து நின்னு

ரங்கு, சுப்புனி : வந்தனம் பெற்றேனய்யா...
கதா: அப்படின்னு பாடிண்டே சென்னை துறைமுகத்துக்கு 2 கடல் மைல் துரத்தில வந்து நின்னது யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் கப்பல்.
வந்திருக்கிற கப்பலை வேடிக்கை பார்க்கிறதுக்கு ஊர்ப் பெரிய மனுஷாளுக்கெல்லாம் அழைப்புஅனுப்பியிருந்தா அமெரிக்கவாள்!
அதிலேயும் போலீஸ்காராள்லா சென்னை கமிஷனரை மட்டும் தான் இன்வைட் பண்ணியிருந்தாளாம். அதனால கப்பலை வேடிக்கை பார்க்க முடியலைன்னு மத்த போலீஸ் காராளுக்கெல்லாம் ஏக்கம்!
ரங்கு : அதுதான்... அவா அடிச்ச கொட்டத்தை நன்னா வேடிக்கை பார்த்தாலே!
கதா : கப்பலைப் பத்தி பிரஸ்தாபிக்க நம்ம பத்திரிகைகாராளையெல்லாமும் கப்பலுக்கு அழைச்சுண்டு போனா... அதிலும் 'நம்மவா'ளுக்கு முன்னுரிமை.. போகட்டும். அதுவரை கப்பலைப்பத்தி பீதி கிளப்பிண்டிருந்த பத்திரிகைகளெல்லாம், போயிட்டு வந்தவுடனே..
கடலுக்கள்ளே எல்.அய்.சி. பில்டிங் மாதிரி இருக்கு...
விமானத்துக்கெல்லாம் லிப்ட் வச்சிருக்கா...
அய்யய்யோ கப்பல் அப்படி ஒரு சுத்தம்...
கப்பலைப் பத்தி தப்பாச்சொன்னா குத்தம்-கிற ரீதியில விலா வலிக்க விலாவாரியா எழுதித்தள்ளிட்டா...
இன்னும் என்ன சொன்னா தெரியுமோ?


லிப்ட் என்ன? விமானம் என்ன?
லிப்ஸ்டிக் போட்ட பெண்கள் என்ன?
ஆண்-பெண்
நட்புறவு என்ன? என்ன?
ரங்கு, சுப்புனி : என்ன?


