முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஈழத் தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம்!

ஈழ்த்தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று காலை அண்ணா நினைவிடத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தமிழர்தலைவர் கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அண்ணா நினைவிடத்துக்கு விரைந்தனர். இதையொட்டி தி.மு.க.வினர் தமிழகம் முழுக்க உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். நாளை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தத இழுத்து மூடும் போராட்டத்தை திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் நாளை நடத்தும் எனெ கி.வீரமணி அறிவித்துள்ளார்.

வள்ளல் அழகப்பருக்கு நூற்றாண்டு விழா

"கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம் தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு!" என்று பாடப் பெற்ற வள்ளல் அழகப்பரின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு! காரைக்குடி இன்று பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் வள்ளல் அழகப்பர் தான் காரணம் என்றால் அது மிகையில்லை. காரைக்குடியை கல்விக் குடியாக மாற்றியதோடு, மத்திய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர். அடிப்படைக் கல்வி முதல், ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் உருவாகிட முழு முதற் காரணமான வள்ளல் அழகப்பரின் நூற்றாண்டு விழா நன்றியுடையோர் எல்லோராலும் நினைவோடு காரைக்குடியில் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் வசிக்கும் அழகப்பா கல்வி நிறுவன முன்னாள், இந்நாள் மாணவர்கள் மற்றும் காரைக்குடியின் வளர்ச்சியினால் பயனடைந்தோர் சார்பில், அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ஏற்பாடாகியுள்ளது. வரும் 05.04.09 ஞாயிறு காலை 10 மணிக்கு வள்ளல் அழகப்பரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்படவுள்ளது. அ...

கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக ஜெயலலிதா உண்ணாவிரதம்!

கடந்த சில காலமாகவே கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார் செல்வி ஜெயலலிதா. இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில நாட்கள் பத்தியம் இருக்கக் கோரப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் வேறு தாக்கியிருப்பதால், திடீரென உண்ணாவிரத அறிவிப்பு வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் 10-ஆம் தேதி இந்த சிகிச்சை நடைபெறும் என்றும், அதன் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏதாகினும் காணப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் தெரிகிறது. இதற்கான ஆலோசனையை வழங்கிய ஜோதிடர்கள், மாசி மகத்தின் அடுத்தநாளாகவும், செவ்வாய்க்கிழமையாகவும் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு ஏற்ற நாளாகவும் இருக்கும் என்று தெரிவித்தனராம்.. இதற்கான ஏற்பாடுகளை, மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள திரு.கோபால்சாமி, பாண்டியன் ஆகியோர் செய்து வருவதாக ராயப்பேட்டை அ.தி.மு.க மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடைசிக் குறிப்பு: எதையொட்டி என்ற அறிவிப்பு வெளிவிடுவது பற்றி யோசிக்கப்பட்டபோது, கரண்ட் பிரச்சினையான ஈழத் தமிழர் பிரச்சினையையொட்டி என்று சொல்லிக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதா...

எல்லாம் கேளுங்க....மீசையில் மண் ஒட்டவில்லை!

ஹே! எல்லாம் கேட்டுக்க.... கேட்டுக்க....! மீசையில எனக்கு மண் ஒட்டலை... ஒட்டலை... ஒட்டலை! ஏன்னா எனக்கு மீசையே இல்ல...! உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஆதரவாக, மனுத் தாக்கல் செய்யவந்த அரசியல் புரோக்கர் சு.சாமி மீது முட்டை வீசப்பட்டபின் ஓடிஒளிந்து நீதிபதிகளிடம் புகார் அளித்துவிட்டு, வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த சு.சாமி, சாரி... (thatsislam-இன் வேண்டுகோள்படி மு.சாமி ) கருத்து தெரிவித்ததாவது: கோர்ட்டுக்குள் நான் நுழைந்தபோது சிலர் முட்டை வீசினார்கள்.. அதில் சில வக்கீல்களும் இருந்தார்கள். அவர்கள் வீசியது டேபிளின் மீது விழுந்தது. அங்கிருந்த File-களின் மீது விழுந்தது. டவாலியின் மீது விழப்போனது. இதை நீதிபதிகள் பார்த்தார்கள். பின்னர் அந்த கும்பல் ஒரு காவலரைப் பிடித்து அடித்து உதைத்தது. நீதிமன்றத்துக்குள் அவர்களது அட்டூழியத்தை நான் நீதிபதிகளிடம் புகார் செய்தேன். அவர்களும் பதிவு செய்துகொண்டனர்." இதை அவரு(னு)க்கேயுரிய ஜுனூன் தமிழில் சொன்னார். சரி... உன்னைய அடிச்சது உண்மையா-இல்லையா?... முட்டை உன் மேலே விழுந்ததா? இல்லையா? அதைச் சொல்லுப்பான்னா? பென்ச்-ல விழுந்தது... இன்ச்...

தைரியமான ஆளாக இருந்தால்.... விஜயகாந்த் சவால்!

ஊருக்குள் ஒரு கோவணாண்டி இருந்தானாம். அவனது கோவணமும் கிழிந்து தொங்கும் நிலை வந்துவிட்டதாம். வேறென்ன செய்வது என்ற குழப்பத்தில் தானே அந்த கோவணத்தைக் கிழித்துக் கொண்டு அலைந்துவிடுவோமோ என்று வேறு பயம் வந்துவிட்டது. இத்தனை நாள் விட்டுக் கொண்டிருந்த சவடால்களுக்கெல்லாம் சமாதி கட்டும் நிலை வந்துவிட்டதைக் கண்டு தவித்தவனுக்கு திடீரென்று உதித்தது ஒரு யோசனை. விட்டான் அடுத்த சவடால்!!! "என்னைப்போல அம்மணமாகத் திரிய யார் இருக்கிறார்?...! தைரியமான ஆளாக இருந்தால் வாருங்கள் போட்டிக்கு!" என்று சவால் விட்டாராம்... அந்தக் கதை தான் இப்போது விஜய்காந்துக்கு! அடித்த போதை தெளிந்து இப்போது தான் வந்தார் போலிருக்கிறது. இத்தனை நாள் ஈழத் தமிழர் பிரச்சினையில் மூடிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது கிளம்பியிருக்கிறது அவருக்கு வேகம்.. திருமங்கலத்தில் சூடு கண்ட பூனை, தன் சூட்டை மறைத்துக் கொள்ள விட்டிருக்கிறது ஒரு ஸ்டேட்மெண்ட். "ஈழத் தமிழருக்காக நாடாளுமன்றத்தை புறக்கணிக்க அரசியல் தலைவர்கள் தயாரா? நான் தயார். அவ்வாறு வந்தால் நான் முதலில் நிற்பேன்" என்று! அடடே! வரவேற்கத் தக்கதுதான்.. இதிலென்ன குறை கண்டீர் என்க...

இலங்கை வங்கி மீது கல்வீச்சு

ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை வங்கியை உணர்வுமிக்க தமிழ்மக்கள் பலர் கார் மற்றும் அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிட்டனர். இன்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றது. படம்-1 படம்-2 படம்-3 படம்-4 படம்-5

சாகச் செய்யாமல் சாகின்றாய்!

சாகின்றாய்.. தமிழா சாகின்றாய்.... உன்னை சாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகின்றாய்...!