முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.


பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையிலேயே திருப்பி, மீண்டும் வண்டி பாலத்தருகே வந்தது. பிறகு மீண்டும் திரும்பி வண்டி தொடர்வண்டி நிலையம் சென்றது.

'அய்யா ஏன் இப்படி செய்தார்?' என்று தொண்டர்களுக்கு ஒரே சந்தேகம். அய்யாவிடம் கேட்கின்றனர். பெரியார் விளக்கம் சொன்னார்: "நாம் பாலத்தைக்கடக்கும் போது என் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டது. அது நல்ல புது செருப்பு. ஆனால் ஒன்று தான் வீசப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டு நானும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னொரு செருப்பை மட்டும் வைத்துக் கொண்டு வீசியவரும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தான் வண்டியைத் திருப்பச் சொன்னேன். மீண்டும் போனபோது, அந்த இன்னொரு செருப்பையும் வீசிவிட்டார். இதோ இப்போது ஒரு ஜோடி செருப்புக் கிடைத்துவிட்டது". அவர்தான் பெரியார். அப்போது பெரியாரை வழியனுப்பச் சென்றவர்களில் அன்று 11 வயதுச் சிறுவனான (இன்றைய திராவிடர்கழகத் தலைவர்) கி.வீரமணியும், பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் ஒருவரான கவிஞர் கருணானந்தமும் முக்கியமானவர்கள்.

ஆண்டு 1972: ஆகஸ்ட் 13-ஆம் நாள் அதே மஞ்சைநகர் பகுதியில் மாபெரும் மக்கள்திரள். அன்றறய தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் சி.பி.சிற்றரசு தலைமையில், தந்தை பெரியார் அவர்களும் பங்கேற்க, (அன்றைக்கும்) தமிழக முதல்வர் கலைஞர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.

எந்த இடத்தில் பெரியாரின் மீது பாம்பும், செருப்பும் வீசப்பட்டதோ, அதே கடிலம் பாலத்தருகே எழுப்பப்படிருந்த பெரியார் சிலையைத் திறக்கின்ற விழாதான் அது. இரண்டு நிகழ்ச்சிகளிலும் உடனிருந்த ஆசிரியர் வீரமணி வரவேற்புரையாற்ற, அய்யா, சி.பி.சி, கலைஞர் ஆகியோர் உரையாற்ற, அன்பில் தர்மலிங்கம், ப.உ.சண்முகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்க விழா சிறப்பாக நடைபெற்றது. முதல்வர் கலைஞர் தந்தை பெரியாரின் சிலையைத் திறந்து வைத்தார். சிலையின் பீடத்தில் இரண்டு நிகழ்ச்சிகளையும் குறிக்கின்ற கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டது.

இரண்டு நிகழ்விலும் பங்கேற்ற இன்னொருவரான கவிஞர் கருணானந்தம் இது குறித்து எழுதிய வரிதான்...

"செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்"

செருப்பு வீசப்பட்ட பெரியாருக்கு மட்டுமல்ல, அதைவிடக் கடுமையாக 'அர்ச்சனை' செய்யப்பட்ட அவர் கொள்கைகள் இன்று சிறப்புடன் அரங்கேறி வருகின்றன; சட்டமாகின்றன என்பது தான் வரலாற்றுக் குறிப்பு!

யதார்த்தமாக, என்னிடம் உள்ள தந்தை பெரியாரின் பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் கடலூர் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா படங்கள் பார்வையில் பட்டன.

அந்தக் கல்வெட்டு சொன்ன சேதிதான் மேலே நான் விரிவாகக் குறிப்பிட்டது.

கல்வெட்டு சொன்ன தேதி.
1944 ஜூலை 29


குறிப்பு: புகைப்படங்களைப் பார்த்த வியப்பில் இந்தக்கட்டுரையை எழுதத் தொடங்கியது 29-ஜூலை2007 இரவு மணி எட்டு. மிகச்சரியாக 63-ஆண்டுக்குமுன் நடந்த இந்த நிகழ்வுக்கான ஆதாரங்களை எடுத்து எழுதி முடித்தது ஜூலை 30 காலை.

நன்றி: 1. 'தந்தை பெரியார்' - காவியக்கவிஞர் கருணானந்தம்
2. 'உலகத்தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு': பாகம்-2 - தமிழர் தலைவர் கி.வீரமணி

கருத்துகள்

PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
இது கவன ஈர்ப்புத் தீர்மானமுங்கோ!
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
சிலிர்ப்பாக இருக்கிறது இப்பதிவை வாசிக்கும் போது! குறிப்பாக

//புகைப்படங்களைப் பார்த்த வியப்பில் இந்தக்கட்டுரையை எழுதத் தொடங்கியது 29-ஜூலை2007 இரவு மணி எட்டு. மிகச்சரியாக 63-ஆண்டுக்குமுன் நடந்த இந்த நிகழ்வுக்கான ஆதாரங்களை எடுத்து எழுதி முடித்தது ஜூலை 30 காலை.//

யதேச்சையாக அமைந்த இந்த மேட்டர்!!!
dondu(#11168674346665545885) இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப சத்தியமான விஷயம். ஒன்றுக்கு எதிர்ப்பு வலுக்க வலுக்கத்தான் அதன் பிரபலமும் கூடும். பெரியார் செருப்புகளை சேர்த்து வீசியவரின் நோக்கத்ததைக் குலைத்தார். அப்படித்தான் எதிர்ப்பவர்களை கையாள வேண்டும்.

அதே போலத்தான் பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்க உடைக்க தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்தன. பெரியாரின் நாத்திகக் கொள்கைகள் கொச்சையாக எடுத்து கூறப்பட்டதாலேயே அவை மக்களிடம் எடுபடவில்லை.

பெண்ணுரிமை பற்றி அவர் கூறிய புரட்சிக் கருத்துக்களும் எடுபடவில்லை. அவரது சீடர்கள் தத்தம் வீட்டில் ஆணாதிக்கத்துடன் நடந்து கொள்வதும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் அவற்றை பெரியாரே தன் வீட்டில் கடைபிடிக்கவில்லை என்பதை தன் முதல் மனைவி இறந்தபோது எழுதிய கட்டுரையில் காணலாம். இது பற்றி நான் போட்ட பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html
அதில் அவர் எழுதுகிறார்:
"எப்படியிருந்தாலும், நாகம்மாளை ‘மணந்து' வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.

நான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.

பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்".

அன்புடன்,
டோண்டு ராகவன்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்ஸ்!
மிக நல்ல பதிவு!!
பட ஆதாரங்கள்...அருமை!
நன்றி
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
நேரே பார்த்தபோது உணர்ச்சிகரமாக இருந்தது.
பெரியாரின் எதிரிகட்கு நல்ல படிப்பினை.
மனித நேயப் பண்பாளர் என்பதை உணர வைக்கிறார்.
இப்போதும் பெரியாரை எதிர்ப்பவர்கள் மனித நேயத்தை எதிர்க்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள மறுப்பது தான் வேடிக்கை.அவமானங்களை அனுபவித்தால்தான் அதன் வேதனை புரியும்.
படித்துவிட்ட அறிவு ஜீவிகள் அவமான்த்தையேக் கூடப் பெருமையாக நினைப்பது வேதனை கலந்த வேடிக்கை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது கூடவாப் புரிந்து கொள்ள முடியாதது?
திரு இவ்வாறு கூறியுள்ளார்…
பெரியாரைப் பற்றி நல்ல ஒரு தகவல் இது பிரின்ஸ்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.