முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாவாணர் துரோகியோ?

துரோகி முத்திரை குத்துவதற்கு இப்போது ஆதாரங்களையெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை.

கலைஞரைப் பாராட்டி, வாழ்த்தி யார் பேசினாலும், அவர்களுக்கெல்லாம் ’துரோகி’ முத்திரை குத்தி குதூகலிப்பதுதான் தமிழ் தேசியத்தை வளர்க்கும் பணி என்றும், ஈழத்திற்கு செய்யும் பணி என்றும் கருதிக் கொண்டு இணையக் களங்களில் எண்ணற்றோர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கலைஞரை கரிகால் வளவனோடு ஒப்பிட்டு ’திராவிட ஞாயிறு’* பாவாணர் அவர்கள் பேசியிருப்பதைப் படித்ததும், அவருக்கும் துரோகி முத்திரை குத்திவிடுவார்களோ என்று பயமாய் இருக்கிறது. 

திரவிட மொழி நூல் ஞாயிறு பாவாணர் பார்வையில் கலைஞர்
”கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் காவிரி நாட்டிலேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார்.... அவன் இளமையிலே பகைவராலே இடர்ப்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே (1971) எப்படியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார்... அந்தக் காலத்திலேயே அவரைப் பற்றி ஏதாவது ஒரு புகைப்படமோ, பூச்சுப் படமோ இருந்திருந்தால், இவர் முகச்சாடை கூட ஒத்துப் போகுமோ என்றுகூட நாம் நினைக்கும்படியாக இருக்கிறது.”
- பாவாணர் உரைகள் - பக்கம். 82
நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் (அக்டோபர் 1-15, 2010)

ஏப்ரல் முட்டாள் முத்திரையைக் கையில் வைத்திருப்பவன் யார் முதுகில் குத்தினாலும், அவரெல்லாம் முட்டாளாகி விடுவார் என்பதுபோல் ஆகிவிட்டது ’துரோகி’ பட்டமும். முத்திரையை வைத்திருப்பவன், தன் முதுகில் புதிதாய் ஒருவர் குத்திவிட்டாலும், தானும் துரோகியாகிவிடுவோம் என்பது புரியாமல் திரிவது போல் இருக்கிறது.  

திராவிட ஞாயிறு பாவாணர் :
இதென்ன இத்தனை நாளும் மொழிஞாயிறு என்று தானே கேள்விப்பட்டு வந்தோம்; புதிதாய் என்ன ’திராவிட ஞாயிறு’ என்று சிலர் எண்ணக் கூடும். உண்மையில் நடந்தது என்ன? என்பதை பேராசிரியர் சுப.வீ அவர்கள் ’கருஞ்சட்டைத் தமிழர்’ அக்டோபர் 1-15, 2010 எழுதியிருக்கிறார்கள். அதனையும் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.

மறைக்கப்படும் திராவிடம்


தனித்தமிழியக்க முன்னோடிகளில் ஒருவரும், தன்னிகரற்ற தமிழ் அறிஞருமான ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களை மொழி ஞாயிறு என அழைக்கின்றோம்.
அறிஞர் பாவாணருக்கு ‘ மொழிஞாயிறு பட்டம் ’, எந்த ஆண்டு, எந்த அமைப்பால் வழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முயன்றபோது, புதிய செய்தி ஒன்று கிடைத்தது.
1957 ஆம் ஆண்டு சேலம் தமிழ்ப் பேரவையினர் பாராட்டு விழா நடத்திப் பாவாணருக்கும், பொன்னம்பலனாருக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இருவருக்குமான விருதுகள் மற்றும் பொற்கிழிகளைத் தந்தை பெரியார் வழங்கியுள்ளார். அவ்விழாவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கியுள்ளார். பொன்னம்பலனாருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம்தான் ‘தமிழ் மறவர்’ என்பது. இச்செய்திகள் அனைத்தும், பாவாணரின் இளைய மகனார் மணி என்ற தே.மணிமன்றவாணன் எழுதியுள்ள, ‘பாவாணர் நினைவலைகள்’ (பக்.197) என்னும் நூலில் உள்ளன.
இவற்றுள் ஒரு செய்தி முதன்மையானது. அறிஞர் பாவாணருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம் ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ என்பதுதானே அன்றி ‘மொழி ஞாயிறு’ என்பதன்று. சுருக்கம் கருதி ‘திரவிட’ என்னும் சொல் நீக்கப்பட்டுள்ளதாக எண்ணிவிடக் கூடாது. ‘மூதறிஞர் ராஜாஜி நகர்’ என்பது, எம்.ஆர்.நகர் என்று சுருங்குவதில்லை. ஆனால் தியாகராயர் நகர் என்பது ‘தி.நகர்’ என்றும், கலைஞர் கருணாநிதி நகர் என்பது ‘கே.கே.நகர்’ என்றும் சுருங்கிவிடுகின்றது.
‘திராவிட’ மறைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இனி நாம் பாவாணரைக் குறிப்பிடும்போதெல்லாம் ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ என்றே எழுதுவோம். சுருக்கம் தேவைப்படின் ‘திராவிட ஞாயிறு ’ என்போம்.
(அன்று வழங்கப்பட்ட விருதின் படத்தையும், எடுக்கப்பட்ட ஒளிப்படத்தையும் கொடுத்துதவிய திரு. மணி அவர்களுக்கு நன்றி!)
நன்றி: கீற்று

