முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காக்க காக்க கனகவேல் காக்க...

காக்க காக்க கனகவேல் காக்க...
நோக்க நோக்க ரோப் காரை நோக்க...
பார்க்க பார்க்க பழனி மலையிலே...
பாதியில் விழுந்து பலியான பக்தர்களை...

அங்கீகரிக்கப்பட்ட தமிழ்க் கடவுளான முருகனை தரிசிக்கச் சென்று, ரோப் காரில் பயணம் மேற்கொண்ட ஆவின் மேலாளர் சுப்பிரமணியம், அவரது மனைவி, மகள் உள்பட நால்வர் பலியாகி, ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். நானும் காலையிலிருந்து பார்க்கிறேன் தமிழ்மணத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு கண்டனம் கூடப் பதிவாகவில்லை. ரோப் கார் மரணம்- ஏனிந்த மவுனம்?


பழநி மலையில் பயங்கரம்
ரோப் கார் அறுந்து 4 பேர் பலி
250 அடி உயரத்தில் இருந்து விழுந்து பரிதாபம் 72 பக்தர்கள் கயிறு மூலம் பத்திரமாக மீட்பு

பழநி, ஆக.27: பழநி மலையில்250 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த ரோப்கார் திடீரென அறுந்து விழுந்ததில் தமிழ்நாடு ஆவின் பொது மேலாளர், திண்டுக்கல் ஆவின் நிர்வாக இயக்குனர் உட்பட 4 பேர் பலியாயினர்.சென்னையை சேர்ந்த தமிழ்நாடு ஆவின் பொது மேலாளர் சுப்பிரமணியம் (50), நேற்று தனது குடும்பத்துடன் பழநி முருகன் கோயிலுக்கு வந்திருந்தார். மாலை 5 மணிக்கு மலைக்கோயிலுக்கு ரோப் காரில் அவர்கள் சென்றனர். ரோப் காரின் 3வது பெட்டியில் சுப்பிரமணியமும், அவருடைய மனைவி அமுதாவும் (45) பயணம் செய்தனர். அவர்களுடன் சென்ற திண்டுக்கல் ஆவின் நிர்வாக இயக்குநர் வடமலை செட்டி (53), சுப்பிரமணியத்தின் மகள் நித்யா (25), தங்கை மகள் தீபா (13) ஆகியோர் அடுத்த பெட்டியில் பயணம் செய்தனர்.
சுப்பிரமணியம் சென்ற பெட்டி, மலை உச்சியை அடைந்தபோது, ரோப்காரை கம்பி வடத்தில் இணைத்திருந்த உருளை திடீரென உடைந்தது. இதனால், ரோப் கார் பெட்டி வேகமாக பின்நோக்கி வந்தது. வந்த வேகத்தில், வடமலை செட்டி பயணம் செய்த பெட்டியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கம்பி வடத்துடனான இணைப்பு முழுவதும் அறுந்து, சுப்பிரமணியம் இருந்த பெட்டி 250 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில் இருந்த சுப்பிரமணியமும் மனைவி அமுதாவும் அதே இடத்தில் இறந்தனர்.சுப்பிரமணியம் இருந்த பெட்டி மோதிய வேகத்தில், வடமலை செட்டி அமர்ந்திருந்த பெட்டியின் கதவுகள் திறந்தன. அதில் இருந்த 3 பேரும் விழுந்தனர். 250 அடி உயரத்தில் இருந்து பாறை மீது விழுந்ததில் நித்யாவும், வடமலை செட்டியும் அதே இடத்தில் இறந்தனர். தீபா படுகாயமடைந்தார்.
விபத்து நடந்த உடன், ரோப் கார் இயக்கத்தை ஊழியர்கள் நிறுத்தினர். இதனால், மேலும் நடக்க இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், இதனால் மலை உச்சிக்கு சென்றுக் கொண்டிருந்த மற்ற 18 பெட்டிகளும் அந்தரத்தில் நின்றன. அதில் இருந்த பக்தர்கள் பீதியில் அலறினர்.
விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலைபேட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மலை அடிவாரத்தில் இருந்து 650 மீட்டர் உயரத்தில் பாறை மீது விழுந்து இறந்து, புதர்களுக்கு இடையில் கிடந்த 3 பேர் சடலங்களையும் படுகாய மடைந்த தீபாவையும் அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர். தீபா, பழநி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் கோவை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெட்டிகளில் கயிறு ஏணி மூலம் ஏறி, அதில் இருந்த 72 பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். கோட்டாட்சியர் கோபால கிருஷ்ணன், பழநி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் அதிகாரிகள், போலீசார் முகாமிட்டு மீட்பு பணியை மேற்பார்வையிட்டனர். இரவு 9 மணி வரை மீட்பு பணிகள் நடந்தன.
தமிழகத்திலேயே முதன்முறையாக பழநி கோயிலில்தான் ரோப் கார் வசதி செய்யப்பட்டது. கொல்கத்தாவை சேர்ந்த ரோப் கார் ரிசார்ட்ஸ் நிறுவனத்தினர், ரூ.4.5 கோடியில் இதை நிறுவினர். கடந்த 2004 நவம்பரில் ரோப் கார் சேவை தொடங்கியது.
இந்த சேவை தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளில் ரூ.4.5 கோடி வசூலானது. கடந்த ஜூன் மாதம் பராமரிப்பு பணிக்காக ரோப் கார் இயக்கம் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த கம்பி வடம் மாற்றப்பட்டது. பெட்டிகளில் இருந்த பழுதுகளும் நீக்கப்பட்டன. 3 வாரத்துக்கு முன்புதான் ரோப் கார் மீண்டும் இயங்க துவங்கியது. இந்நிலையில், ரோப் கார் அறுந்து விழுந்து 4 பேர் பலியாகியுள்ளதால், பழநியில் பதற்றம் நிலவுகிறது.
நன்றி: தினகரன் (26-8-07)
வருத்ததிற்குரிய செய்திதான் இது... ஆனாலும் கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைப்படி.....
மயில்வாகனன் என்ன மயிர் பிடுங்கச் சென்றானா? இதனால் உடனடியாக கடவுள் மறுப்பாளராக் மாறிவிடுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. கொஞ்சமாவது சிந்தியுங்கள்... உலகைச் சுற்றும் கடவுள் தன் கைக்கெட்டும் தூரத்தில் கூடக் காக்க முடியவில்லை என்றால்.... காக்க காக்க பாடல் எதற்காக?
காக்க காக்க கனகவேல் காக்க...
அது சரி.. தனது வேலையே பறிகொடுத்துவிட்டு வெறுங்கையோடு நின்றவர்தானே முருகப்பெருமான்!! வெட்கம்..வெட்கம்....

