முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருணாநிதிக்கு கோயில் கட்டியவரே அகற்றினார்!

First Published : 02 Jul 2010 12:51:51 PM ISTகுடியாத்தம், ஜூலை 1: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே முதல்வர் கருணாநிதிக்கு கோயில் கட்டிய திமுக தொண்டரே வியாழக்கிழமை அவரது சிலையை அங்கிருந்து அகற்றினார்.
 கட்சித் தலைமையில் இருந்து வந்த உத்தரவையொட்டி, அவர் சிலையை அகற்றியதாகக் கூறப்பட்டது.
 குடியாத்தம் அருகே உள்ள பரதராமி அடுத்த சாமிரெட்டிபல்லி கிராமத்தில், ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான ஜி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் கருணாநிதிக்கு கோயில் அமைத்தார்.
  தன் சொந்த நிலத்தில், சொந்த பணம் சுமார் ரூ. 2 லட்சம் செலவில் கட்டடம் கட்டி, அதில் கருணாநிதியின் இரண்டரை அடி உயர மார்பளவு சிலை வைக்கப்பட்டு, அறையின் முகப்பு சுவரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், திமுக மாவட்டச் செயலர் ஆர். காந்தி ஆகியோரின் படங்களும் பதிக்கப்பட்டிருந்தன.
 இதுதொடர்பான செய்தி தினமணியில் புதன்கிழமை (ஜூன் 30) வெளியாகியிருந்தது.
 இந்நிலையில், தனக்கு கட்டிய கோயிலை அகற்றுமாறு மாவட்டச் செயலர் ஆர்.காந்தியிடம் முதல்வர் கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.
 இதுகுறித்து ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 இதற்கிடையே, அனுமதியின்றி கட்டிய கோயிலை அகற்றுவதற்காக, குடியாத்தம் வட்டாட்சியர் எம்.வசந்தா, காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர்.
 போலீஸôரும், வருவாய்த் துறையினரும் வருவதையறிந்த ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தான் கட்டிய கோயிலில் இருந்த கருணாநிதி சிலையை துணியால் சுற்றி, வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டார். மேலும், அங்கிருந்த கல்வெட்டை உடைத்து, அகற்றினார்.
 இதைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய்த்துறையினர், ஏதும் செய்யாமல் அங்கிருந்து திரும்பினர். தற்போது கோயில் காலியாகக் காட்சியளிக்கிறது.
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Vellore&artid=265861&SectionID=140&MainSectionID=140&SEO=&Title=கருணாநிதிக்கு%20கோயில்%20கட்டியவரே%20அகற்றினார்!

தினமலர் செய்தி....

முதல்வருக்கு கட்டிய கோவில் அகற்றம்
பதிவு செய்த நாள் : ஜூலை 03,2010,01:22 IST

வேலூர் : குடியாத்தம் அருகே முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் கட்டிய கோவிலை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார்.
சாமிரெட்டி பல்லியில், அவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு கோவில் கட்டியுள்ளார். இதில், இரண்டரை அடி உயரத்தில் கற்சிலையால் மார்பளவில் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைத்துள்ளார். கோவில் முகப்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உருவப் படங்கள் வரையப்பட்டுள்ளன.
"இக்கோவிலில் மூன்று வேளையும் பூஜைகள் நடக்கும், ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கும், கோவிலுக்கு வருபவர்களுக்கு மதியம் இலவச உணவு வழங்கப்படும்' என, கிருஷ்ணமூர்த்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், குடியாத்தத்தைச் சேர்ந்த வருவாய்த் துறையினர் நேற்று காலை 10 மணிக்கு கோவில் இருந்த இடத்துக்கு வந்து மார்பளவு இருந்த கருணாநிதியின் சிலையை அகற்றினர். மேலும், கோவிலின் முகப்புத் தோற்றம் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றினர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து காரணம் கேட்ட போது, "அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்' என, கூறினர்.

