Kappaleri poyachu ... (எங்கள் தங்கம் படத்தில் மொட்டை போட்டபடி எம்.ஜி.ஆர் நடத்தும் நிலாவுக்கு இந்திய ராக்கெட் போவது பற்றிய கதாகாலட்சேபப் பாணியில் நிமிட்ஸ் கப்பலின் சென்னை வருகைப் பற்றி...) கதா : ஆதௌ கீர்த்தன ஆரம்பத்திலே... அமெரிக்கா... அமெரிக்கா... எனப்பட்ட தேசத்திலேயிருந்து ராணுவக் கப்பல் ஒன்று கீழைத் தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டது.நிமிட்ஸ்-ங்கிற அந்தக் கப்பல் இந்தியா வந்து சென்னைத் துறைமுகத்தில நிக்கறதுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பியது. ரங்கு : ஏன்னா.... கப்பல்னா துறைமுகத்திலதான் நிக்கும். பின்ன ரோட்டிலயா வந்து நிக்கும். அதுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிச்சா. கதா : அடே ரங்கு! வந்த நிமிட்ஸ் இருக்கானே அவன் சாதாரண கப்பல் இல்லேடா... அண்ட பகிரண்டமொடு எத்திசையும் அதிர சண்டப் பிரசண்டனென குண்டுகளும் அதிர... ரங்கு, சுப்புனி : சண்டப் பிரசண்டனென குண்டுகளும் அதிர... கதா : உலகெல்லாம் சுற்றிய போர்க் கப்பல்டா அது... வெறும் போர்க்கப்பல் இல்ல... அணு உலையில இயங்குற அணு ஆயுதக் கப்பல்... சுப்புனி : உலகெல்லாம் சுத்தினதா...எந்தெந்த நாடு மாமா... கதா : ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம்னு அமெரிக்கா அமைதிப் பணி செ...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.