
திராவிடர் கழகத்தின் போராட்ட வரலாற்றில், பெரியார் தொண்டர்களின் மனோதிடம் என்னவென்பதை வரலாறு கண்டுகொண்ட போராட்டம்!
'போராட்டத்திற்கான தண்டனை என்னவென்பதை முடிவு செய்து சட்டமியற்றிக் கொள்ளுங்கள், அதன் பிறகு என் போராட்டத்தை வைத்துக் கொள்கிறேன்' என்று வரலாறு காணாத வகையில் அறிவிப்புச் செய்து, தலைவர் பெரியார் நடத்திய போராட்டம்!
போராட்ட வீரர் ஒருவருக்கு இரண்டாண்டுகள் தண்டனை அறிவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதற்கு அந்த போராளி, "சட்ட எரிப்பு போராளிகளுக்கு கடுமையான த்ண்டனை வழ்ங்கு' என்று நேரு மாமா சொன்னபின், ஏன் இவ்வளவு குறைந்த தண்டனை தருகிறீர்கள் மாமா!" என்று கேட்ட வரலாறு - வரலாற்றுக்கே புதிது!
போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் மேல் இரக்கப்பட்ட நீதிபதி, " நீ (அரசியல் சட்டம் என்று எழுதப்பட்ட) வெறும் தாளைத் தானே கொளுத்தினாய்?" என்று கேட்டபோது, "நான் கொளுத்தியது வெறும் தாளாக இருக்கலாம். ஆனால் என் நோக்கம் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது தான்" என்ற சிறுவனின் பதிலால் நீதிமன்றத்தையே அதிரச்செய்த போராட்டம்!
ஒளிந்து ஒளிந்து போராட்டம் நடத்தாமல், பெயரை அறிவித்து 'விடுதலை'யில் பட்டியல் வெளியிட்டு போராட்டம் நடத்தி சிறை காணும் வரலாறு படைத்த போராட்டம்!
இதோ பெரியார் அழைக்கிறார்:
"நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?"
சூதாடிய குற்றத்துக்காகவா?
கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்காகவா?
கொள்ளைக் குற்றத்துக்காகவா?
கொலைக் குற்றத்துக்காகவா?
மோசடிக் குற்றத்துக்காகவா?
பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?
பதுக்கல் - கலப்படம் குற்றத்துக்காகவா?
சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?
என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?
சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேண்! சர்க்கார் கண் விழிக்கவில்லல. ஆகவே, சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன்.
இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? எந்தப் பொருளுக்கேனும் நாசமுண்டா?
இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா?
'சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ் செய்தான்' ன்பதை விடைப் பெரும் பேறூ, முக்கியக் கடமை, வேறென்ன இருக்கிறது?
இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
பெரியார் அறிக்கை (விடுதலை 9-11-1957)
நன்றி: பெரியார் களஞ்சியம் - தொகுதி(11) [ஜாதி தீண்டாமை பாகம்(5)], பக்கம் 59, 60
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
இன்று வரை தொடர்ந்து வரும் இந்தப் போராட்டத்தின் பாதையில் கிடைத்த ஒரு வெற்றிதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டம்! விந்தையாக இருக்கிறதா? ஜாதி ஒழிய வேண்டுமென்று போராடிய பெரியார் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை கேட்டார் என்பது முரணாகத் தெரியலாம்! ஆனால் கண்ணதாசனின் வரிகளைப் போல் 'ஜாதி என்னும் நாகத்தை தாக்கித் தாக்கி பெரியார்' விரட்டியபோது அது, கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டது. அதை விரட்டிட வகுத்த சட்டம் -அய்யா மறைந்து 33 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. அய்யாவின் கனவான ஜாதி ஒழிப்பும், சமதர்ம சமுதாயமும் நிறைவேறும் நாளுக்கு இப்பொன்விழா ஆண்டில் உறுதியேற்போம்!
ஜாதி ஒழிப்புக்காக சிறையிலும், களத்திலும் உயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!படம்: எடமேலையூரில் நடைபெற்ற போராளிகளுக்கான பாராட்டுவிழா! - தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று பாராட்டினார்.
லால்குடியில் 2007 - நவம்பர் 26-இல் ஜாதி ஒழிப்புப் போராட்டப் பொன் விழா மாநாடு:
தமிழர் தலைவர் அறிவிப்பு!
கருத்துகள்
-நானே நானே!
பின்னூட்ட காவாளித்தனம், பின்னூட்ட பிராடுத்தனம் என்றெல்லாம் நிறைய உண்டு. ஹிஹிஹி
50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.