பெரியார் திரைப்படத்தின் இந்திப் பதிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. மொழி மாற்றம் செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறார் இந்திப் 'பெரியார்'. வடபுலத்துத் தலைவர்கள் பார்ப்பதற்கு விரைவில் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி விரைவில் பெரியார் படத்தைப் பார்க்கவுள்ளார். இந்தியாவெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாக பெரியார் இன்னும் செல்லவிருக்கிறார் வெகுதூரம்.
தொடர்ந்து பெரியார் டி.வி.டி. இங்கிலீஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளின் துணைத் தலைப்புடன் (subtitle) வரவிருக்கிறது.
'பெரியார்' திரைப்படம் இந்தியன் பனரோமா பிரிவில் இடம் பெற்றிருப்பதையொட்டி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இனமுரசு சத்யராஜ், இயக்குநர் ஞான ராஜசேகரன் ஆகியோரோடு கலந்துகொண்டபோது தமிழர் தலைவர் கி.வீரமணி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
கருத்துகள்
இதே மாதிரி மற்ற மொழிகளிலே அவர் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் மொழி பெயர்த்தால், பெரியாரின் வீச்சு அதிகரிக்கும்...
வீரத்திருமகனை பெற்றெடுத்து இவ்வுலகிற்கு கொடுத்திருக்கும் தமிழினத்தை நினைத்து பெருமை கொள்வோம்.
தமிழன் எனச் சொல்லி,
தலை நிமிர்வோம்!
தந்தையின் கொள்கைகளின் கீழ் அனைத்து தமிழினமும் ஒன்று படுவோம்.
கயவர்களின் முகமூடிகளை கழற்றி விரட்டுவோம்.
கலைஞர் தன் அரசியல் வாழ்நாளில் செய்த மிக முக்கியமான செயல் இந்த படத்தை தமிழ் மக்களுக்கு அளித்ததாகத்தான் இருக்க முடியும்.
கலைஞருக்கு நன்றி.
இந்தி பெரியார் படத்தில் 'இந்தி எதிர்ப்பு' காட்சிகள் இருக்குமா ?
:)