முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடரும் திரிபுகள்! - தப்பிக்குமா விக்கிபீடியா?

ஊடகங்களை ஆக்கிரமத்திருந்த பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மட்டுமின்றி, அதன் தலைவர்களது வாழ்க்கை வரலாற்றையும் திரித்து, மறைத்து வெளியிடுவதில் செவ்வனே செயலாற்றி வந்தன. அத்தகைய ஊடகங்களை நம்பிப் படித்துவந்த நம் மக்களும் இதூதான் உண்மை என்றெண்ணி தவறான செய்திகளை மேலும் பரப்பினர்.

அப்படி, தந்தை பெரியாரின் கருத்துகளை வெட்டி, ஒட்டி, முன் பின் சேர்த்து, அவர் சொன்ன கருத்தை அந்தக் காலத்தோடு பொருத்திப் பார்க்கவிடாமல் தவறான பொருள்படும்படி வெளியிடுவதில் தினமலர், துக்ளக் உள்ளிட்டவற்றிற்கு பெரும்பங்கு உண்டு.

அவ்வப்போது சில்லறைப் பொய்களைக் கசியவிட்டு, அதன் மூலமும் சுகம் காணும் அவர்களின் வாடிக்கை. பூணூலைக் கொண்டு முதுகு சொறிவதைவிட அண்மைக் காலமாக இதுதான் அவர்களுக்கு மிகவும் பிடித்தது. இத்தகைய கும்பல் தான் முதலில் இனையத்தைக் கைப்பற்றி, தவறான செய்திகளை வெளியிட்டுவந்தது.

விக்கிபீடியா தளம் பொதுவானதும், ஒப்பன் சோர்ஸ் தன்மையிலானதும் என்பதால், அதில் புகுந்து கொண்டு தந்தை பெரியார் வரலாற்றில் கை வைக்கும் வேலையையும் அவர்கள் மிக்க சிரத்தையுடன் செய்து வருகிறார்கள். 2004-இல் ஒரு சிறிய அறிமுகமாக இரண்டு வரிகளில் இடம்பெற்றிருந்த பெரியாரின் வரலாற்றுப் பக்கத்தப் பார்த்ததும், உடனடியாக அதில் மேலதிக தகவல்களை இணைத்தேன். மேலும் பெரியார் தொடர்பான உரிய சுட்டிகளையும் இணைப்புக் கொடுத்தேன். அதன் பின் அவ்வப்போது பார்க்கும்போது தகவல்கள் மாறியிருக்கும், புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றில் சரியான தகவல்கள் இணைக்கப்படும்போது மகிழ்வோமேயானால், அடுத்த சில தினங்களில் ஏறுக்கு மாறாய் பெரியாரை கொச்சைப்படுத்தும் படி வரலாறு திரிக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆடு, புலி ஆட்டம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

முதலில் 2004-ல் நல்லதொரு அறிமுகத்தை வெறும் பார்வையாளனாக இருந்து தந்து, பின்னர் விக்கிபீடியாவின் உறுப்பினராகி அதன் மூலமும் செயல்பட்டோம். நம் நண்பர்கள் பலரும் இவ்வாறு திருத்தங்களை அவ்வப்போது சுட்டிக் காட்டியும், மேற்கொண்டும் வந்திருக்கிறார்கள்.

இந்த மூன்றாண்டுகளில் இரண்டாண்டு போராட்ட வரலாறு இங்கே காணக்கிடைக்கிறது. எத்தனை முறை எத்தனை பேரால் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை இதைப் பார்த்தால் தெரிந்துகொள்ளமுடியும்.
பெரியாரை வெறும் இந்து மத எதிர்ப்பாளராகவும், பார்ப்பன எதிர்ப்பாளராகவும், வன்முறையாளராகவும் காட்டி பொய்த் தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் தோழர் ஒருவர் சுட்டிக்காட்டியதைப் பார்த்து, மீண்டும் இந்த ஆடுபுலி ஆட்டத்திற்கு தயாரானபோது, "இந்தக் கட்டுரை தொடர்பாக அடிக்கடி விவாதம் எழுதுவதால், திருத்துவதிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தொடர்ந்து வரும் விவாதத்தில் பங்கெடுக்குமாறு வேண்டுகோளும் விடப்பட்டிருக்கிறது. முழுமையான, முற்றிலும் சரியான ஆதரங்களோடு உள்ள தகவல்கள் நம்மிடம் இருந்தும் அவற்ரை சரிசெய்யமுடியாத நிலை உள்ளது.

