முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆச்சி மசாலாவில் ஆயாவின் கருத்து!

ஆச்சி மசாலா உங்கள் சாய்ஸ் நடத்தும் 'பெப்சி'உமா என்பவர் "இன்டர்நெட்-இல் புளக்கிங் என்ற பெயரில் மீடியா பீப்பளை பதிவர்கள் தாக்கிறது கொடுமை" என்று தனது முத்துக்களை உதிர்த்திருக்கிறார். இதை நமது சின்னக்குட்டி தனது பதிவில் போட்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள்!
"நாங்க மட்டும்தான் விமர்சனம்ங்கிற பேரில நன்னா கால் மேல கால் போட்டுண்டு பேசணும். அதுக்காகத் தான் எல்லா மீடியாலயும் நாங்களே இருக்கணும்-னு சொல்றோம். ஏதோ கையில கம்பியூட்டர் கிடைச்சிடுச்சின்னு நீங்கள்லாம் ஆரம்பிச்சுட்டா எப்படி?" அப்படிங்குறாரா உமா மாமி!" என்று நான் போட்ட பின்னூட்டத்திற்குக் கூட "இதுக்கெல்லாம் பாப்பாத்தி-ன்னு கிளப்பாதீங்க!" என்கிற ரீதியில் பதில் வந்திருக்கிறது.

இதற்கிடையில் 'செந்தழல் ரவி' "தற்சமயம் நான் வெளியூரில் இருப்பதால் உண்மைத்தமிழன், வரவணை, சுகுணா, ப்ரின்ஸ், லக்கிலூக், பொட்டீக்கடை போன்றவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு நடத்துவார்கள்" என்று பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். செய்யாமல் விடமுடியுமா? சரி, விசயத்திற்கு வருகிறேன்.
மாலன் மீதான பதிவர்களின் கொந்தளிப்பின் காரணமாகத்தான் உமா இவ்வாறு தனது பார்ப்பன புத்தியைக் காட்டியுள்ளார் என்றெல்லாம் ஒரு குறுகிய நோக்கம் கற்பிக்க மாட்டேன். ஏனென்றால், மாலன் சன் தொலைக்காட்சியில் இருந்தபோதும் கூட உமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அதிகாரம் அவருக்கு இருந்ததில்லை. அதனால் அது சிக்கல் இல்லை.
ஆனால்....
இதற்குப் பின்னால் இருப்பது நிச்சயம் பார்ப்பனீயம் தான் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டு என்ன செய்தியை மக்கள் பார்க்கவேண்டும்; எந்த நிகழ்ச்சியில் அவர்களின் கவனம் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கும் இடத்தில் பார்ப்பனர்கள்தான் இருக்கிறார்கள். "இந்தியாவில் வெறும் 8 சதவீதம் உள்ள உயர் ஜாதி இந்துக்கள் 71% இடங்களை ஊடகங்களில் ஆக்கிரமித்திருக்கிறார்கள்" (நன்றி: சுந்தரவடிவேல்)
இன்றைய இணைய ஊடகத்தின் வளர்ச்சி என்பது, தொலைக்காட்சிகளையும் காட்டிலும் பன் மடங்கு வேகமாக இருக்கிறது. அதைவிட பங்கேற்பாளர்களின் ஊடகமாக இருக்கிறது. யாரும் வெகு எளிதில் அணுகக்கூடிய, படைக்கக்கூடிய, தங்கள் கருத்துகளை பகிரக்கூடிய வாய்ப்பை இணையம் வழங்கியிருக்கிறது. இன்னின்ன கருத்துகளை இது மாதிரி எழுதினால்தான் எங்கள் ஊடகத்தில் இடம்பெறும் என்றெல்லாம் யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாத ஊடகமாக இருக்கிறது இணையம்.
நச்சுக்கருத்துகளும், முதலாளித்துவ சிந்தனைகளும் வெகு விரைவில் எதிலும் நுழைந்துவிடும். அதற்காக செலவு செய்யவும் அவை தயாராக இருக்கின்றன. ஆனால் மாற்று சிந்தனைகள் வருவது அவ்வளவு எளிதன்று. எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கும் இணைய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு மாற்று சிந்தனைகள் வளர்வதையும், அவை தங்களின் கட்டுப்பாட்டை தகர்க்கக்கூடியன என்பதையும் ஆதிக்கவாதிகள் அறியாமலில்லை. அதனால் அவற்றைத் தடுக்க, சிதைக்கவும் எந்த முயற்சியையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.
அந்தப்பணியை அமெரிக்கா முயன்று பார்க்கிறது. வலைப்பூக்கள் தடைசெய்யப்படுவதாக இந்தியாவில் எழுந்த சிக்கலெல்லாம் இதன் தொடர்ச்சிதான்.
அப்படி முடியாதோர் தங்கள் இயலாமையை வயிற்றெரிச்சலாகக் கொட்டுவார்கள் இல்லை யோசனை சொல்லுவார்கள். (இணையத்தில் நல்ல கருத்துகள் தான் இடம்பெறவேண்டும்; கும்மியெல்லாம் அடிக்கப்பிடாது என்று சொல்வோர், தாங்கள் இதழியல் துறையில் இருந்தபோது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை, பழைய பேப்பர் கடையில் கிடக்கும் குமுதமும், குங்குமமும் சொல்லிவிடும்.)
இன்றைய சூழலில் இணையத்தைக் கட்டுப்படுத்தமுடியாது என்பதால் இப்படி அவதூறுகளை வேண்டுமானால் அள்ளித் தெளிக்கலாம்.
எனவே முழுக்க தங்கள் ஆதிக்கம் உள்ள இடத்திலிருந்து அவர்கள் தர மறுப்பவற்றை, எங்கிருந்து கொண்டோ வெகு எளிதாக பிறர் தருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் அல்லவா? அதன் வெளிப்பாடுதான் இது...

