'நான் தெரிஞ்சிக்கிட்டது இதைத்தான்'- புலவர் கலிய பெருமாள் - மணா [நன்றி: புதிய பார்வை- ஜூன் 1-15,2007] உடல்நலக் குறைவுடனிருந்த புலவர் கலிய பெருமாள் மறைந்திருக்கிறார். மயிலத்திலும் திருவையாற்றிலும் புலவர் படிப்பு படித்ததால் 'புலவர்' இவருடன் ஒட்டிவிட்டது. பெண்ணாடத்தில் வார இதழ் ஒன்றிற்காக அவரைப் பேட்டி காணப் போனபோது மதுரை கண் மருத்துவமனைக்குச் சென்று சோதித்துவிட்டு அப்போது தான் திரும்பியிருந்தார். தன்னைப் பற்றிசொல்வதில் உற்சாகமற்ற மனநிலை இருந்தது. தயக்கம் பேச்சினூடே தலைகாட்டியது. ஆந்திராவில் நடந்த நக்ஸல்பாரிப் போராட்டம்தான் இவருக்கு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. தலைமறைவு வாழ்க்கை துவங்கி தமிழகத்தில் கொரில்லாக் குழுக்கள் உருவானபோது புலவருடன் இணைந்து செயல்பட்டவர் பிற்காலத்தில் பொன்பரப்பி தாக்குதலில் கொல்லப்பட்டவரான தமிழரசன். 'அழித்தொழிப்பு' இயக்கமாக உடுமலைப்பேட்டையில் துவங்கி தஞ்சை, தர்மபுரி மாவட்டங்கள் வரை தொடர்ந்தது. 1970 பிப்ரவரி மாதத்தில் பெரும் திட்டம் தயாரனது. பெண்ணாடத்தில் புலவரின் தோப்பு. அண்ணாமலைப் பல்கலலக் கழகத்திலிருந்து சில மாணவர்கள் வந்திருந்தார்கள்....
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.