முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’தமுக்கு’ வீரமணி: ஆசிரியரின் அறிக்கையும், அலர்ஜிக்காரர்களின் அரிப்பும்!


தமுக்கு வீரமணி என்று பட்டம் தருகிறார்களாம்! அதற்கு ஆதரவு தந்து கை தூக்குகின்றனராம் அலர்ஜிக்காரர்கள்! http://www.facebook.com/photo.php?fbid=166589886723898&set=a.132067643509456.20892.100001186622923&comments

தமுக்கு எங்கள் ஒடுக்கப்பட்டோரின் இசைக்கருவி தான்! அதைச் சுமப்பதிலும் அடிப்பதிலும், அதன் மூலம் அடைமொழிபெயர் பெறுவதிலும் கூட எங்களுக்கு ஒன்றும் மனஒதுக்கீடு இல்லை! இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெயருக்கு ஒரு பொருத்தமும், கூடவே வரலாறும் உண்டு!

”1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா உத்தரப்பிர தேச அரசு சார்பில் மூன்று நாள்கள் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதுமிருந்தும் மக்கள் லட்சக்கணக்கில் வந்து குவிந்தனர். இதனைப் பொறுக்க மாட்டாத ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்திராசாமி பின்னணியில் பிள்ளையார் பால் குடித்ததாக இந்தியா முழுமையும் பரப்பினர். இது புரட்டு என்பது நிரூபிக்கப்பட்டது பிள்ளையார் கொழுக்கட்டை தின்றால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு என்று அன்றைய திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி. வீரமணி அவர்கள் சென்னை அண்ணா சாலையில் தமுக்கு (டாம்டாம்) அடித்துப் பிரச்சாரம் செய்தார்" என்பது வரலாறு.

அதனால் பகுத்தறிவைப் பரப்பவும், இனத்தின் நலனுக்காகவும் தமுக்கடிப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை! ஜால்ரா அடிக்கிறார்; பூசாரி வேலை செய்கிறார்; ராஜகுருவாக இருக்கிறார்; மேலவைக்குப் போகிறார்; பொம்மை முதலமைச்சராகிறார்... இன்னும் என்னென்ன அரிப்போ அவ்வளவையும் தினமலம் உள்ளிட்ட பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதி சொறிந்து கொண்டிருந்தன. இப்போது அந்தப் பணியில் தினமலத்தின் புதல்வர்கள் நாங்கள் என்று புறப்பட்டிருப்போர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது கிடக்கட்டும். 

தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் என்ன செய்வது என்ற கவலை யாருக்கு இருக்கிறதோ இல்லையோ, அரைவேக்காடுகளுக்கு நிறையவே இருக்கிறது. காரணம் இவர்களின் நோக்கம் காங்கிரசை வெறுப்பதும் இல்லை; வேரறுப்பதும் இல்லை. திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதும், அதற்கெதிராக செயல்படுவதும்தானே!

அதை விட முக்கியமாக ”எங்கே காங்கிரஸ் விலகி, அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் நம்ம பொழப்பு என்னாவது” என்கிற ரீதியில், மூணு சீட்டு பாண்டியன் கட்சிக்கும், Y, U நாம ’மார்க்’சீட்டுகளுக்கும் கலக்கம் உண்டாகியிருப்பது தெரிகிறது. வை.கோவுக்கு அந்தச் சிக்கல் இல்லை. எங்கிருந்தாலும் ஜெயிக்கப்போவதில்லை; மொத்தமே ரெண்டு பேர் தான் என்பதால், கூட இருப்பவர்களுக்கு சீட்டு வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்ற கவலையும் இல்லை.

ஆசிரியர் விடுத்த அறிக்கை காரணமாக, நிறைய பேருக்கு அரிக்க ஆரம்பித்திருக்கிறது.

அலர்ஜிக்காரர்கள் அரித்துக் கொண்டிருக்கட்டும்! நாங்கள் தமுக்கு அடித்துக் கொண்டிருக்கிறோம்.


பிள்ளையார் பால் குடிப்பதாகக் கிளப்பிவிடப்பட்ட புரளியை எதிர்த்து
தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்த தமிழர் தலைவர் கி.வீரமணி (செப்டம்பர் 25, 1995)

கருத்துகள்

நியோ இவ்வாறு கூறியுள்ளார்…
காதுகள் குறைவாக இருக்கும் நம் சமூகத்தில் தமுக்கின் ஒலி ஆதிக்க எண்ணவாதிகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில என்ன ஆச்சர்யம்!... தமுக்கின் ஒலியில் கிழக்கு ஆறாம் முறை மீண்டும் உதிக்கும்!!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…