முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...)

ஈழத் தமிழர் படுகொலை நடந்து ஓராண்டிற்குள் உலகத் தமிழ் மாநாடு கொண்டாட்டமா? என்று கேட்டவர்கள் யாரும் பெட்னா விழா குறித்தெல்லாம் கேள்வி எழுப்பவில்லை. பங்கெடுக்காமலும் போய்விடவில்லை.

ஜூன் 27-க்கும் ஜூலை 3-க்கும் ஒரு வேளை ஆண்டுக்கணக்கில் வித்தியாசம் இருக்குமோ என்னமோ தெரியவில்லை. ஆனால் கடந்த ஆண்டும் பெட்னா விழா நடத்தப்பட்டிருப்பதையும் அதில் தமிழ்த்திரை நடிகர்கள் உள்ளிட்டோர் பங்கெடுத்ததையும் காணொளிகள் வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கண்டேன்.  லக்கிதான் இது குறித்து ஏற்கெனவே கேள்வி எழுப்பினார் என்று கருதுகிறேன்.

இதனால் நாம் ஏதோ பெட்னா நடைபெற்றதைக் குறை கூறுவதாக எண்ண வேண்டாம். தமிழர்கள் தமிழர்களாக எங்கு ஒன்று கூடினாலும், எப்போது ஒன்று கூடினாலும் அதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், அதனால் கிஞ்சிற்றேனும் பயன் விளையும் என்ற நம்பிக்கையும் நிச்சயம் உண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வும் கூட அவசியமான ஒன்றே! ஆனால் அது போன்ற ஒன்றுகூடல் தமிழகத்தில் கலைஞரால் நடத்தப்படக்கூடாது என்றவர்களுக்கு மட்டுமே நமது கேள்விகள்.

போகட்டும். வெற்றிகரமாக செம்மொழி மாநாடு முடிந்துவிட்டது. அதை நேரில் காணும் வாய்ப்பையும், நேரலை செய்யும் வாய்ப்பையும் பெற்ற நாம், பெட்னாவின் நிகழ்ச்சிகளை இணையம் வழி நேரலையில் காணும் வாய்ப்புப் பெற்றோம். தமிழக நேரத்துக்கு நள்ளிரவிலும், விடிகாலையிலும் நிகழ்ச்சிகள் தெரிந்தாலும், பார்க்கத் தவறவில்லை. (நன்றி: தமிழ்மணத்துக்கு...) செம்மொழி மாநாட்டுக்கு குதி, குதியென்று குதித்த மீனகம் தளம் இந்த நிகழ்வை நேரலை செய்தது போலும். இன்றுவரை விளம்பரமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது,

’செம்மொழி மாநாட்டை எங்களைப் போன்றவர்கள் எதிர்த்தாலும், இன்று அதனால் தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட திட்டங்கள் வருவதில் மகிழ்ச்சி’ என்று அதன் பலனை ஒப்புக் கொண்டு கவிஞர் தாமரை அவர்கள் தன் கருத்தைத் தெரிவித்த போது மிகுந்த மகிழ்வோடு பாராட்டத் தோன்றியது.

விடிகாலை நேரத்தில் காது கேள்பொறியை இணைத்தபடி உட்கார்ந்தே உறங்கிக் கொண்டிருந்தவனை இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் குரல் எழுப்பியது.  உரையாற்றத் தொடங்கியிருந்தார். 

”சினிமாவில் இருப்பவனை கவுரவப்படுத்துங்கள்; கர்வப்பட வைக்காதீர்கள்” என்றெல்லாம் உரையாற்றிக் கொண்டு வந்தவர், திடீரென ”திராவிடம் என்கிற சொல் தமிழனை, தமிழினத்தை அழித்தது” என்றார். தொடர்ந்து அவர் உமிழ்ந்த சொற்கள் அவரது நினைப்பையும், புரிதலையும் மட்டுமல்லாமல் அதற்குக் கை தட்டியவர்களின் புரிதலையும் நமக்கு உணர்த்தியது.

