வேகாத வெய்யிலுல நான்
வெறகு வித்துப் படிக்க வச்சேன்..!
வெந்துபோன வெறகா உன்னை
தூக்கவா அனுப்பி வச்சேன்?
வெய்யிலிலே நீ நின்னா
கால் வெந்து போகுமுன்னு...
வெளியவே வராதேன்னு
வீட்டுக்குள்ள நான் வளர்த்தேன்.
கால் கடுக்க நீ நின்னா
என் காலு எரியுமடி - இப்ப
கரிக்கட்டையா கிடக்குறியே
என் உசுரு வேகுதடி!
சுடு சோறு வேணுமின்ன...!
புதுச் சட்டி வாங்கச் சொன்ன..!
சுடு சோறு திங்கலியே...!
சூடு தான் தாங்கலியோ...?
வாங்கித் தந்த புதுச்சட்டி
வாய்பிளந்து கிடக்குதடி.. -உன்ன
தூங்க வச்சுப் பார்த்த தூளி
தூக்கிப்போக உதவுதடி!
.....தளிர்கள் கருகிய அமாவாசை தினத்தில்...(16.07.2004)
------------------------------------------------------------------
கருகிய தளிர்களை தூளியில் வைத்துத் தூக்கிப் போன கொடுமையும், சிதறியிருந்த மதிய உணவோடு கிடந்த புதுச் சட்டியும் நிழற்படங்களாகவும் காட்சிகளாகவும் கண்ட கொடுமையான நாளில் என்னோடு சேர்ந்து என் பேனாவும் அழுதது.. அன்று எழுதிய வரிகள்.. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பதிவாக...!
மீண்டும் நினைவுகளைக் கிளறிய பதிவுகள்...
http://www.manisenthil.com/2010/07/blog-post_4244.html
http://jamalantamil.blogspot.com/2010/07/blog-post.html

கருத்துகள்
துயரத்தையும் கோபத்தையும் ஒரு சேர அதிகரிக்கிறது உங்கள் வரிகள் ...
உங்கள் உணர்வுகளோடு நானும் பங்கெடுக்கிறேன் ...
இன்ஷா அல்லாஹ் என ஒரு சிறு கவிதை முயற்சி மேற்கொண்டேன் ...
உங்கள் பார்வைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html