கலைஞர் மாபெரும் மனிதரே!
முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள், பகுத்தறிவு, தன்மான, இனமானக் கருத்துகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தாலும், அண்மைக்காலமாக அதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து, அழுத்தம் கொடுத்துச் சொல்லி வருகிறார்.
தன்னைப் பற்றி ஒரு வரியில் சுயமதிப்பீடு என்று சொல்லும்போது மானமிகு சுய-மரியாதைக்காரன்! என்று திட்டவட்டமாகவே தெளிவுபடுத்திவிட்டார்.
டில்லியில் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தி.மு.க. தோழர்களுக்கு வேண்டு-கோள் அல்ல_கட்டளையாகவே தெரி-வித்தார்.
பெரியார் _ அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு கோவிலுக்குப் போவது, வாஸ்து பார்ப்பதெல்லாம் கூடாது என்றே தெளிவுபடுத்தியும் விட்டார்.
இந்தச் சூழலில் வேலூர் பகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குக் கோவில் எழுப்பி, மூன்று வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது; கண்டிக்கத்தக்கதுமாகும்.
தி.மு.க. தலைவராகவும், 5 ஆம் முறை-யாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் விளங்கக் கூடிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களை மதிப்பது, பாராட்டுவது, நன்றி காட்டுவது என்பது இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் அல்ல!
அவரைப் பொறுத்தவரை பாராட்ட எத்தனையோ பரிமாணங்கள் உண்டே! 87 ஆண்டுகளில் 75 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர் பன்முகப் பேராற்றல் கொண்டவர். அவர்தம் நூல்களைப் பரப்பலாம்; அவர் முரசொலியில் எழுதி வரும் அறிக்கைகளை அச்சிட்டுப் பொது மக்களுக்கு_ குறிப்பாக இளைஞர்களுக்குக் கொடுக்கலாம்.
பகுத்தறிவு சார்ந்த நூல்களில் இடம் பெற்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். கலைஞர் பெயரில் படிப்பகத்தை ஏற்படுத்தி திராவிடர் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம்_தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த-லாம். கலைஞர் அவர்களின் பிறந்த நாளை-யொட்டி பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்திப் பரிசளிக்கலாம்.
பகுத்தறிவு அடிப்படையில் கலைஞர் அவர்களின் புகழை, சாதனைகளைப் பரப்பி அதன்மூலம் அவரை மதித்திட ஆயிரம் ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தன்மான -_ பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமாக கோயில் எழுப்பி அதில் கலைஞர் அவர்-களைக் கடவுளாக ஆக்குவது என்பது_-நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும்.
ஒருவருடைய கொள்கையை ஒழிக்க வேண்டுமானால், அவரை மகானாகவோ, கடவுளாகவோ ஆக்கினாலே போதும் என்பார்கள்.
கலைஞர் என்பவர் திராவிடர் இயக்-கத்தின் கருவூலம்! தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத் தனிப் பெரும் தளகர்த்தர்! இன்றைக்கு நம்மிடையே வாழும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்.
அவர் மனிதர் _ மாபெரும் மனிதர்_ மதிக்கத்தக்க போராளி. அவரைக் கடவுளாக்கி, பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம். அது சிலையாக இருக்-கட்டும்_அதன் கீழ் கலைஞர் அவர்களின் பகுத்தறிவுப் பொன்மொழி கல்வெட்டாகச் செதுக்கப்படட்டும். கோயில் _ பூஜை என்ற முயற்சியை உடனடியாகக் கைவிடுக!

கலைஞர் இதனை ஏற்கமாட்டார்
கலைஞருக்குக் கோயிலாம்: திமுக கவுன்சிலர் ஏற்பாடு
வேலூர், ஜூலை 1_ தி.மு.க.-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி என்ப-வர் முதல் அமைச்சர் கலைஞர் செய்துவரும் சாதனைகளுக்காகக் கோயில் கட்டி, மூன்று வேளையும் பூஜை நடத்த உள்ளாராம்.
கோயிலுக்குப் போகா-தீர்! வாஸ்து பார்க்காதீர்! என்று திமுக தோழர்களுக்கு கலைஞர் கட்டளையிட்-டுள்ள நிலையில், இந்தக் கோயிலை கலைஞர் ஏற்க-மாட்டார் என்பதில் அய்யமில்லை. வேலூர் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ண-மூர்த்தி (வயது 45). தி.மு.-க.,-வைச் சேர்ந்த இவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர். சாமிரெட்டி-பல்லியில் தனக்குச் சொந்-தமான இடத்தில் 2 லட்-சம் ரூபாய் செலவில் முதல்-வர் கலைஞருக்கு இவர் கோயில் கட்டியுள்-ளார். இரண்டரை அடி உயரத்தில் முதல்வர் கலைஞரின் மார்பளவு கற்சிலையை அமைத்து உள்ளார். கோவில் முகப்-பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உருவப் படங்களும் வரை-யப்பட்டுள்ளன. கேட்-டால் கொடுப்பார் கட-வுள்; கேட்காமல் கொடுப்-பார் கலைஞர் என, அங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கலைஞருக்காக இக்-கோயில் கட்டப்பட்டுள்-ளது என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுன்சிலர் கிருஷ்ண-மூர்த்தி கூறும்போது, முதல்வர் கலைஞர் ஏழை-களுக்கு உயிர் காக்கும் உயரிய சிகிச்சை அளிக்க மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கிராம மக்கள் பயன் பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் வசதி, இலவச கலர் டிவி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற திட்டங்-கள் கொண்டு வந்துள்ளார். அதனால், முதல்வருக்கு கோயில் கட்டியுள்ளேன். இங்கு மூன்று வேளை-யும் பூஜை நடக்கும். ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கும். கோயி-லுக்கு வருபவர்களுக்கு மதியம் இலவச உணவு வழங்கப்படும், என்றார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…