”என்ன திராவிடம்?”
”திராவிடம் பேசுகின்றீர்களே... தோழர்களே, என் இனத் தமிழன் செத்து ஒழிந்தானே... அண்டை மாநிலத்தில் ஒருவன் எனக்காகக் கண்ணீர் வடித்தானா?”
”திராவிடம் என்கிற சொல் - பெரியார் - வணக்கத்திற்குரிய தலைவர். இல்லையென்று சொல்லவில்லை. 
ஒரு காலகட்டத்தில் தமிழனை தட்டி எழுப்பினீர்கள். இல்லையென்று சொல்லவில்லை. 
ஆனால் தமிழனைத் தான் நீ அழிச்ச...  கேரளாவில சொல்லல... ஆந்திராவில சொல்லல... கர்நாடகத்தில சொல்லல.. 
பகுத்தறிவுவாதி... 
ரைட்... 
திராவிடம் என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி... இன்று வரைக்கும் தமிழன உணர்வு செத்துப் போய்விட்டது. 
நாமெல்லாம் தொப்புள் கொடி உறவு போலிருக்குன்னு தப்பா நினைச்சுட்டோம்.”
”திராவிடம் என்று சொல்லி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்” என்ற போக்கில் இருந்தது அவரது உரை. இது பாரதிராஜாவுக்கு மட்டுமல்ல, பலருக்கும் இருக்கும் குழப்பம்.

பெரியார் நல்லவர்; அல்லது கெட்டவர். ஆனால் ”திராவிட இயக்கமும், திராவிடச் சிந்தனையும் தமிழனுக்கு எதிரானது” என்பதாக குணா கும்பல் 1990-களில் தொடங்கிய விஷமப் பிரச்சாரப் பணி தற்போது சிலரால் முன்னெடுக்கப்பட்டு பலருக்கும் பரப்பப்படுகிறது. குறிப்பாக இளைஞர்களைக் குறிவைத்து இக்கருத்தோட்டம் பரப்பப்படுகிறது. (அதிலும் சிலர் ’அறிஞ்ஞ்ஞ்ஞர் குணா’ என்று அடைமொழியோடு வேறு அவரை அடையாளப்படுத்துகிறார்கள்.) குணா பெரியாரை முதன்மைப்படுத்தி குறை சொல்லிக் கொண்டிருந்தாலும், இன்றைய சூழலில் ’பெரியாரை எதிர்த்தல்’ நம்மை தனித்து விட்டுவிடும் என்ற பயம் காரணமாக, ’பெரியார் நல்லவர் தான்; ஆனால் அவரது திராவிட இயக்கச் சிந்தனை கெட்டது‘ என்பதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

”திராவிடம் என்ற கோட்பாடு அல்லது திராவிட இயக்கங்கள் தமிழனுக்கு எதிரானவை, திராவிடம் பேசியதால் அழிந்தோம், தமிழன் என்ற உணர்வை இழந்தோம்” என்ற இந்த வாதங்களுக்கான பதில் ஒருபுறம் இருக்கட்டும். இத்தகைய வாதங்களின் அடிப்படைப் புரிதல் என்ன என்பதை உரைத்துப் பார்த்தாலே உண்மை பளிச்சிடும்.
----------------------------------------------------------------------------------
இந்தியா அல்லது இந்தியர் போன்றதா திராவிடம்?


”நாம் ஒன்றாயிருக்க வேண்டும்; இந்திய ஒற்றுமை - இந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும். தமிழர் என்பதெல்லாம் குறுகிய வட்டம்; இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழர் என்ற அடையாளத்தை ஏற்க மாட்டோம்.”




இப்படியெல்லாம் உளறுவதைப் போல அல்ல. திராவிடம் என்பது நமக்கான பாதுகாப்பு.


1. திராவிடம் பேசும் இயக்கங்கள் தமிழர்களிடம் தான் தங்கள் பரப்புரையை மேற்கொண்டன, மேற்கொள்கின்றன என்பதுதானே உண்மை. 


2. ”கர்நாடகத்துக்காரன் திராவிடன்; அதனால் அவன் காவிரியிலிருந்து தண்ணீர் தராவிட்டால் பரவாயில்லை” என்றா திராவிட இயக்கங்கள் பேசின? கர்நாடகத்துக்காரனை எதிர்த்துப் பேசினால் நம் ஒற்றுமை குலைந்துவிடும் என்றா சொல்லியது திராவிட இயக்கம்?


* கர்நாடக் இசையென்று சொல்லாதே; தமிழிசை என்று சொல் என்று தமிழிசைக்காகக் குரல் கொடுத்தது, தமிழிசை மாநாடுகளை நடத்தியது யார்?


3. முல்லைப் பெரியாறு பிரச்சினை வெகு அண்மைக் காலத்திலானது; கன்னியாகுமரி எல்லைப் பிரச்சினையிலிருந்து இன்று வரை தமிழர்களுக்காகத் தானே திராவிட இயக்கம் குரல் கொடுத்தது. அவன் திராவிடன் என்று பேசி அவன் அடித்தால் தாங்கிக் கொள் என்றா திராவிட இயக்கம் சொன்னது?


