முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்த நாள் என் நினைவில் இருக்கிறது...

அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

இன்றோ...
நாளையோ...
விடியும்
எங்கள் வாழ்வு என்று
வானோக்கியிருந்த
எங்களை
இருட்டு வந்து
சூழ்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

பதுங்குவது
பாய்வதற்கே என்று
போரின்
நாட்குறிப்புகளைப்
புரட்டிப் பார்த்து
நிம்மதி கொண்டிருந்த
எங்களுக்கு
நாளை குறிக்க
தாளே இல்லை என்ற
குறிப்பு வந்து சேர்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

'மக்களைக் காக்க
நாங்கள் இருந்த
நாள் போக...
எங்களைக் காக்க
மக்களா?
எங்கள் துவக்குகள்
மௌனிக்கும்'
என்ற குரல் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

"வெள்ளைக் கொடி
ஏந்தினாலும்
கொல்லுவோம்...
தமிழர்களை
கடைவாயில்
மெல்லுவோம்..."
-கொக்கரித்த கொடூரனின்
ரத்தம் வடிந்த
புன்னகை கண்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

தந்தையை..
தமையனை..
கணவனை...
களத்திற்குத் தந்து
தனயனை..
களத்திற்கனுப்பிய
தாய் போல்..
"எம் பிள்ளைகளை
நாட்டுக்கே கொடுத்திட்டனப்பா"
என்ற எம் தலைவனின்
பெருமிதம் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

கள நிலைக்குத்
திரையிட்டு
எம் அரிப்புக்கு
சொறிந்துவிட்ட
வாய்ப்பந்தல்
வீரர்களின்
பொய்கள் வெளித்தெரிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

இதுதான் தருணம் என
இந்தியா இளிக்க...
வருவாயில் பங்குபோட
பாக் சிரிக்க...
போதுமா ஆயுதம் என
சீனம் கொடுக்க...
ஒன்றும் நடவாது போல்
உலகமே பார்க்க...
ஓர் இனமே
இல்லாதொழிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

தாய்நாடென்ற
கனவும் கூட
கொடூரமானதென்று
ஊளையிட்டபடி
ஊடக நரிகள்
பிணங்களைப்
பார்த்து
வயிறு நிறைந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

வாய்க்காலில்
குருதியோடிய
அந்த நாள்...

பெருவெடிப்பு
நிகழ்ந்த
அந்த நாள்...

கனவுகள்
பாஸ்பரசில் கரைந்த
அந்த நாள்...

துரோகங்கள்
சூழ்ந்த...

நினைவுகள்
மரத்த...

மரணமே
ஓலமிட்ட...

இனமே
அழிந்துபட்ட...

அந்த நாள்...
அந்த நாள்...
அந்த நாள்...

என் நினைவில் இருக்கிறது...
இருக்கும்...

மண்ணில்
என் எலும்பு
கரையும் வரை...
என் ஊன்
கலக்கும் வரை...
எம்மினத்தின்
கடைசி உயிர்
இருக்கும் வரை...
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...

நந்திக்கடலில்
புலிக்கொடி
பறக்கும்
நாள்வரை...
அதைக் கடந்தும்
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...

கருத்துகள்

Joe இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கவிதை பிரின்ஸ்.

தலை குனிந்து அழுவதைத் தவிர வேறென்ன செய்வதென்று தெரியவில்லை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Why is this son of a bitch attempting to write poetry?It is pathetic.
VijayaRaj J.P இவ்வாறு கூறியுள்ளார்…
அந்த நாளை யாரும் மறக்க முடியாது..

மறக்கவும் கூடாது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நாங்கள் மறக்க மாட்டோம் பிரின்ஸ் தயவு செய்து நீங்கள் மறந்துவிடுங்கள். இனிமேல் தமிழனுக்காக எங்கும் குரல் கொடுக்க வேண்டாம் முடிந்தால் உங்கள் பகுத்தறிவு கருத்துகளை மற்றும் பரப்பவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…