"கோடி கொடுத்த கொடைஞன்
குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்
தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்
அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு!"
என்று பாடப் பெற்ற வள்ளல் அழகப்பரின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு!
குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்
தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்
அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு!"
என்று பாடப் பெற்ற வள்ளல் அழகப்பரின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு!
காரைக்குடி இன்று பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் வள்ளல் அழகப்பர் தான் காரணம் என்றால் அது மிகையில்லை. காரைக்குடியை கல்விக் குடியாக மாற்றியதோடு, மத்திய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.
அடிப்படைக் கல்வி முதல், ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் உருவாகிட முழு முதற் காரணமான வள்ளல் அழகப்பரின் நூற்றாண்டு விழா நன்றியுடையோர் எல்லோராலும் நினைவோடு காரைக்குடியில் கொண்டாடப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் வசிக்கும் அழகப்பா கல்வி நிறுவன முன்னாள், இந்நாள் மாணவர்கள் மற்றும் காரைக்குடியின் வளர்ச்சியினால் பயனடைந்தோர் சார்பில், அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ஏற்பாடாகியுள்ளது.
வரும் 05.04.09 ஞாயிறு காலை 10 மணிக்கு வள்ளல் அழகப்பரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்படவுள்ளது. அந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். தங்கள் வருகையோடு, உங்கள் நண்பர்கள், குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வந்து பங்கேற்க வேண்டுகிறோம்.
மேலும் தொடர்புகளுக்கு:
தி.பெரியார் சாக்ரடீசு - 94446 09442
அமைப்பாளர்
தி.பெரியார் சாக்ரடீசு - 94446 09442
அமைப்பாளர்
கருத்துகள்