ஒரு மாநிலத்தின்
ஒரு நாள்
பொருளாதார வளர்ச்சியை
பாதிக்கிறதாம் - 'பந்த்'...
ஒப்பாரி வைக்கின்றன
உச்சநீதிமன்றமும்
உயர்ஜாதி ஊடகங்களும்!
தூங்கிக் கிடந்த
சேதுத் திட்டத்தினால்
நூறாண்டுகளாய்
எங்கள் பொருளாதாரம்
தேங்கிக் கிடந்தபோது
எங்கே போயிருந்தார்கள் இவர்கள்?
மக்களைப் பற்றிக்
கவலை கொள்வதாய்
மாய்மாலம் காட்டுவோரே!
மக்கள் நலத் திட்டத்தை
மதத்தின் பேரால்
முடக்கி தடை சொல்லும்போது
எங்கே செருகியிருந்தன
உங்களின் எழுதுகோல்கள்?
ஒரு நாள்
இயல்பு வாழ்க்கைக்கு
குந்தகம் வந்தது;
அய்யகோ பறிபோனது
அடிப்படை உரிமை என்று
அலறும் இவர்களின் கரிசனம்...
இடஒதுக்கீட்டுக்கெதிராய்
உயிர்களோடு விளையாடிய
எய்ம்ஸ் பூணூல்களின்
சண்டித்தனத்தின் போது
எங்கே போயிருந்தது?
கோடை விடுமுறையில்
உல்லாசமாய்
தூங்கப் போனதால்
தேங்கிக் கிடக்கும்
வழக்குக் கோப்புகள்
கேட்கின்றன...
நாங்கள் வெள்ளிவிழா, பொன்விழா
கொண்டாடுகையில்
நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?
"தமிழக அரசுக்கெதிராய்
தயாரா 356?" என
ஆட்சியைத் துண்டிக்கத் துடிக்கும்
நீதியின் வாள்கள்;
'உச்சநீதிமன்றமா?'
ம்ஹூம்... முடியாதென
கேரள, கர்நாடாக அரசுகள்
கேளாமல் இருந்தபோது
யாருக்கு சவரம் செய்து கொண்டிருந்தன?
ஒரு நாள்
பொருளாதார வளர்ச்சியை
பாதிக்கிறதாம் - 'பந்த்'...
ஒப்பாரி வைக்கின்றன
உச்சநீதிமன்றமும்
உயர்ஜாதி ஊடகங்களும்!
தூங்கிக் கிடந்த
சேதுத் திட்டத்தினால்
நூறாண்டுகளாய்
எங்கள் பொருளாதாரம்
தேங்கிக் கிடந்தபோது
எங்கே போயிருந்தார்கள் இவர்கள்?
மக்களைப் பற்றிக்
கவலை கொள்வதாய்
மாய்மாலம் காட்டுவோரே!
மக்கள் நலத் திட்டத்தை
மதத்தின் பேரால்
முடக்கி தடை சொல்லும்போது
எங்கே செருகியிருந்தன
உங்களின் எழுதுகோல்கள்?
ஒரு நாள்
இயல்பு வாழ்க்கைக்கு
குந்தகம் வந்தது;
அய்யகோ பறிபோனது
அடிப்படை உரிமை என்று
அலறும் இவர்களின் கரிசனம்...
இடஒதுக்கீட்டுக்கெதிராய்
உயிர்களோடு விளையாடிய
எய்ம்ஸ் பூணூல்களின்
சண்டித்தனத்தின் போது
எங்கே போயிருந்தது?
கோடை விடுமுறையில்
உல்லாசமாய்
தூங்கப் போனதால்
தேங்கிக் கிடக்கும்
வழக்குக் கோப்புகள்
கேட்கின்றன...
நாங்கள் வெள்ளிவிழா, பொன்விழா
கொண்டாடுகையில்
நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?
"தமிழக அரசுக்கெதிராய்
தயாரா 356?" என
ஆட்சியைத் துண்டிக்கத் துடிக்கும்
நீதியின் வாள்கள்;
'உச்சநீதிமன்றமா?'
ம்ஹூம்... முடியாதென
கேரள, கர்நாடாக அரசுகள்
கேளாமல் இருந்தபோது
யாருக்கு சவரம் செய்து கொண்டிருந்தன?
பெட்டிக் கடைக்கு
போக முடியாததால்
உரிமை போனதென்று
கூப்பாடு போடுவோரை;
பேக்கரியோடு எரிந்த
குஜராத் பிணங்கள்
கேட்கின்றன...
"நாங்க எரியும்போது
எவன் மசுரப் புடுங்கப் போனீங்க!"
-சமதர்மப் புதல்வன்
குறிப்பு: இறுதி இரண்டு வரிகள் மட்டும் கவிஞர் இன்குலாப்-ன் 'மனுசங்கடா' பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)
கருத்துகள்
இதை யார் கேட்பது?
தமிழ்நாட்டில் இருக்கும் சில அல்ப கட்சி தலைவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக கலைஞருக்கு எதிராக விச நாடகம் ஆடுவதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் வருகிறார்கள். மக்களை ஏமாற்ற முடியாது.
நீதிமன்றம் கூறிய தீர்ப்பை மக்கள்தான் ஏற்கவில்லை. அதற்காக கலைஞரின் ஆட்சியை குறைகூறுவது சிறுபிள்ளத்தனமானது. மக்களே முன்வந்து கலைஞரின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து பந்த் நடத்தியதால், உச்ச நீதிமன்றம்தான் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் தீர்ப்புதான் முதன்மையானதும் இறுதியானதும்.
//கோடை விடுமுறையில்
உல்லாசமாய்
தூங்கப் போனதால்
தேங்கிக் கிடக்கும்
வழக்குக் கோப்புகள்
கேட்கின்றன...//
இது கலக்கல்.
:(
உடனே பதவி விலக வேண்டும்.
அவருக்கு மானமில்லை என்றால்,மானமுள்ள பாராளுமன்றம் அவரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
உச்ச நீதி மன்றந்தான்,ஆனால் அங்கு உட்காரத் தகுதியிருக்க வேண்டும்,நாணயமும்,நா நயமும் இருக்க வேண்டும்.சவரம் செய்யும் சகோதரர்கள் இவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சும்மா இப்படி பிலாக்கணம் பாடறத விட்டுப்புட்டு வேற வேலை வெட்டியப் பாருங்கய்யா....வெங்காயங்களா...
'உச்சநீதிமன்றமா?'
ம்ஹூம்... முடியாதென
கேரள, கர்நாடாக அரசுகள்
கேளாமல் இருந்தபோது
யாருக்கு சவரம் செய்து கொண்டிருந்தன?
//
நீதி வாள்கள் "பட்டை" தீட்டுவதும் "நாமம்" தீட்டுவதும் நாமறிந்த ஒன்று தானே!!"