முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை சங்கமம் - தொடக்க விழா!
'சென்னை சங்கமம்' பற்றி சக பதிவர் (அய்.அய்.டி.யில் படிப்பவர்) ஒருவர் பதிவிட்டிருக்கிறார். அய்.அய்.டி.யில் தொடக்கவிழா நடைபெறுகிறது என அறிந்தவுடனே போய்ப் பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் திண்ணமாகிவிட்டது. அதனால், கல்லூரி விளையாட்டு விழாவின் களைப்பையும் பொருட்படுத்தாமல் கிளம்பினேன். மாற்றார் யாரையும் எளிதில் அனுமதிக்காத அய்.அய்.டி, கதவு திறந்து வரவேற்றது தமிழக முதல்வரை வரவேற்கும் விளம்பரத் தட்டியோடு!
'சமத்துவப்பொங்கல்' என்ற அறிவிப்பின், வேண்டுகோளின் மூலம் இந்த ஆண்டுப் பொங்கலை கலைஞர் தித்திப்பாக்கியதைப்போல, 'சென்னை சங்கமம்', சென்னை முழுக்க பல்வேறு இடங்களிலும், 'எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள்', அதிலும் 'ஒடுக்கப்பட்ட மக்களின், தமிழர்களின் பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம்' என்னும் செய்தியே மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. சர்வ சாதாரணமாக நுழையமுடியாத, அதிலும் தமிழர்களோ, ஒடுக்கப்பட்டோரோ நுழையமுடியாதபடி சென்னையின் முக்கியப்பகுதியில் இருந்தாலும் தனித்தீவாக இயங்கிவரும் அய்.அய்.டிக்குள் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், பொய்க்கால்குதிரை, சிலம்பாட்டம், காலில் கட்டைகட்டி ஆடுதல் என இத்தனை பேர் நுழைந்து ஊர்வலமாக தங்கள் திறனை வெளிக்காட்டியபடி செல்வதைப் பார்த்த உடனே, எது நடக்கிறதோ இல்லையோ, நிகழ்வின் நோக்கம் வெற்றி என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

செய்திகள் படித்திருப்பீர்கள்...

எண்ணம்: கனிமொழி
இயக்கம்: வசந்த்
ஒருங்கிணைப்பு: ஜெகத் கஸ்பார்

இதன் வெற்றிக்குப் பின்னால்:

இசையமைப்பாளர்: பால் ஜேக்கப்
முக்கிய ஒருங்கிணைப்பாளர்: குமரவேல்
இன்னும் எண்ணற்றோரின் உழைப்பு இருக்கிறது.

சரி, விழாவிற்கு வருவோம்.


நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடிய 'திருநங்கை' நர்த்தகி நட்ராஜ், "இந்தக் கலைவிழா மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதற்கு நானே ஒரு அடையாளம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட எம் போன்ற திருநங்கையருக்கும் வழங்கப்பட்டிருக்கும் நல்ல வாய்ப்பு இது" என்றார் நம்மிடம்.நரேந்திராவின் அவின்யா கலைக்குழுவினரின் நடனம்கே.ஏ. குணசேகரனின் குரலில் அதிர்ந்தது அரங்கம்.


மேடையில் வீடியோ பதிவாளர் உட்பட உடை வடிவமைப்பில் அப்படி ஒரு கவனம். பாருங்கள் படத்தை!இன்னும் படங்களும் செய்தியும் அடுத்த பதிவில்....

கருத்துகள்

சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சென்னை சங்கமம் நல்ல முயற்சி!

படங்களும் பதிவும் அருமை!

நன்றி!
கானா பிரபா இவ்வாறு கூறியுள்ளார்…
சுடச் சுடப் பதிவு, பின்னீட்டிங்க போங்க
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி, தமிழ் எழுத்துக்கள் முழுமையாகத் தெரியாதா? அல்லது பொது அறிவு குறைவா? அது ஐ.ஐ.டி. அய்அய்டி அல்ல.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவு அருமை...!!!

