முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நீதிமன்றப் பூனைக்கு மணி"

"....இருந்தாலும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது". இப்படி ஒரு வசனத்தை பல்வேறு திரைப்படங்களிலும் நீதிபதிகள் பேசக் கேட்டிருக்கிறோம்.
அதையே நீதிபதிகளுக்கு திருப்பி அடித்திருக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட, தங்களை எந்தவிதத்தில் உயர்ந்தவர்களாக நீதிபதிகள் கருதிக்கொள்கிறர்கள்."
"ஆகாயத்தில் இருந்து குதித்தவர்களல்ல இவர்களெல்லாம்..."
"தமிழ்நாட்டில் சில நீதிபதிகள் தங்களை அப்படி கருதிக் கொண்டிருக்கிறார்கள்"
"மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதும் நல்லதல்ல...." என்கிற தொணியில் சும்மா பிரித்தெடுத்துவிட்டார் போங்கள்.

முதல்வர் கலைஞரும் அதை வழிமொழியும் விதமாக, "இதுவரை பூனைக்கு மணியை யார் கட்டுவது என்றிருந்த நிலையில், அந்தப் பணியை ஆற்காட்டார் செய்துவிட்டார்" என்று பாராட்டியிருக்கிறார்.


முழுமையான பேச்சை நாளை செய்தித்தாள்களிலிருந்து எடுத்துப் போடுகிறேன். அல்லது இணைப்பைக் கொடுத்துவிடுகிறேன். சன் செய்திகளில் கேட்டவுடனேயே அந்த மகிழ்ச்சியில்
துள்ளிக்குதித்து இந்தப் பதிவைப் போடுகிறேன். அப்படி ஏன்டா துள்ளிக் குதிக்கிறாய் என்கிறீர்களா? அதற்கு முந்தைய செய்தி அப்படிப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தனது தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் தலைக்கேறிப்போய் பின்வருமாறு பேசியிருந்தார்.
" * நீதிபதிகள் சொத்துக்கணக்கைக் காட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை எந்த சுயமரியாதையுள்ள நீதிபதியும் ஏற்க மாட்டார். தாங்களாகவே முன்வந்து கணக்குக் காட்டுவது வேறு.
*அதேபோல நீதிபதிகளின் மீதான குற்றச்சாட்டுகளை வேறொருவர் விசாரித்துத் தீர்ப்பு சொல்வது என்பதும் சுயமரியாதைக்கு இழுக்கானது. அதை ஏற்க முடியாது.
* 9-ஆவது அட்டவணை குறித்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஆனால் அதன் காரணமாக தமிழக அரசின் 69 % இடஒதுக்கீட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை# "

தன்னைப் பிறிதொருவன் விசாரிப்பதை சுயமரியாதைக்கு இழுக்கு என்று கருதினால், அது நீதிபதிகளுக்கு மட்டும் எப்படி பொருந்தும். நமக்கு மட்டும் சுயமரியாதை இருக்காதா?
அல்லது நீதிபதிகள் எல்லாம் உத்தம புத்திரர்கள் என்று சான்றுதரப் போகிறாரா?

நீதிபதிகள் சொத்துக்கணக்கைக் காட்ட வலியுறுத்தக்கூடாது என்றால், அரசியல் வாதிகள் காட்டவேண்டும் என்று கேட்க தார்மீக உரிமை எப்படி கிடைக்கும்?

அண்மைக் காலமாகவே நம் நாட்டில் நீதிபதிகளின் போக்கு அருவருக்கத்தக்கதாகவும், தலைக்கேறிப்போனதாகவுமே இருக்கிறது. தான் தோன்றித்தனமாக தீர்ப்பு வழங்குவதும், சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகவும், தங்களை அதிகாரத்தின் உச்சமாக கருதிக்கொள்ளும் மனப்பாங்கும் தெளிவாகத் தெரிகிறது.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முகோபாத்தியாயா, ஒரு பிற்படுத்தப்பட்ட அய்.ஏ.எஸ் அதிகாரியை 'பியூன்' என்று குறிப்பிடுவது. (பியூன்கள் இல்லாமல் ஒரு நாள் நீதிமன்றத்தை நடத்திப் பார்க்கட்டுமே, அதென்ன கேவலமான பதவியா?)
* அப்படிப் பேசிய பின்னும், மாலையிலேயே நீதிமன்றத்தின் மீதுள்ள மரியாதைக்காக வந்திருந்த மற்றொரு அய்.ஏ.எஸ் அதிகாரி (சந்திரசேகரன் இ.ஆ.ப) வணக்கம் செலுத்தியமைக்கு பதிலுக்கு மரியாதைகூட செலுத்தாமல் தனது பூணூல் கொழுப்பைக் காட்டுவது.
* தான் பதவி ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் கூட, 9-ஆவது அட்டவணையில் இடம் பெற்ற சமூக சீர்திருத்த சட்டங்களைக் கேள்விக்குள்ளாக்கி தனது வேலையை காட்டுவது.
* இன்னும் தனது அதிகார எல்லையைத் தானே நீட்டிக்கொண்டு அதை எதிர்த்துக் கேட்கவும் துணிபவர்களை நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் பயமுறுத்துவது என்று கட்டப் பஞ்சாயத்துக்காரர்களைப் போல நடந்து கொள்வது.
* நீதிபதிகளின் பாதுகாப்புப் பணியில் இடம் பெற்றிருப்பவர்களை வேறு பணிக்கு இடம் மாற்றக்கூடாது என்று தனக்கு வேண்டுமென்பதை, யாரும் வழக்குத் தொடுக்காமல் தானாகவே வழக்காக எடுத்துக் கொள்வது. (என்றாவது ஒரு சமூக பிரச்சனையை நீதிமன்றம் இப்படி தானாக எடுத்துக்கொண்டதுண்டா?)

