முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக ஜெயலலிதா உண்ணாவிரதம்!

கடந்த சில காலமாகவே கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார் செல்வி ஜெயலலிதா. இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில நாட்கள் பத்தியம் இருக்கக் கோரப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் வேறு தாக்கியிருப்பதால், திடீரென உண்ணாவிரத அறிவிப்பு வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் 10-ஆம் தேதி இந்த சிகிச்சை நடைபெறும் என்றும், அதன் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏதாகினும் காணப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் தெரிகிறது. இதற்கான ஆலோசனையை வழங்கிய ஜோதிடர்கள், மாசி மகத்தின் அடுத்தநாளாகவும், செவ்வாய்க்கிழமையாகவும் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு ஏற்ற நாளாகவும் இருக்கும் என்று தெரிவித்தனராம்..
இதற்கான ஏற்பாடுகளை, மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள திரு.கோபால்சாமி, பாண்டியன் ஆகியோர் செய்து வருவதாக ராயப்பேட்டை அ.தி.மு.க மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசிக் குறிப்பு: எதையொட்டி என்ற அறிவிப்பு வெளிவிடுவது பற்றி யோசிக்கப்பட்டபோது, கரண்ட் பிரச்சினையான ஈழத் தமிழர் பிரச்சினையையொட்டி என்று சொல்லிக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதாம்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
அம்மா குணமாக இலங்கை(ஈழ) தமிழர்களின் கண்ணீர் கடவுளை பிராத்தனை செய்கின்றேன்
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த உண்ணாவிரதம்; சாகும் வரையா?? அல்லது யாராவது யூஸ் கொடுக்கும் வரையா??
தெளிவில்லை..; செய்தியை முழுமையாக எதிர்பார்க்கிறேன்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அஜீரணக் கோளாறு தீரும்வரை:)
kadavul illai kadiravan இவ்வாறு கூறியுள்ளார்…
"கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக ஜெயலலிதா உண்ணாவிரதம்!"
eezhathamizharaik kakkava? thannudaya arasiyal vazhvaik kakkava?
eezha thamizhar aadharavalargalai yematrava?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…