ஆச்சி மசாலா உங்கள் சாய்ஸ் நடத்தும் 'பெப்சி'உமா என்பவர் "இன்டர்நெட்-இல் புளக்கிங் என்ற பெயரில் மீடியா பீப்பளை பதிவர்கள் தாக்கிறது கொடுமை" என்று தனது முத்துக்களை உதிர்த்திருக்கிறார். இதை நமது சின்னக்குட்டி தனது பதிவில் போட்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள்!
"நாங்க மட்டும்தான் விமர்சனம்ங்கிற பேரில நன்னா கால் மேல கால் போட்டுண்டு பேசணும். அதுக்காகத் தான் எல்லா மீடியாலயும் நாங்களே இருக்கணும்-னு சொல்றோம். ஏதோ கையில கம்பியூட்டர் கிடைச்சிடுச்சின்னு நீங்கள்லாம் ஆரம்பிச்சுட்டா எப்படி?" அப்படிங்குறாரா உமா மாமி!" என்று நான் போட்ட பின்னூட்டத்திற்குக் கூட "இதுக்கெல்லாம் பாப்பாத்தி-ன்னு கிளப்பாதீங்க!" என்கிற ரீதியில் பதில் வந்திருக்கிறது.
இதற்கிடையில் 'செந்தழல் ரவி' "தற்சமயம் நான் வெளியூரில் இருப்பதால் உண்மைத்தமிழன், வரவணை, சுகுணா, ப்ரின்ஸ், லக்கிலூக், பொட்டீக்கடை போன்றவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு நடத்துவார்கள்" என்று பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். செய்யாமல் விடமுடியுமா? சரி, விசயத்திற்கு வருகிறேன்.
மாலன் மீதான பதிவர்களின் கொந்தளிப்பின் காரணமாகத்தான் உமா இவ்வாறு தனது பார்ப்பன புத்தியைக் காட்டியுள்ளார் என்றெல்லாம் ஒரு குறுகிய நோக்கம் கற்பிக்க மாட்டேன். ஏனென்றால், மாலன் சன் தொலைக்காட்சியில் இருந்தபோதும் கூட உமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அதிகாரம் அவருக்கு இருந்ததில்லை. அதனால் அது சிக்கல் இல்லை.
ஆனால்....
இதற்குப் பின்னால் இருப்பது நிச்சயம் பார்ப்பனீயம் தான் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டு என்ன செய்தியை மக்கள் பார்க்கவேண்டும்; எந்த நிகழ்ச்சியில் அவர்களின் கவனம் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கும் இடத்தில் பார்ப்பனர்கள்தான் இருக்கிறார்கள். "இந்தியாவில் வெறும் 8 சதவீதம் உள்ள உயர் ஜாதி இந்துக்கள் 71% இடங்களை ஊடகங்களில் ஆக்கிரமித்திருக்கிறார்கள்" (நன்றி: சுந்தரவடிவேல்)
இன்றைய இணைய ஊடகத்தின் வளர்ச்சி என்பது, தொலைக்காட்சிகளையும் காட்டிலும் பன் மடங்கு வேகமாக இருக்கிறது. அதைவிட பங்கேற்பாளர்களின் ஊடகமாக இருக்கிறது. யாரும் வெகு எளிதில் அணுகக்கூடிய, படைக்கக்கூடிய, தங்கள் கருத்துகளை பகிரக்கூடிய வாய்ப்பை இணையம் வழங்கியிருக்கிறது. இன்னின்ன கருத்துகளை இது மாதிரி எழுதினால்தான் எங்கள் ஊடகத்தில் இடம்பெறும் என்றெல்லாம் யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாத ஊடகமாக இருக்கிறது இணையம்.
நச்சுக்கருத்துகளும், முதலாளித்துவ சிந்தனைகளும் வெகு விரைவில் எதிலும் நுழைந்துவிடும். அதற்காக செலவு செய்யவும் அவை தயாராக இருக்கின்றன. ஆனால் மாற்று சிந்தனைகள் வருவது அவ்வளவு எளிதன்று. எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கும் இணைய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு மாற்று சிந்தனைகள் வளர்வதையும், அவை தங்களின் கட்டுப்பாட்டை தகர்க்கக்கூடியன என்பதையும் ஆதிக்கவாதிகள் அறியாமலில்லை. அதனால் அவற்றைத் தடுக்க, சிதைக்கவும் எந்த முயற்சியையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.
அந்தப்பணியை அமெரிக்கா முயன்று பார்க்கிறது. வலைப்பூக்கள் தடைசெய்யப்படுவதாக இந்தியாவில் எழுந்த சிக்கலெல்லாம் இதன் தொடர்ச்சிதான்.
அப்படி முடியாதோர் தங்கள் இயலாமையை வயிற்றெரிச்சலாகக் கொட்டுவார்கள் இல்லை யோசனை சொல்லுவார்கள். (இணையத்தில் நல்ல கருத்துகள் தான் இடம்பெறவேண்டும்; கும்மியெல்லாம் அடிக்கப்பிடாது என்று சொல்வோர், தாங்கள் இதழியல் துறையில் இருந்தபோது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை, பழைய பேப்பர் கடையில் கிடக்கும் குமுதமும், குங்குமமும் சொல்லிவிடும்.)
இன்றைய சூழலில் இணையத்தைக் கட்டுப்படுத்தமுடியாது என்பதால் இப்படி அவதூறுகளை வேண்டுமானால் அள்ளித் தெளிக்கலாம்.
எனவே முழுக்க தங்கள் ஆதிக்கம் உள்ள இடத்திலிருந்து அவர்கள் தர மறுப்பவற்றை, எங்கிருந்து கொண்டோ வெகு எளிதாக பிறர் தருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் அல்லவா? அதன் வெளிப்பாடுதான் இது...
குறிப்பு:
அப்புறம்... எனக்கு என்னமோ, "வலைதளங்களில் தன்னைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை என்ற வருத்ததின் காரணமாகத் தான் அந்த உளறல் என்றும், வலைதளங்களில் தான் இடம்பெறச் செய்த சூது என்றும் தோன்றுகிறது.." ஆயாவை இப்போதெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லையாமே.
மேலும்... இந்த நேரத்தில் நம்ம பாமரன் குமுதத்தில் எழுதிவரும் "படித்ததும், கிழித்ததும்" தொடரிலும் உமா இடம்பெற்றிருப்பது 'ஊடகத்தின் கவனம் தன்னை நோக்கி திரும்ப வேண்டும்' என்ற சூழ்ச்சியின் காரணமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. (பாமரன் என்ன சொன்னாரா பொறும்... அடுத்த பதிவில் வருகிறது)

கருத்துகள்
பெப்சி உமா இ-மெயில் ஐ.டி இருக்கா ?????
பின்னே... வேறு யார் கட்டுப்பாட்டில் 'வைத்'திருந்தார்கள்?

same doubt.........