தங்களுக்கு வசதியாக நீதிமன்ற நடவடிக்கைகளை வைத்துக்கொள்வது, இஸ்கூல் பிள்ளைகளாட்டம் கோடை விடுமுறை விட்டுக்கொள்வது, ஆவணி அவிட்டத்திற்கு பூணூலை ரினியுவல் (புதுப்பித்துக் கொள்ள) செய்வதற்கெல்லாம் நீதிமன்றத்தை ஒத்திவைப்பது என்று செயல்படுபவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நாம் யோசித்துக்கொள்ளலாம்.

"பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு, கடும்புலி வாழும் காடு" என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதில் கொடுக்கச் சென்று நீதிமன்றத்திற்குள் இருந்தபடியே கர்ஜித்த தந்தை பெரியாரைப் போல## அவ்வப்போது தான் குரல்கள் வரும். அப்படி வந்த ஒரு குரலை, ஆற்காடு வீராசாமி அவர்களின் இந்த உரையை தலைமேல் வைத்தல்லவா கொண்டாட வேண்டும். என்ன சொல்லத் தோன்றுகிறது தெரியுமா?
"அட்றா சக்கை.... அட்றா சக்கை..அட்றா சக்கை...."# 69 % இடஒதுக்கீட்டுக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால் அது, திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணியின் யோசனைப்படி 31 சி பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டிருக்கிறது. 31 பி-யில் இணைக்கப்பட்ட சட்டங்களுக்கு தான் பிரச்சனை.

## கேஜி.பாலகிருஷ்ணன் ஒரு தலித் தானே என்கிறீர்களா? தனக்கு முந்தைய தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்து உடனடியாக தன்னன அடடயாளம் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று இருந்திருக்கலாம். ஆனால் தங்களின் அதிகாரப் போக்கை தக்க வைக்க, அந்தஇடத்திற்குப் போனவுடன் ஆசை வருவது இயல்புதானே.
போகப்போகப் பார்ப்போம்.
அவ்வாளுக்கு பூணூல் தோளில் தொங்குகிறது. நம்மாட்கள் சிலருக்கு நரம்பே அல்லவா பூணூலாகிவிடுகிறது. அப்படியும் இருக்கலாம்.


முக்கியக்குறிப்பு ஒன்று: கோர்ட்டுகளை நீதிமன்றங்கள் என்றெல்லாம் அழைக்க முடியாது. அவை வழக்கு நடக்கும் இடமாக மட்டுமே இருக்கிறது. நீதி வழங்கும் இடமாக இல்லை. அதனால் "வழக்குமன்றம்" என்று அழைப்பது தான் சரி என்றார் தந்தை பெரியார். மிகவும் சரியே! எனவே நான் தவறாக நீதிமன்றம் என்று குறிப்பிட்டிருப்பதை வழக்குமன்றம் என்றே வாசிக்கக் கோருகிறேன்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
69 % இடஒதுக்கீட்டுக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால் அது, திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணியின் யோசனைப்படி 31 சி பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டிருக்கிறது. 31 பி-யில் இணைக்கப்பட்ட சட்டங்களுக்கு தான் பிரச்சனை.