கதா : அலைகடலில் அடுக்கு மாடி என்ன? என்ன?
ரங்கு,சுப்புனி : என்ன?
கதா : அறுவை சிகிச்சை ஆஸ்பத்திரி என்ன? என்ன?
ரங்கு, சுப்புனி : என்ன?
கதா : இப்படி ஒரு லிஸ்டே போட்டு பாராட்டிட்டா...சரி, அதோட விட்டா முடியுமா? வழக்கமா, நம்மூரு அரசியல்வாதிகள்டே நீட்டுறமாதிரி கப்பல் கேப்டன் அம்பி மானசீர் இருக்கானோல்யோ அவன்ட்ட நீட்டிட்டா... மைக்கை!
"மிஸ்டர், கேப்டன்.. உங்கள் கப்பலில் அணு ஆயுதம் இருப்பதாகவும், அவற்றால் ஆபத்து என்றும் எங்கள் ஊரில் சொல்லப்படுகிறதே! அதைப்பத்தி என்ன சொல்றேள்?அணுக் கழிவுகளையெல்லாம் எங்கே கொட்டுவேள், எங்க ஊரில இருக்கிற ஒனிக்ஸ் மாதிரி கழிவு சேகரிக்க ஏதும் கப்பல் வச்சிருக்கேளா?"ன்னு தொடர்ந்து கேள்வி கேட்டு துளைச்செடுத்திருக்கா...
ரங்கு : அதுக்கு மானசீர் பிள்ளையாண்டான் என்ன சொன்னான்?
கதா : அணு ஆயுத ஆபத்து இல்லைன்னு நம்ம அரசுதான் கத்திண்டிருந்தது. ஆனா அவன் என்ன சொன்னான் தெரியுமோ...அது எங்க பாதுகாப்பு விசயம்... அதைப்பத்தி ஒன்னும் சொல்ல முடியாது..
நாங்க வந்தது வேற விசயத்துக்காக..
இந்திய அமெரிக்க நட்புறவை வளர்க்கப் போறோம். எங்கள் பணியாளர்கள், உங்க ஊர்ல வந்து தெருக்கூட்டி சமூக சேவை செய்யப் போறாங்க... பள்ளிக் கூடங்களுக்குப் போய் பார்க்கப் போறாங்க அப்படின்னு தங்களோட நல்லுறவு திட்டத்தைப் பத்தி சொன்னார்.
சுப்புனி : அவங்க பண்ண சமூகப் பணிகளைத் தான் பத்திரிகைல படமாய் போட்டாங்களே! புது ஸ்கூலை ஒட்டடை அடிச்சது, விளையாட்டு மைதானத்துல குப்பை பொறுக்கினதுன்னு அவங்க பண்ண நல்ல காரியங்கள் இருக்கே!
கதா : அதெல்லாம் படத்தில வந்த நல்லுறவுப் பணிகள். படம் போடாத நல்உறவு பணிகளை பத்திரிகையில புளகாங்ககிதப் பட்டு எழுதியிருந்தானே படிச்சியோ?
சுப்புனி : விட்டுட்டனேன்னா?
கதா : அட, அபிஷ்டு? அதில் தானேயடா இருக்கு அமெரிக்ககாரனோட சமஉரிமை சிந்தனை! வெள்ளையர் கருப்பர் என்ற வித்தியாசம் கிடையாது!
ரங்கு : ஓஹோ...
கதா : சப்பமூக்கு தாய்லாந்துகாரங்கன்னு வேறுபாடு கிடையாது!
சுப்புனி : எதிலண்ணா?
கதா : சொல்றேன், சமூக வேலை செஞ்சவாள்லாம், அப்புறம் எங்கே போனா தெரியுமோ?
ரங்கு : எங்க போனா?
கதா : அது நம்ம போலீஸ்காராளுக்குக் கூடத் தெரியாதுடா. ஏன்னா, பாஸ்போர்ட், இமிகிரேஷன், கட்டுப்பாடு ஏதும் அவாளுக்கு கிடையாது. அவாளை யாரும் கண்காணிக்கவும் கூடாது;
கேள்வி கேக்கவும் கூடாதுன்னு ஆர்டர் போட்டுட்டா மத்திய சர்க்கார்லயிருந்து..
ரங்கு : ஏண்ணா இதே மாதிரி நம்ம கப்பல் அமெரிக்கா போனா நட்புறவு அடிப்படையில எல்லாம் நடக்குமோ?
கதா : நட்புறவா? முன்னாள் சோசலிஸ்டும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் போனதுக்கே பேண்டை உருவி சோதனை போட்டவனாச்சே.. ம்ஹும்.
சரி, இப்படி வர்ற வெளிநாட்டுக்காராள்லாம் வழக்கமா எங்கே போவா?
சுப்புனி : என்ன? நம்ம மகாபலிபுரத்துக்குப் போவா? கலைச் சிற்பங்களைப் பார்த்து...கல்லிலே கலைவண்ணம் கண்டான்ன்னுபாட்டுப் பாடிட்டு ஏதாவதொரு கோயில்ல நம்மவாளண்ட பூமாலை போட்டுண்டு, தட்டுல தட்சணையைப் போட்டுட்டு மாலையோட ஊர்சுத்தி வருவா..
கதா : அப்படித்தான் நம்பி மகாபலிபுரம் கைடுகள் இருக்க.. நம்மவாளும் கையில தட்டும்... வாயில பாட்டுமா... ஆம்படையாளோட வரவேற்க பூணூலை ஒரு கையில புடிச்சுட்டு காத்துண்டிருந்தா.... வந்த வண்டியெல்லாம் மாமல்லபுரம் பக்கம் தான் போனது....
ஆனா பாதியிலேயே திரும்பி அங்கங்க இருந்த ரிசார்ட்ஸ்க்குள்ளே நுழைஞ்சது...
ரங்கு : நுழைஞ்சு.
கதா : அங்க தான்டா நிறவெறிக்கெதிரான மாநாடே நடந்தது... தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள்லயிருந்து கலைச் சேவை(!) ஆற்றுவதற்காக முன்னாடியே வந்து சேர்ந்திருந்த கலை மாதர்களும், நம்மூரில் டாப் கிளாஸ் மாடல்கள் பலரும் சேர்ந்து... கூடி... ஆடி... அமெரிக்க சிப்பாய்களோட முடிவெடுத்திருக்காங்க. பிரபல ஹோட்டல்களில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு அந்தத் தனிக் கூட்டங்களை ஏற்பாடு பண்ண பலரும் முயற்சி யெடுத்து...
சுப்புனி : ஏன்னா! மாநாடுக்கு ஏன்ன தனித்தனி அறைகள்?
கதா : அடே ரங்கு... இந்த அபிஷ்டுக்கு எடுத்துச் சொல்லுடா... பொதுக் கூட்டம் போடுற இடத்தில தனிக்கூட்டம் போடுறதுன்னு விவேக் சொல்ற மாதிரி... அவாள்லாம் ஆய்வு பண்ண வேண்டாமோ (விஷமமாகச் சிரிக்கிறார்)
ரங்கு : ஏண்ணா! அப்படின்னா இதைத்தான் அந்தக் கேப்டன் வேற விசயம்.. வேற விசயம்னு சொல்லிண்டிருந்தானா?
இதெல்லாம், பத்திரிகைல வேற போட்டிருந்தானா?
கதா : நன்னா கொட்டையெழுத்தில போட்டு பெருமைப்பட்டான். இப்படி அவாள்லாம் வந்து போனதில இந்தியாவுக்கு அந்நியச் செலவாணி 36 கோடி ரூபாய்னு செய்தி வந்தது; அப்புறம் வருமானம் தானே!
ரங்கு : இப்படிப்பட்ட வருமானமெல்லாம் வந்தா மானம்னா போகும்.
கதா : நன்னாவே போகும், ஏற்கனவே இதே மாதிரி தாய்லாந்து போன்ற நாடுகளில் நடந்த இந்த மாதிரி மாநாடுகளைப் பத்தியும் இணைய தளங்கள்ல எழுதியிருக்காங்க...இனிமே சென்னையில நடந்ததையும் எழுதுவான். நட்புறவை வளர்க்க சென்னையைத் தேர்ந்தெடுக்க இது தான் காரணம்.வந்தவன் தங்கள் பணி முடிஞ்சு உடனே கடந்த 5ம் தேதியே கிளம்பிட்டான். அவன் கப்பலேறினதோட சேர்ந்து நம்ம மானமும்,