தன் இறுதிநாள் வரை ஜாதி எதிர்ப்பாளராக வாழ்ந்த பெரியாரை - 'ஈ.வே.ராமசாமி நாய்க்கர்' என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். இன்றும் பெரியாரை இப்படி கொச்சைப்படுத்தும் இந்தப் பாங்கு, தினமலர், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றோருக்கு இருக்கிறது. அந்தத் திரிபு வாதிகள் கூட்டத்தின் இன்னொரு பணிதான் இது.

பெரியார் (Periyar) என்பது 'பெரியாறு' (Periyar river) ஆற்றைக் குறிப்பதால் பெரியார் என்ற பெயர் ஈ.வெ.ராமசாமி என்று மாற்றப்பட்டிருப்பதாக விவாதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. "பெரியார் என்ற சொல் தந்தை பெரியாரைத் தான் அடையாளப் படுத்துகிறது; காந்திக்கு இணையாக அரசால் அவர் போற்றப்படுவதை பாருங்கள்" என்று இணைப்போடு ஒருவர் எழுதியிருக்கிறார். இன்னும் பெரியார் நாய்க்கராகவே அவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்.

வழக்கமான பல்லவிகளான, "அவர் இந்து மதத்தை மட்டும் எதிர்த்தார்" "அவர் பார்ப்பன எதிரி..." என்றெல்லாம் புலம்புவதோடு வன்முறை இயக்கமாக திராவிடர் கழகத்தைக் காட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

ராஜாஜியைக் கொல்ல தி.க.வினர் சதி செய்ததாகக் கூறுகிறது ஒரு செய்தி.

//Later, in regards to a DK member's attempt to assassinate Rajagopalachari, he "expressed his abhorrence of violence as a means of settling political differences".//

//EVR's followers have broken temple icons, cut sacred threads and tufts from Brahmin priests, and have often portrayed Brahmins in the most derogatory manner in their meetings and magazines (see http://www.viduthalai.com/ and http://www.unmaionline.com/ - both in Tamil language).//

இன்னும் ஏராளமான புரட்டுச் செய்திகளோடு, வேறு யாரும் மாற்றம் செய்யமுடியாதபடி தடுக்கப்பட்ட பக்கமாக இருக்கிறது 'பெரியார்' பற்றிய விக்கி பக்கம்.

விக்கிபீடியாவின் தமிழகக்குழுவின் மூலம் இதைத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தோழர்கள், தொடர்புள்ளவர்கள் தகவல் தரவும்.
எவ்வளவு செய்ய முடியுமோ, அதைச் செய்யலாம். யாராவது தொடர்புடையோரைக் கொண்டு அவற்றை மாற்றலாம். திரிபுவாதங்கள் நிரம்பி இருந்தால் விக்கிபீடியாவின் நம்பகத் தன்மை அடிபடும்.