”வட்டிக் கடையோ மார்வாடி; ஜவுளிக்கடையோ குஜராத்தி; பெட்டிக் கடையோ மலையாளி; சோடா உடைக்கிற தமிழனே சொரணை உனக்கு வராதா?” என்று ஊர் ஊராய் பேரணிகளில் முழக்கம் இட்டு உணர்வைக் கிளப்பியது யார் - திராவிடர் இயக்கம் அல்லவா? அரசுப் பணிகளில், உயர் அலுவல்களில் தமிழர் அல்லாத பிற மாநிலத்தார் எவர் வந்தாலும் அதனைக் கண்டித்தது திராவிட இயக்கம் அல்லவா?


4. ”அலுவலகங்களில், பள்ளிகளில் இந்தி - ஆங்கிலம்; ஆலயங்களில் சமஸ்கிருதம்; அவற்றில் இசையாகப் பொழிவதுவும் தெலுங்கு”  என்று தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடாமல், தமிழைத் தமிழில் பாடுவதற்காக இயக்கம் கண்டது யார்? போராடியது யார்? தமிழில் பாடினால் தீட்டாகுமா என்று அதற்காகக் களம் கண்டது யார்?

தெலுங்கு என்றோ, தெலுங்கர் என்றோ,  மலையாளம், மலையாளி என்றோ, கன்னடம், கன்னடர் என்றோ இருப்பதற்காக திராவிடர் என்ற பெயரால் தமிழர்களை அடிமைப்படுத்துவதை, ஆதிக்கம் செலுத்துவதை எப்போதும் திராவிட இயக்கம் தான் முன்னின்று எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு ஏன்? 

திராவிட நாடு என்று கோரிக்கை எழுப்பிய பெரியாரும் திராவிட இயக்கமும், ’தட்சிணப் பிரதேசம்’ என்ற பெயரால் இப்பகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட்ட போது, மறைமுகமாக திராவிட நாடு கிடைத்துவிட்டது என்றா ஏற்றுக் கொண்டார்கள்? 


மாறாக ’மொழி வாரி மாநிலம் தான் வேண்டும்’, ’தமிழ்நாடு தான் வேண்டும்’; இல்லையேல் ’தட்சிணப் பிரதேசம் என்ற பெயரில் ராவ்களும், நாயுடுகளும், தெலுங்கனும், கன்னடனும் தான் நாட்டை ஆள்வான்; தமிழன் ஆள முடியாது’ என்று உறுதியாக நின்று தமிழனின் உரிமையைப் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் அல்லவா? காமராசரையும் அதற்கு இணங்க வைத்தவர் தந்தை பெரியார் அல்லவா? 


திராவிட நாடு கேட்ட இயக்கம் - தட்சிணப்பிரதேசம் என்ற பெயரில் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டிருக்குமா? அவர்கள் நழுவ விடவில்லை; காரணம் திராவிடன் என்ற பெயரில் தமிழன் அடிமைப்படுத்தப்படக் கூடும் என்பதில் எச்சரிக்கையாக இருந்தது திராவிட இயக்கம். 

இன்னும் பார்ப்போமே...
(பாகம்-2)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
முதலில் ஏனைய திராவிட மொழி பேசுபவர்களில் மனநிலைய மாற்றப்பாருங்க. அது முடியாத பட்சத்தில்... அது முடியாதுன்னு நம்பறேன். அதனால
"திராவிட "ன்னு பேரை வைசசிட்டு இருக்கிற கழகங்கள் பெயரை மாத்திடுங்க.
யுவகிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
திராவிடத்தை எதிர்த்து தமிழின அடையாளத்தை மீட்கப் போறதா சொல்லுற உணர்வாளர்கள் எல்லாரும் ஒரே சாதிக்காரங்களா இருக்காங்களே தோழர்? முதலில் தமிழரசி நடராசன் ஆரம்பிச்சதா நினைவு. அப்புறம் சீமானில் தொடர்ந்து இப்போ பாரதிராஜாவில் தொடருது. இதுக்குப் பின்னாடி ஏதாவது வலுவான அரசியல் இருக்கா?
South-Side இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த இணைப்பினைப் படிக்கவும்.


நன்றி.

http://lakaram.blogspot.com/2010/07/blog-post_08.html
அ.முத்து பிரகாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு இடுகை ...வலுவான வாதங்களுடன் ..தொடர்ந்து பார்க்கிறேன் ...
நன்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...