ஊடகங்களை ஆக்கிரமத்திருந்த பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மட்டுமின்றி, அதன் தலைவர்களது வாழ்க்கை வரலாற்றையும் திரித்து, மறைத்து வெளியிடுவதில் செவ்வனே செயலாற்றி வந்தன. அத்தகைய ஊடகங்களை நம்பிப் படித்துவந்த நம் மக்களும் இதூதான் உண்மை என்றெண்ணி தவறான செய்திகளை மேலும் பரப்பினர்.
அப்படி, தந்தை பெரியாரின் கருத்துகளை வெட்டி, ஒட்டி, முன் பின் சேர்த்து, அவர் சொன்ன கருத்தை அந்தக் காலத்தோடு பொருத்திப் பார்க்கவிடாமல் தவறான பொருள்படும்படி வெளியிடுவதில் தினமலர், துக்ளக் உள்ளிட்டவற்றிற்கு பெரும்பங்கு உண்டு.
அவ்வப்போது சில்லறைப் பொய்களைக் கசியவிட்டு, அதன் மூலமும் சுகம் காணும் அவர்களின் வாடிக்கை. பூணூலைக் கொண்டு முதுகு சொறிவதைவிட அண்மைக் காலமாக இதுதான் அவர்களுக்கு மிகவும் பிடித்தது. இத்தகைய கும்பல் தான் முதலில் இனையத்தைக் கைப்பற்றி, தவறான செய்திகளை வெளியிட்டுவந்தது.
விக்கிபீடியா தளம் பொதுவானதும், ஒப்பன் சோர்ஸ் தன்மையிலானதும் என்பதால், அதில் புகுந்து கொண்டு தந்தை பெரியார் வரலாற்றில் கை வைக்கும் வேலையையும் அவர்கள் மிக்க சிரத்தையுடன் செய்து வருகிறார்கள்.

2004-இல் ஒரு சிறிய அறிமுகமாக இரண்டு வரிகளில் இடம்பெற்றிருந்த பெரியாரின் வரலாற்றுப் பக்கத்தப் பார்த்ததும், உடனடியாக அதில் மேலதிக தகவல்களை இணைத்தேன். மேலும் பெரியார் தொடர்பான உரிய சுட்டிகளையும் இணைப்புக் கொடுத்தேன். அதன் பின் அவ்வப்போது பார்க்கும்போது தகவல்கள் மாறியிருக்கும், புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றில் சரியான தகவல்கள் இணைக்கப்படும்போது மகிழ்வோமேயானால், அடுத்த சில தினங்களில் ஏறுக்கு மாறாய் பெரியாரை கொச்சைப்படுத்தும் படி வரலாறு திரிக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆடு, புலி ஆட்டம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
முதலில் 2004-ல் நல்லதொரு அறிமுகத்தை வெறும் பார்வையாளனாக இருந்து தந்து, பின்னர் விக்கிபீடியாவின் உறுப்பினராகி அதன் மூலமும் செயல்பட்டோம். நம் நண்பர்கள் பலரும் இவ்வாறு திருத்தங்களை அவ்வப்போது சுட்டிக் காட்டியும், மேற்கொண்டும் வந்திருக்கிறார்கள்.
இந்த மூன்றாண்டுகளில் இரண்டாண்டு போராட்ட வரலாறு
இங்கே காணக்கிடைக்கிறது. எத்தனை முறை எத்தனை பேரால் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை இதைப் பார்த்தால் தெரிந்துகொள்ளமுடியும்.

பெரியாரை வெறும் இந்து மத எதிர்ப்பாளராகவும், பார்ப்பன எதிர்ப்பாளராகவும், வன்முறையாளராகவும் காட்டி பொய்த் தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் தோழர் ஒருவர் சுட்டிக்காட்டியதைப் பார்த்து, மீண்டும் இந்த ஆடுபுலி ஆட்டத்திற்கு தயாரானபோது, "இந்தக் கட்டுரை தொடர்பாக அடிக்கடி விவாதம் எழுதுவதால், திருத்துவதிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தொடர்ந்து வரும் விவாதத்தில் பங்கெடுக்குமாறு வேண்டுகோளும் விடப்பட்டிருக்கிறது. முழுமையான, முற்றிலும் சரியான ஆதரங்களோடு உள்ள தகவல்கள் நம்மிடம் இருந்தும் அவற்ரை சரிசெய்யமுடியாத நிலை உள்ளது.
தன் இறுதிநாள் வரை ஜாதி எதிர்ப்பாளராக வாழ்ந்த பெரியாரை -
'ஈ.வே.ராமசாமி நாய்க்கர்' என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். இன்றும் பெரியாரை இப்படி கொச்சைப்படுத்தும் இந்தப் பாங்கு, தினமலர், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றோருக்கு இருக்கிறது. அந்தத் திரிபு வாதிகள் கூட்டத்தின் இன்னொரு பணிதான் இது.
பெரியார் (Periyar) என்பது 'பெரியாறு' (Periyar river) ஆற்றைக் குறிப்பதால் பெரியார் என்ற பெயர் ஈ.வெ.ராமசாமி என்று மாற்றப்பட்டிருப்பதாக விவாதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. "பெரியார் என்ற சொல் தந்தை பெரியாரைத் தான் அடையாளப் படுத்துகிறது; காந்திக்கு இணையாக அரசால் அவர் போற்றப்படுவதை பாருங்கள்" என்று இணைப்போடு
ஒருவர் எழுதியிருக்கிறார். இன்னும் பெரியார் நாய்க்கராகவே அவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்.
வழக்கமான பல்லவிகளான, "அவர் இந்து மதத்தை மட்டும் எதிர்த்தார்" "அவர் பார்ப்பன எதிரி..." என்றெல்லாம் புலம்புவதோடு வன்முறை இயக்கமாக திராவிடர் கழகத்தைக் காட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
ராஜாஜியைக் கொல்ல தி.க.வினர் சதி செய்ததாகக் கூறுகிறது ஒரு செய்தி.
//Later, in regards to a DK member's attempt to assassinate Rajagopalachari, he "expressed his abhorrence of violence as a means of settling political differences".//
//EVR's followers have broken temple icons, cut sacred threads and tufts from Brahmin priests, and have often portrayed Brahmins in the most derogatory manner in their meetings and magazines (see
http://www.viduthalai.com/ and
http://www.unmaionline.com/ - both in Tamil language).//
இன்னும் ஏராளமான புரட்டுச் செய்திகளோடு, வேறு யாரும் மாற்றம் செய்யமுடியாதபடி தடுக்கப்பட்ட பக்கமாக இருக்கிறது 'பெரியார்' பற்றிய விக்கி பக்கம்.
விக்கிபீடியாவின் தமிழகக்குழுவின் மூலம் இதைத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தோழர்கள், தொடர்புள்ளவர்கள் தகவல் தரவும்.
எவ்வளவு செய்ய முடியுமோ, அதைச் செய்யலாம். யாராவது தொடர்புடையோரைக் கொண்டு அவற்றை மாற்றலாம். திரிபுவாதங்கள் நிரம்பி இருந்தால் விக்கிபீடியாவின் நம்பகத் தன்மை அடிபடும்.
சரியான தகவல்கள் periyar.org தளத்தில் கிடைக்கிறது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
திரிபுகளைத் தடுக்க திராவிடரே திரள்வீர்! குரல் எழுப்புவீர்!