சரியான தகவல்கள் periyar.org தளத்தில் கிடைக்கிறது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

திரிபுகளைத் தடுக்க திராவிடரே திரள்வீர்! குரல் எழுப்புவீர்!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அங்கே மட்டுமா திரிபு நடக்குது? எல்லா எடத்துலேயும் தான் குடுமிங்க செய்யுறானுங்க. பி.கே.எஸ்.னு ஒரு பாப்பார அடிவருடி இன்னைக்கு பெரியார் பற்றி போஸ்ட் போட்டிருக்கான். அவன் இன்னாவோ பெரியாரோட படுத்து தூங்கி, வாழ்ந்த மாதிரி எழுதியிருக்கான். பாப்பானுங்களுக்கு மட்டுமல்ல பாப்பார அடிவருடிங்களுக்கும் பெரியார்னாலேயே வேப்பங்காய் தான்.
திகிலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சந்தேகமே வேண்டாம் இது அந்துமணி மாமாவின் வேலை, எழுத்து விபச்சாரம் செய்யும் "சோ" தான் இதற்கு சூத்திரதாரி.
நந்தா இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நல்ல முயற்சி. உங்கள் கவலை நியாயமானதே.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.
Thekkikattan|தெகா இவ்வாறு கூறியுள்ளார்…
இங்குதான் யாரோ சொல்லி நானும் தமிழ் விக்கிபீடியா சென்று "பவளப் பாறைகள்" என்ற இயற்கை சார்ந்த பதிவென்றினை அங்கு இனைத்தேன். சில நாட்கள் கழித்து சென்று பார்க்கும் பொழுது யாரோ "கடவுள்" அங்கும் அமர்ந்து கொண்டு அந்த கட்டுரை முழுவதையுமே தூக்கி இருக்கிறது.

அவரின் பின் புலத்தை சென்று பார்த்தப் பொழுது, புள்ளியியல் பட்டையைக் கிளப்பியிருக்கிறது, இது வரையிலும் அங்கு எத்தனைப் பேரின் கட்டுரைகளை திருத்தி இருக்கிறார், தூக்கி இருக்கிறார், நான் யார் என்று கேட்டுக் கொண்டு ஒத்தை ஆளாய் அமர்ந்து தமிழின் அறிவியல் மேம்பாட்டினை வளர்த்து வருகிறார்.

என்ன நடக்குது, இங்க? இவங்க எல்லாம் யாருப்பா?

பி.கு: பந்திக்கு முந்துபவனுக்கு அனைத்துக் கிட்டும் அப்படியா இதுவும்... கொடுமையடா சாமீ...
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல முயற்சி. நல்ல பதிவு தோழரே. நேரம் கிடைக்கும் போது மீண்டும் வந்து இதைப்பற்றி விரிவாக பின்னூட்டம் இட முயற்சிக்கிறேன்.
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் சிற்ப்பான முயற்சி.விக்கிப் பீடியாவில் முதலில் உள்ளே அமர்ந்து கொண்டு ஒளிந்துகொண்டு வேண்டுமென்றே பொய் புரட்டுகளை எழுதித் தள்ளியுள்ளனர்.அவர்கள் யாரென்றும் சொல்ல மாட்டார்கள்,யார் மட்டுப் படுத்துபவர்கள் என்றும் ஓளித்து வைத்து விடுவார்கள்.
அதிலே குறை சொல்லும் தளத்திற்குச் சென்றும் பயனில்லை.
விடாது பல் குரை பாடு சொன்னதால் இப்போது விக்கி விசனரி என்று ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்ளுங் கட்டுரைகள் மட்டும் வெளிவரும். இதில் நமது நண்பர்கள் சேர்வதும்,தமிழறிஞர்களை ஊக்கு விப்பதும் முக்கியம்.
ஆன்கிலத்தில்தான் மிகவும் மோசமாக நடக்கிறது.சரித்திரங்கள் மாற்றப் படுவதற்கு முன் நாம் பலர் ஆங்கிலப் பதிப்பிற்கும்செல்ல வேண்டும்.
Thangamani இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களது தொடர்ந்த போராட்டத்துக்கும், இப்படியான வெளிப்படுத்தல்களுக்கும் நன்றி!
பாரி.அரசு இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்!
இந்த கேடிகள் பிழைப்புவாதத்திற்க்கு எதிராக மக்களை திரட்டிய புத்தரை கடவுளாக்கி ஏற்றுமதி செய்தவர்கள்.
வரலாற்றை மாற்றுவது, திரிப்பது இதெல்லாம் இவர்களுக்கு கைவந்த கலை. எதுவுமே முடியவில்லையா கடைசியாக படுக்கையை விரிக்கவும் தயங்காத பொறுக்கி கூட்டம்! உங்கள் போராட்டத்திற்க்கு மானார்ந்த வாழ்த்துகள்.
பிறைநதிபுரத்தான் இவ்வாறு கூறியுள்ளார்…
தோழரே!
விக்கிபீடியா-திரிபுகளை கவனத்தில் கொண்டு வந்ததற்கு முதலில் நன்றி,

