ஊருக்குள் ஒரு கோவணாண்டி இருந்தானாம். அவனது கோவணமும் கிழிந்து தொங்கும் நிலை வந்துவிட்டதாம். வேறென்ன செய்வது என்ற குழப்பத்தில் தானே அந்த கோவணத்தைக் கிழித்துக் கொண்டு அலைந்துவிடுவோமோ என்று வேறு பயம் வந்துவிட்டது. இத்தனை நாள் விட்டுக் கொண்டிருந்த சவடால்களுக்கெல்லாம் சமாதி கட்டும் நிலை வந்துவிட்டதைக் கண்டு தவித்தவனுக்கு திடீரென்று உதித்தது ஒரு யோசனை.
விட்டான் அடுத்த சவடால்!!!
"என்னைப்போல அம்மணமாகத் திரிய யார் இருக்கிறார்?...! தைரியமான ஆளாக இருந்தால் வாருங்கள் போட்டிக்கு!" என்று சவால் விட்டாராம்...
அந்தக் கதை தான் இப்போது விஜய்காந்துக்கு!
அடித்த போதை தெளிந்து இப்போது தான் வந்தார் போலிருக்கிறது. இத்தனை நாள் ஈழத் தமிழர் பிரச்சினையில் மூடிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது கிளம்பியிருக்கிறது அவருக்கு வேகம்..
திருமங்கலத்தில் சூடு கண்ட பூனை, தன் சூட்டை மறைத்துக் கொள்ள விட்டிருக்கிறது ஒரு ஸ்டேட்மெண்ட்.
"ஈழத் தமிழருக்காக நாடாளுமன்றத்தை புறக்கணிக்க அரசியல் தலைவர்கள் தயாரா? நான் தயார். அவ்வாறு வந்தால் நான் முதலில் நிற்பேன்" என்று!
அடடே! வரவேற்கத் தக்கதுதான்.. இதிலென்ன குறை கண்டீர் என்கிறீர்களா?
இந்திய அரசைப் புறக்கணிக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கும் யோசனை தருவதெல்லாம் இருக்கட்டும்! யோசனை கொடுப்பது யாரென்பதில் தானே அடங்கியிருக்கிறது அதன் தரம்!
வெற்றியின் உச்சியில் நின்று கொண்டு விடுதலைப் புலிகள் அறிவித்தபோதுதான் அந்த போர் நிறுத்தத்திற்கு ஒரு மரியாதை வந்தது!
ஆனால் கூட்டணிக்கு யாரும் அழைக்காத்தால் குழப்பம்! திருமங்கலத்துக்குப் பிறகு தனியாக நிற்பதற்கு பீதி!
மானம் போகும் விசயத்தை வைத்தே சவடால் விட்டால்........ பலே விஜய்காந்த்! கால் நூற்றாண்டு கால சினிமா வாழ்க்கையில் இதைக்கூட கற்றுக் கொள்ளாவிட்டால் எப்படி?

கருத்துகள்
நல்லா சொன்னீங்க நச்சுனு!
படித்தேன் சிரித்தேன். ஆனாலும் வி.காவுக்கு இவ்வளவு குசும்பு அதிகம்.