பெரியார் சிலை உடைப்பு மீண்டும் அரங்கேறிருக்கிறது. திருச்சி திருவரங்கத்தில் பெரியார் சிமெண்ட் சிலையை உடைத்து, வெங்கலச் சிலை வைக்க ஊக்கம் கொடுத்த கூட்டம், ஊரெங்கும் பெரியாரின் முழு உருவ வெங்கலச் சிலை வைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. "அய்யாவின் 128-ஆவது பிறந்தநாளையொட்டி 128 பெரியார் சிலைகள் நிறுவப்படும்" என்று தமிழர் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி பணிகள் தொடங்கிவிட்டன. வெறும் சிலை நிறுவுவதல்ல அதன் நோக்கம், சிலையின் அடிப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் "கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; அவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்" என்ற தந்தை பெரியார் தந்த கடவுள் மறுப்பு வாசகத்தை கல்வெட்டில் பொறித்து, இதை சொல்லிய ஒரு கிழவன் 95 ஆண்டுக்காலம் வாழ்ந்து, இறுதிவரை கடவுள் மறுப்பில் உறுதியாய் நின்றான்; அதை சொல்லிய படி, ஒரு மானமீட்பு இயக்கம் இந்த மண்ணில் இயங்...