நான் விக்கி பீடியாவில் இந்திய வரலாறு - முகலாயர் ஆட்சி பற்றி தேடியபோது விக்கிபீடியாவில் நான் படித்ததும் - சங்பரிவாரால் எழுதபட்டதற்கும் எள்ளளவும் வேறுபாடு இல்லை. இதெல்லாம் சகஜம்தானே என்று விட்டுவிட்டேன்.

ஆனால், ஆட்டைக்கடித்து- மாட்டைக்கடித்து கடைசியில் அய்யா பெரியார் விசயத்திலும் புரட்டு-திரிபு வேலையை காண்பிப்பதில் வெற்றி கண்டுவிட்டார்கள் வந்தேறிகள்.

விக்கிபீடியாவில், ஏற்கனவே, தாங்கள் வந்தேறிகள் அல்ல மண்ணின் மைந்தர்கள்தான் என்று உடான்ஸ்விட்டு 'புதிய வரலாறு' நிறைய எழுதித்தள்ளிவிட்டார்கள்.

திரித்து எழுதிவிட்டார்களே என்று அழுது-ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு - இதைப்பற்றிய விழிப்புணர்வை நம்மவர்களிடம் ஏற்படுத்துவதோடு, இத்தகைய புரட்டு வேளைகளுக்கு முற்றுப்புள்ளியோ - ஆப்போ வைப்பது எப்படி என்று முடிவெடுத்து உடனடியாக செயல்படவேண்டும்.

இல்லையென்றால், இன்னும் கொஞ்சம் நாளில் - திராவிடர்கள் எல்லாமே கைபர்-போலன் வழியாக எருமையும் - கழுதையும் ஓட்டிக்கொண்டு தமிழகத்துக்குள் வந்தவர்கள் என்று கூட எழுதிவிடுவார்கள்.
ரவிசங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
princenrsama - தமிழ்நாடு குறித்த கட்டுரைகள் என்றில்லை, மதம், இனம், மொழி, வரலாறு போன்ற senstiveஆன தலைப்புகளில் சிலர் திரித்து எழுத முயல்வது அறியப்பட்ட குறை தான். எனினும் இக்கட்டுரைகள் சர்ச்சைக்குரியவை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, இவற்றை உண்மை என்று எவரும் நம்பிவிடும் அபாயம் இல்லை.

நமக்கு ஒரு கட்டுரையின் உண்மை மேல் ஐயம் என்றால் பேச்சுப் பக்கங்களில் உரையாடி வாதாடி வெல்வது தான் ஒரே வழி. வெளியில் நின்று குறை சொல்வதால் பயன் இல்லை.

தமிழ் மொழி, தமிழர் வரலாறு குறித்த பல கட்டுரைகளிலும் கன்னட, வட மொழி ஆதரவுப் பங்களிப்பாளர்கள் பல திரிபுகளை செய்ய முயல்கிறார்கள். புறக்கணிக்க இயலாத அளவுக்கு ஆங்கில விக்கிபீடியாவின் தாக்கம் இருப்பதால் நம் உண்மையை எடுத்துரைக்க அனைவரும் பங்கு கொள்ள முன் வர வேண்டும்.

தெக்கிக்காட்டான் - தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளில் தகுந்த காரணம் குறிப்பிடப்படாமல் எந்த தொகுப்பும் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும். நீங்கள் எந்தக் கட்டுரையில் பங்களித்து அது மாற்றி அமைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினால், அதன் நியாயம் என்ன என்று பார்த்து என்னால் சரி செய்ய இயலும்.