குறிப்பு:
அப்புறம்... எனக்கு என்னமோ, "வலைதளங்களில் தன்னைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை என்ற வருத்ததின் காரணமாகத் தான் அந்த உளறல் என்றும், வலைதளங்களில் தான் இடம்பெறச் செய்த சூது என்றும் தோன்றுகிறது.." ஆயாவை இப்போதெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லையாமே.

மேலும்... இந்த நேரத்தில் நம்ம பாமரன் குமுதத்தில் எழுதிவரும் "படித்ததும், கிழித்ததும்" தொடரிலும் உமா இடம்பெற்றிருப்பது 'ஊடகத்தின் கவனம் தன்னை நோக்கி திரும்ப வேண்டும்' என்ற சூழ்ச்சியின் காரணமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. (பாமரன் என்ன சொன்னாரா பொறும்... அடுத்த பதிவில் வருகிறது)

கருத்துகள்

மஞ்சூர் ராசா இவ்வாறு கூறியுள்ளார்…
ஏதோ புரியறாப்பலெயும் குழப்பமாகவும் இருக்கிறது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பிடியெதுவும் சொல்லிப்பிட்டனா என்ன? குழப்பம் என்னன்னு கேட்டுப்புடுங்க ராசா!
அரை பிளேடு இவ்வாறு கூறியுள்ளார்…
சென்னை மவுண்ட் ரோடில் மாபெரும் கண்டன பேரணி நடந்ததா இல்லையா ? :)
செந்தழல் ரவி இவ்வாறு கூறியுள்ளார்…
சிங்கம்போல புறப்பட்டு கருத்துக்களை அள்ளி வீசியதுக்கு நன்றி...!!!!

பெப்சி உமா இ-மெயில் ஐ.டி இருக்கா ?????
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Even now in all high posts and high officials are only Brahmins...their intellectual power is really different from other caste people...so only these kind of posts you can do..and nothing more you can do against Brahmins....
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி... அரை பிளேடு, செந்தழல். பதிவர்களின் பேரணி என்றால் போக்குவரத்தை சரிசெய்வது கடினமாக இருக்கும் என்று, சென்னை ஆணையர் அனுமதி மறுத்திருக்கிறார்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//மாலன் சன் தொலைக்காட்சியில் இருந்தபோதும் கூட உமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அதிகாரம் அவருக்கு இருந்ததில்லை.//

பின்னே... வேறு யார் கட்டுப்பாட்டில் 'வைத்'திருந்தார்கள்?
அனானி அய்யங்கார் இவ்வாறு கூறியுள்ளார்…
அவா அவாளுக்கு முடிஞ்சதை செய்யுறா? நம்ம வழக்கம் போல் வாட அம்பி சிண்டு முடிவோம்
ஓசை செல்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தினமலம் அந்துமணி சுரேஷை விடவா நம் பதிவர்கள் எழுதிவிட்டார்கள். இல்லை தினமலம் சுரேஷ் படிக்காதவனா. அவா மட்டும் தான் பத்திரிக்கையில் எழுதுவா மத்தவங்க எல்லாம் அமுக்கிட்டு இருக்கனும்
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆச்சி மசாலா ஆயாவிற்கு மண்டைல மசாலா இல்லைனு வெளிச்சம் போட்டு காட்டிக்கிச்சு, , ஏற்கனவே சின்னகுட்டி பதிவில் நிறைய குமுறிட்டேன் ஆயாவை அதனால இப்போ இதோட விடுறேன்!
பாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
//மாலன் சன் தொலைக்காட்சியில் இருந்தபோதும் கூட உமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அதிகாரம் அவருக்கு இருந்ததில்லை.//

பின்னே... வேறு யார் கட்டுப்பாட்டில் 'வைத்'திருந்தார்கள்?


same doubt.........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…