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ‘மறைக்ப்படும் திராவிடம்’ என்ற இந்தக் கட்டுரையை வெளியிட்ட கீற்று, கலைஞரைப் பற்றி பாவாணரின் பேச்சு அடங்கிய பெட்டிச் செய்தியை வெளியிடவில்லை. சரி, என் பயம் பலிக்குமா? இல்லையா? என்பதை இன்னும் சில நாட்களில் இணைய தளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பாவாணர் கொலைஞரைப் பாராட்டி எழுதிய கட்டுரை எக்காலத்தைச் சேர்ந்தது? பாவாணர் 1982இலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார். கொலைஞர் ஒரு காலத்தில் திரவிடர், தமிழார்வலர், இடதுசாரிகள் போன்றோரை வசிகரிக்கும் ஆற்றலியாகத் தான் இருந்தார். அவரின் தவறுகள், ஊழல்கள், சறுக்கல்களைப் பற்றிக் கேள்வியுற்றிருந்தும் கூட, தமிழ்ப் பரப்பில் ஐயா பெரியாருக்குப் பின்னர் திரவிடத் தீப்பந்தத்தை ஏந்த ஓரளவு சரியான ஆள் என்ற காரணத்தாலும் அவர் மீது கொஞ்சமாவது வாஞ்சையோடு தானிருந்தார்கள் பலர்.
ஒவ்வொரு இரண்டகங்களின் பின்னரும் தன்னலக் கூத்துக்களின் பின்னருங் கூட, ஏனையோரை நோக்குங்கால் இவரே பரவாயில்லை என்று தான் பலரும் இருந்தோம். செய்த பாவங்களுக்கு நம்பியிருந்த இனக்கூட்டத்துக்கு கொடுத்த துரோகங்களுக்கும் தம் இறுதிக் காலத்திலேனும் கொஞ்சமாவது நல்லது பண்ணிச் செல்லும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் இவர் திருந்துவதாக இல்லை. அனைத்துக்கும் முத்தாய்ப்பாக ஈழம், தன்னல அரசியல், ஊழல் என பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.ஒரு மொத்த இனமே பூண்டோடு அழிக்கப் பட்டுள்ளது, பாவாணர் இன்றிருந்தால் என்ன எழுதியிருப்பார் சொல்லுங்கள்?
குழலி / Kuzhali இவ்வாறு கூறியுள்ளார்…
//கலைஞரைப் பாராட்டி, வாழ்த்தி யார் பேசினாலும், அவர்களுக்கெல்லாம் ’துரோகி’ முத்திரை குத்தி குதூகலிப்பதுதான் தமிழ் தேசியத்தை வளர்க்கும் பணி என்றும், ஈழத்திற்கு செய்யும் பணி என்றும் கருதிக் கொண்டு இணையக் களங்களில் எண்ணற்றோர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்
//
இதில் முக்கால்வாசி பேருக்கும் மேலே இதே கருணாநிதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடியவர்கள் தாம் என்பது பிரின்சுக்கு தெரியுமல்லவா?

உங்களின் முதல் பத்தியை படித்தவுடன் நான் கூட பாவாணர் நேற்றுதான் கருணாநிதியை பாராட்டி பேசினாரோ என்று நினைத்துவிட்டேன் :-)
vizhivendhan இவ்வாறு கூறியுள்ளார்…
//அறிஞர் பாவாணருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம் ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ என்பதுதானே அன்றி ‘மொழி ஞாயிறு’ என்பதன்று. சுருக்கம் கருதி ‘திரவிட’ என்னும் சொல் நீக்கப்பட்டுள்ளதாக எண்ணிவிடக் கூடாது. ‘மூதறிஞர் ராஜாஜி நகர்’ என்பது, எம்.ஆர்.நகர் என்று சுருங்குவதில்லை. ஆனால் தியாகராயர் நகர் என்பது ‘தி.நகர்’ என்றும், கலைஞர் கருணாநிதி நகர் என்பது ‘கே.கே.நகர்’ என்றும் சுருங்கிவிடுகின்றது.//

thagavalukku nandri annaa
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
கருணாநிதியை பிரபாகரனும் எப்போதாவது பாராட்டி இருப்பார் அந்த கடிதம் இன்னும் கை-க்கு கிடைக்கலையா ? (காங்கிரசுக்கு இல்லை)
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
நடிகவேளை பார்பனீய குசும்பர் எஸ்விசேகருடன் ஒப்பிட்டு பாராட்டிய கருணாநிதி திரா-விட தலைவர் தான்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…