கருத்துகள்

கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
//அது சரி.. தனது வேலையே பறிகொடுத்துவிட்டு வெறுங்கையோடு நின்றவர்தானே முருகப்பெருமான்!! வெட்கம்..வெட்கம்....//

இது சூப்பர்.

***************

மற்றதற்கு கருத்து சொல்ல ஒண்ணும் இல்லை. பக்தர்களின் மனதை புண்படுத்த விரும்பவில்லை.

இறந்து போன பக்தர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !
TBCD இவ்வாறு கூறியுள்ளார்…
அதுக்கெல்லாம் வசனம் ரெடி....
"அவங்க விதி முடிஞ்சிப் போச்சி..! அதுல பாருங்க தப்பி பிழைச்சானே அந்த பையன்..அவனுக்கு நேரம் நல்லா இருக்குதாம்..!"
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
//பக்தர்களின் மனதை புண்படுத்த விரும்பவில்லை.//
இதில் புண்படுத்துவதற்கு ஒன்றுமில்லை கோவியாரே! உண்மையில் நானே மனம் நொந்து தான் எழுதியுள்ளேன். இன்னும் என் சமூகம் ஏமாந்து நிற்கிறதே என்று!
சரியாச் சொன்னீங்க tbcd...

ஒருபக்கம் முட்டாள் தனம்... இன்னொருபக்கம் ஹைதராபாத்தில் மதவெறி! இன்னும் மதம் பண்படுத்தும் என்று எண்ணுவது எந்த வகையில் அறிவுடைமை!
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
பழனி முருகனுக்கு எனது கண்டனங்கள்!
த.அகிலன் இவ்வாறு கூறியுள்ளார்…
முருகனே கோமணத்தோட இருக்கிறார். எண்டாலும் பரவாயில்லை எனது கண்டனங்கள்
Jazeela இவ்வாறு கூறியுள்ளார்…
//காலையிலிருந்து பார்க்கிறேன் தமிழ்மணத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு கண்டனம் கூடப் பதிவாகவில்லை.// எப்படியும் நீங்க பதிவு போடுவீங்கன்னுதான் நாங்க விட்டுட்டோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam