“வாழ்க்கை இரும்படிக்கும்போது கலை பூப்பறிக்கலாமா?” என்ற தலைப்பில் இம்மாத விகடன் ஒன்றில் (11.12.13) கண்ட ஒரு செய்தி. கலையை மனிதநேயத்திற்குப் பயன்படுத்தும் விதமாக, நிகழ்காலத்தின் மக்கள் பிரச்சினைகளையும் கலை மூலமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் உத்தர்காண்ட் பேரழிவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுதி, அதனை ஸ்ரீநிதி கார்த்திக் அவர்கள் பரதநாட்டியமாக அரங்கேற்றவுள்ளார். ’வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது கலை பூப்பறிக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு தங்கள் படைப்பை அறிமுகப்படுத்தியிருந்தனர். இதைப் படித்ததும் என் நினைவுச் சக்கரம் சுழன்று சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் என்னை இழுத்துச் சென்றது. 2001 ஜனவரி 26 - பூஜ் நகரத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் பல்லாயிரம் பேரை பலிகொண்டது. நாடெங்கும் மனிதநேய உணர்வோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டினர். அதன் ஒரு பகுதியாக, காரைக்குடியில் குஜராத் மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்டிருந்தது எங்கள் குழு தான். ...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.