It also comes under 9th schedule.
If some cats close their eyes the
world will not cease to exist.
If 69% reservation is so safe
then why are you crying so much
now.
neo இவ்வாறு கூறியுள்ளார்…
Good post! Please follow up with the details regarding this issue in ur subsequent posts. :)
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அனானி அவர்களே,
இப்போதைக்கு பிரச்சனை இல்லை என்பது உண்மைதான். ஆனால், அதிலும் கைவைக்க அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது. மேலும் அது ஒன்றுதான் நமக்கு முக்கியம் என்றில்லை. பல சமூக சீர்திருத்த சட்டங்களும் அதன் கீழ்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவ்ற்றின் மீது கைவைக்கும் முன் எதிர்ப்புக்குரலை நாம் உடனடியாக எழுப்பியாக வேண்டும்.
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நியோ அவர்களே! ந்ச்சயம் தொடர்வேன்
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
நான் சில பதிவுகளில் எழுதியுள்ளேன்.என்னதான் நீதிபதிகள் முயன்றாலும் சட்டத்தின் ஒரே ஒரு வார்த்தையைக்கூட சேர்க்கவோ நீக்கவோ முடியாது.அது மக்கள் மன்ற்ங்களால் தான் முடியும்.ஆகவே நீதிபதிகள் சட்டத்தை வளைத்துப் பார்ப்பார்கள்.அன்மைக் காலத்திலே சட்டங்களை எழுதவே ஆரம்பித்துவிட்டார்கள்.நீதிபதி சொல்கிறார் எனக்கு தேர்தலை நிறுத்தும் அதிகாரமோ தேர்தல் ஆணையரை மாற்றும் அதிகாரமோ கிடையாது.அரசு வக்கீலான நீங்கள் அரசிடம் பார்வையாளர்களைப்போடலா
மா என்று கேளுங்கள் என்கிறார்,தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுத்த முன்னிலை IAS அதிகாரிகளைப் போடுகிறார்.அது அவர் வேலை.இதில் நீதிபதி மூக்கை நுழைப்பானேன் மூக்குடை படுவானேன்.நீதிமன்றக் காவலரை மாற்றியதற்கே கடிந்துவிழும் நீதிபதிக்கு
வேறு என்ன கிடைக்கும்.
ஒரு அதிகாரியை அவமானப்படுத்தி,இன்னொரு சம தகுதி உள்ளவருக்கு உன் வணக்கத்தைத் திருப்பிச்சொல்ல நான் வரவில்லை என்று ஒரு நீதிபதி சொல்லி அதற்கு மன்னிப்புக்கூட கேட்கவில்லை.
ஒரு பள்ளியிலே மாணவி பிணமாகக் கிடந்தார்.மக்கள் வேண்டுகோள்படி முதல்வர் முன்னாள் நீதிபதி தலைமையில் ஆய்வுக்கு ஆணையிடுகிறார்.இது சட்ட ஒழுங்குப் பிரச்சினை.இதில் ஏன் மூக்கைநுழைத்து உடை படவேண்டும்.
உச்ச நீதி மன்றம் இந்தியாவின் சட்டத்தை எழுதும் மக்கள் மன்றத்தை அவமானப்படுத்தி சபாநாயகரையே மிரட்டுகிறது.ஒரு சட்டம் கமிட்டியிலே இருக்கையிலேயே அவர்களுக்குக் காபி வேண்டும்மாம்.கமிட்டியின் ரிபோர்ட் வேண்டுமாம்.
ச்ட்டத்திலே 50 விழுக்காடுதான் தரலாம் என்றோ பொருளாதாரத் தடையோ(கிரீமி லேயர்)எங்கேயுமில்லை.இதெல்லாம் திமிருடன் உச்ச நீதிமன்றப் புதிய சட்டங்கள்.69 விழுக்காடு சரியா தவறா
என்று சொல்லாமல் 50 விழுக்காடு இருந்தால் எவ்வளவு இடம் மற்றவர்கட்குக் கிடைக்குமோ அதை அதிகப்படுத்துங்கள் என்று 10 ஆண்டுகளாகத் திரும்பத்திரும்ப அதே பல்லவி!இது ஒரு புதிய சட்டமா ?
கோவில் கருவரை மாதிரி இந்தியாவின் கருவரைக் குள்ளும் அனைவரும் நீதிபதியாக வருவதற்கு வழி செய்யவேண்டும்.நீதிபதிகளின் நியமணங்களே அவர்களது உரிமையாகி விட்டதை மாற்றவேண்டும்.
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப சிறப்பு தமிழன் அவர்களே!
இன்னும் அதிகாரமய்யமாக தாங்கள் இருக்கவேண்டும் என்கிற ஆணவத்தின் உச்சத்தை அடக்க வேண்டிய அவசர, அவசியம் ஏற்பட்ட்டிருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…