செந்தழல் ரவி
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ப்ரின்ஸ்.. உங்கள் இடுகையைச் சங்கமம் குறித்த சென்னைப் பட்டினப் பதிவிலும் சேர்த்துக் கொள்ளுகிறோம்..
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சிவபாலன், கானா பிரபா!
Sundar இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி - அடுத்த விரிவான பதிவுக்கும் சேர்த்து!
மயிலாடுதுறை சிவா இவ்வாறு கூறியுள்ளார்…
மனப் பூர்வமான வாழ்த்துகள்

மயிலாடுதுறை சிவா
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Puhaipaddangal arumai. Mikka Nandri.
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
இரண்டு அனானிகளுக்கும் நன்றி!

எனினும், //அது ஐ.ஐ.டி. அய்அய்டி அல்ல.// அனானிக்கு!!

எழுத்துச் சீர்திருத்ததின் அடுத்த கட்டமாக 'ஐ' என்பது அதே உச்சரிப்பையும் பொருளையும் தரும் 'அய்'யாக மாறி ரொம்ப காலமாகிவிட்டது- தோழரே! முடிந்தால் எழுத்துசீர்திருத்தம் குறித்த பதிவு ஒன்று போடுகிறேன். படித்துத் தெளியுங்கள்.
Pot"tea" kadai இவ்வாறு கூறியுள்ளார்…
பூங்காவில் பிடித்து இங்கே வந்து சேர்ந்தேன்...பத்ரியின் சங்கமம் கண்ணில் தட்டுப்பட்டது...அவரது பதிவின் நானாக எண்ணிக் கொண்டது இது ஒரு வேண்டாத வேலையோ என்று. உங்கள் பதிவின் மூலம் தெளிந்தேன்.

புகைப்படங்கள் அருமையாக வந்திருக்கின்றன். அந்த பறையொளிக்கும் குழு பச்சையப்பாஸ் மாணவர்களா? அக்கல்லூரி மாணவர்களின் குழுவினர் பறையதிரக் கேட்டிருக்கிறேன்.

முன்னோட்டத்திற்கு நன்றி. விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
"ஐஐடி"யை "அய்அய்டி" என்றால் "சென்னை ச‍ங்கமம்" என்பதை "சென்னய் ச‍ங்கமம்" என்றல்லவா எழுதியிருக்கவேண்டும் ?
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
பார்த்தீர்களா! எழுத்துச் சீர்திருத்ததில் உங்களுக்கெ எவ்வளவு ஆர்வம் வந்துவிட்டது. அது அடுத்த கட்டம் அனானி!
இப்போதே 'கடற்கரய்' (கடற்கரை)என்றொரு எழுத்தாளர் இருக்கிறார்.
அவர் முன்னேறி விட்டார், நாம் இன்னும் நகர்ந்து செல்ல வேண்டியதிருக்கிறது.
Chellappan இவ்வாறு கூறியுள்ளார்…
//பார்த்தீர்களா! எழுத்துச் சீர்திருத்ததில் உங்களுக்கெ எவ்வளவு ஆர்வம் வந்துவிட்டது. அது அடுத்த கட்டம் அனானி!
இப்போதே 'கடற்கரய்' (கடற்கரை)என்றொரு எழுத்தாளர் இருக்கிறார்.
அவர் முன்னேறி விட்டார், நாம் இன்னும் நகர்ந்து செல்ல வேண்டியதிருக்கிறது. //


அன்பு நண்பரே,

இது என்ன சீர்திருத்தம் என்று புரியவில்லை. ஐ தமிழ் எழுத்தாக இருப்பதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. முடிந்தால் ஒரு மின்னஞ்சல் போடவும். srini2206@gmail.com என்னுடைய முகவரி.

ந‌ன்றி!

சீனிவாச‌ன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…