கப்பலேறிப் போயாச்சு,
செலாவணி வந்தாச்சு கண்ணம்மா...
நட்டநடு ராவெல்லாம்
ஆட்டம் போட்ட நாடாச்சு
பொன்னம்மா...பொன்னம்மா...

ஆக்கம்: கவிஞர் கல்லுக்கட்டியான்
ஊக்கம்: மணிமகன், இறைவி
இசை: கருணாஸ்
ரங்கு: கோவை சகா
சுப்புணி: கலையரசன்
உதவி: திருமகள், தி.புருனோ என்னாரெசு, வளவன்
"இனநலம் இசைக்குழு" வுக்காக
இயக்கம்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
நன்றி: உண்மை ஜூலை 16-31

60-ஆம் பதிவில்லையா? அதுதான் இந்த சிறப்புப் பதிவு!

கருத்துகள்

த.அகிலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏன் இதை நீங்கள் ஒரு ஒலிப்பதிவாக போடக்கூடாது
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அகிலன், மேலே உள்ள esnips இசைப்பானை சொடுக்கினால் பாடுவானே அந்தப் பயல்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
இதுக்குத்தான் மாலை நேரத்தில பதிவு போடக்கூடாதுங்குறதா?
இன்னும் யாரும் கேட்கலையா?
கவன ஈர்ப்புத் தீர்மானம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam