முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெஞ்சுகளைச் சுத்தப்படுத்துவோம் வாருங்கள்!

காப்பிக் கறை
டீக்கறைகளைவிட பெரும்
காவிக்கறை
படிந்து கிடக்கிறது
பெஞ்சுகளில்!

காலங்காலமாய் எம்மை
ஏறி மிதித்து நடந்ததில்
காலடியில் ஒட்டிய
எங்கள் ரத்தக் கறையுடன்
கருப்பு அங்கி தரித்து
கால் மேல் கால்போட்டு
கர்வமாய் அமர்ந்திருக்கின்றன
காட்டேரிகள்!

இவை
வகுப்பறைத் தவறுக்காக
ஏறி நிற்கும்
பள்ளிக் கூட
பெஞ்சுகள் அல்ல;
ஒய்யாரமாய்
ஏறி நின்றபடி
குற்றவாளிகள்
தீர்ப்புச் சொல்லும்
பெஞ்சுகள்!

கரன்சிகளின்
எடை காரணமாய்
கையிலிருந்து நழுவுகிறது
நீதியின் தராசு!

ஆணை.. ஆணை... என்று
தட்டப்படும் சுத்திகளின்கீழ்
உடைந்து நொறுங்குகின்றன
சட்டத்தின்
சமத்துவக் கூறுகள்!

மதவாத ஆணிகள்
அறையப்படுகின்றன நேரடியாக
மக்கள் முதுகில்!

சட்டங்களுக்குள்
சிறைப்படாமல்
மனுவின் நீதியிலிருந்து
புறப்படுகின்றன தீர்ப்புகள்!

அதிகாரத்தின் உச்சியில்
நுழைந்ததும்
அக்கிரகாரத்தின்
சுவீகாரப் புத்திரர்களுக்கு
புதிதாய் முளைக்கிறது
பூணூல்!

குடுமி இழந்த தலைகள்
அதிகாரத்தின்
குடுமியைத்
தன் கையில்
பெறத் துடிக்கின்றன.

இந்த மர பெஞ்சுகளின்
அதிகார வேர்கள்
'திலக் மார்க்'கிலிருந்தபடி
'சன்ஷத் பவனி'ன்
அடியைப் பெயர்க்கின்றன!

காப்பிக் கறை
டீக்கறைகளைவிட பெரும்
காவிக்கறை
படிந்து கிடக்கிறது
பெஞ்சுகளில்!

பெஞ்சுகளைச்
சுத்தப்படுத்தவோம்!
வாருங்கள் துடைப்பத்தோடு!

கருத்துகள்

KaniBlog இவ்வாறு கூறியுள்ளார்…
again a good one.. :-)
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தோழி கனி அவர்களே!
வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் இவ்வாறு கூறியுள்ளார்…
வரிகளில் நல்ல வேகமும் உணர்ச்சியும் கொப்பளிக்கிறது... தொடரட்டும் சவுக்கடி கவிதைகள்!
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
கருப்பும் காவியும் கலக்குது

காசுங்கூட காவியுடன் கலக்குது

கலக்குங்கள் காலிகள் கல்ங்கட்டும்

காததூரம் ஓடட்டும் உணரட்டும்.
தமிழச்சி இவ்வாறு கூறியுள்ளார்…
ஓவ்வொரு
வார்த்தையும்
சவுக்கடி
தோழர்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தோழர்கள் கவுதமன், தமிழன், தமிழச்சி!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு விடுபட்ட அடிக்குறிப்பு:
திலக் மார்க்: உச்சநீதிமன்றம் அமைந்திருக்கும் வளாகம்.
சன்ஷத் பவன்: பாராளுமன்ற வளாகம்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
a good one buddy. timely delivered.
With warm Regards,
RVC
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அதை ஏனய்யா அனானியாய் வந்து சொல்கிறீர்.... சந்திரரே!
தமிழச்சி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…