//விக்கிப் பீடியாவில் முதலில் உள்ளே அமர்ந்து கொண்டு ஒளிந்துகொண்டு வேண்டுமென்றே பொய் புரட்டுகளை எழுதித் தள்ளியுள்ளனர்.அவர்கள் யாரென்றும் சொல்ல மாட்டார்கள்,யார் மட்டுப் படுத்துபவர்கள் என்றும் ஓளித்து வைத்து விடுவார்கள்.//

தமிழன், நீங்கள் நினைப்பது தவறு. ஒவ்வொரு தொகுப்பையும் யார் செய்கிறார் என்பது ஒவ்வொரு கட்டுரையின் வரலாறிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மூடு மந்திரமாக யாரும் மாற்ற முடியாது. யார் நிர்வாகிகள் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக மக்கள் விடும் பிழை என்ன என்றால் ஏதாவது ஒரு கட்டுரையில் போய் மல்லுக்கட்டுவது தான். நுழையும் போதே சண்டை பிடிக்காமல் முதலில் ஒரு சில கட்டுரைகளில் நல்ல முறையில் பங்களித்து விட்டு விக்கிபீடியர் சமூகத்தின் நட்பினை பெற்றால் நிர்வாகியாகி உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க முடியும். இதன் மூலம் பூட்டப்பட்ட பக்கங்களையும் திருத்த முடியும். விக்கிபீடியா குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் tamilwikipedia.blogspot என்ற பதிவில் கேளுங்கள். நன்றி
நற்கீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
தொகா:

பவளப் பாறைகள் என்ற கட்டுரை சென்று பார்த்தேன். அதில் நீங்கள் பயன்படுத்திய நடை (தன்னிலை, உரையாடல் மாதிரி) விக்கி நடைக்கு மிகவும் வேறுபட்டு இருந்ததால் நீக்கப்பட்டிருக்கலாம். அத்தோடு, நீங்கள் அனானியாகவே அக்கட்டுரையைச் சேர்த்திருந்தீர்கள், எனவே முழுக்கட்டுரை என்றபடியால் பதிப்புரிமை பற்றிய சந்தேகமும் இருந்திருக்கலாம்.

விரும்பினால் அந்தக் கட்டுரையை மீட்டெடுக்கலாம். அதில் உள்ள தகவல்களை வைத்து விக்கி நடைக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதலாம்.

மேலும் தொடர்புகளுக்கு தமிழ் விக்கிபீடியா ஆலமரத்தடிக்கு வரவும்.

யாரும், அவரவுக்கு ஏற்ற மாதிரி த.வி பங்களிக்க முடியும். இயன்றவரை நடுநிலைமையை பேண முயற்சி செய்கின்றோம். நன்றி. தமிழ் விக்கிபீடியா பற்றி மேலும் குறைகளை ஏதும் இருந்தால் ரவி சுட்டியபடி நேரடியாக தெரிவிக்கவும், இயன்றவரை இணக்க முடிவு எட்ட முனைவோம்.


ஆங்கில விக்கியில் திருபுகள் ஏற்படுவது வழமை. காரணம் அது பல கோடி பயனர்களின் கவனத்தைப் பெறுவது. திருபுகள் பிழை என்று தெளிவாக தெரியும் பட்சத்தில் எதிர்ப்பு தெரிவித்தல் வேண்டும். மாற்றியும் எழுதி வைக்கலாம்.

பல சந்தரிபங்களில் திட்டமிட்டும் திருபுகள் நடக்கும். அதை விடா பிடியாக எதிர்க்க வேண்டும். தமிழ், தமிழர் போன்ற கட்டுரைகளில் அப்படி நடந்து வருவது வழமை. இயன்றவரையில் மல்லு கட்டி நிற்பதுண்டு.
நற்கீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
தெகா

http://ta.wikipedia.org/wiki/பவளப்_பாறைகள்

மீட்டெடுக்கப்பட்டு, பெரும்பாலான தகவல்கள் உரையாடல் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

நேரம் கிடைக்கும்பொழுது, சென்று மேம்படுத்தி தொகுக்கலாம்.

