துரோகங்களைச் சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள் நாம்;
அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது
கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம்!
- தமிழர் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள்
இன்று (2.7.2010) காலை 7.30 மணியளவில் (சேத்துபட் ஆரணி அருகில்) ஒரு மண விழாவை நடத்தி வைக்க நான் வேனில் பயணமாகி, திருமணம் முடிந்தவுடன் புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு சென்னை திரும்பும் வழியில் எனக்கு ஒரு தகவல்: வீட்டில் இருந்த காவலாளியை சுற்றி 3 பேர் தடிகளுடன் நின்றிருக்க, மற்றும் 4 பேர் வீட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த எனது காரை இரும்புத் தடிகளால் அடித்து நொறுக்கி, 'ஒழிக!' என்று கோஷங்கள் போட்டுக்கொண்டிருந்தனராம்.
அதற்கு சற்றுமுன், வீட்டிற்கு வந்த பெரியார் திடல் நிருவாகி சீதாராமன் அவர்கள் எனக்காக காத்திருந்தபோது, வீட்டில் வேலை செய்யும் பெண் மேலே இருந்து பார்த்து, காரை அடித்து நொறுக்குகிறார்கள் என்று கூச்சல் போட்டவுடன், உள்ளே இருந்த குடும்பத்தினர், நிருவாகி சீதாராமன் கீழே இறங்கி வருவதற்குள், அந்தக் கும்பல் ஓடி சாலையின் குறுக்கே கடந்து சென்றுள்ளது.
காவல்துறையினர் விரைந்து வந்து முழு விசாரணையை நடத்துகின்றனர்.
பல வெளிநாடு, வட மாநிலம், தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்து கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், அன்பர்கள், நல விரும்பிகள் மிகுந்த கவலையுடன் (சிலர் தொலைப்பேசி மூலமாகவும்) விசாரித்த வண்ணம் உள்ளனர்.
கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம். ’சட்டம், அதன் கடமையைச் செய்யும்’ என்ற முழு நம்பிக்கை நமக்கு உண்டு. ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆத்திரப்பட்டு இறங்கிவிடக் கூடாது.
பொது வாழ்க்கையில் இப்படிப்பட்ட துரோகங்களைச் சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள் நாம்.
அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது. சாகத் துணிந்த நமக்கு சமுத்திரம் முழங்கால் கூட அல்ல; கணுக்கால் அளவே.
எனவே, அமைதி காக்கவேண்டும் என்று அன்புடன் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். கலைஞர் அரசினைக் காக்க வேண்டியதே நமது முதற்கடமை என்பதை மறவாதீர்!
(கி. வீரமணி),
தலைவர்,
திராவிடர் கழகம்.
2.07.2010
சென்னை
கருத்துகள்
ஆசிரியர் அவர்களின் துணிச்சலும் உறுதியும் நம் அனைவரிடமும் பரவட்டும் !வன்முறை பாதையில் இறங்கியதன் மூலம் தனத்தை பெரியாரின் கொள்கைகளை எந்த அளவுக்கு அவர்கள் பின்பற்றுகிறார்கள் என தெளிவாகியுள்ளது -மீண்டுமொருமுறை !
வீரமணியார் மீது தாக்குதல் :பெ'தி.க அறிக்கை
http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post.html