நன்றி.
Mayooranathan இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் விக்கிபீடியா பற்றி Thekkikattan குறிப்பிட்ட விடயம் பற்றி விளக்க விரும்புகிறேன். அவர் எழுதிய "பவளப்பாறை" என்னும் கட்டுரையை யாரோ முழுமையாகத் தூக்கிவிட்டதாக வருத்தப்பட்டிருந்தார். முதலில், தமிழ் விக்கியில் கட்டுரை எழுத முன்வந்தமைக்காக அவருக்கு எனது நன்றிகள். அவர் எழுதிய கட்டுரையை நான் இன்று பார்த்தேன். விக்கிபீடியாவில் கட்டுரை எழுத விரும்புபவர்கள் சில முக்கிய விடயங்களைக் கவனிக்க வேண்டும். விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம் அதில் எழுதப்படும் கட்டுரைகள் அதற்குப் பொருத்தமான நடையில்தான் எழுதப்படவேண்டும். பொதுவான வலைப்பதிவுகளில் இடுவதுபோல அவரவர் நினைத்த நடைகளில் எழுதமுடியாது. Thekkikattan எழுதிய கட்டுரை கலைக்களஞ்சிய நடைக்குப் பொருந்தவில்லை. எனினும் இக்கட்டுரையில் நல்ல தகவல்கள் இருந்ததாலும், இதை எழுதியவருடைய முயற்சிக்கு மதிப்புக் கொடுத்தும் தமிழ் விக்கிபீடியாப் பங்களிப்பாளர்களுள் ஒருவர் இக்கட்டுரையை அதன் உரையாடல் பக்கத்துக்கு நகர்த்தியிருக்கிறார். இதைப் பொருத்தமான நடையில் மாற்றி எழுதித் திரும்பவும் கட்டுரைப் பக்கத்துக்கு மாற்றமுடியும்.

Thekkikattan புகுபதிகை செய்யாமல் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். விக்கிபீடியா இதற்குத் தடை எதுவும் விதிப்பதில்லை ஆயினும், பதிவு செய்துகொண்டு புகுபதிகை செய்து எழுதினால் ஏனைய பங்களிப்பாளர்கள் அவருடன் தொடர்பு கொள்வதும், கலந்துரையாடுவதும் இலகுவாக இருக்கும். நீங்கள் எழுதிய கட்டுரை நீக்கப்பட்டது தொடர்பாக உங்களுடைய குறையை நீங்கள் அதன் உரையாடல் பக்கத்திலேயோ அல்லது "ஆலமரத்தடி" போன்ற பகுதிகளிலேயோ எழுதியிருந்தால் மற்றவர்கள் இதுபற்றி விளக்கம் அளித்திருப்பார்கள்.

யாருடைய கட்டுரையானாலும் மற்றவர்கள் இங்கே அதனைத் தன்னிச்சையாக முற்றாக நீக்கமுடியாது. இது பற்றி முன்மொழிந்து எதிர்ப்பு இல்லாவிட்டால் மட்டுமே நீக்க முடியும். எனவே, தமிழ் மக்களின் நலனுக்காக இயங்கும் ஒரு திட்டத்தின் நடைமுறைகளைப் பற்றி அறியாது அதன் மீது குற்றம் சுமத்துவது நல்லதல்ல. தமிழ் விக்கிபீடியாவில் அதன் பங்களிப்பாளர்களான நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம். வருகிறவர்கள் விக்கிபீடியாவின் விதிமுறைகளுக்கு இணங்கத் தங்களுடைய பங்களிப்பைச் செய்யவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
soodharignar rajaji nnu oru thev payyan irundhane.. avan page ah naama naaradippom

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…