முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை! - புதுமையான மணமக்கள்

திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமின்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சிடி தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு,என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதை போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.)


அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும் அப்படி செலவு செய்வதற்கும் அழகு படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் ஏதாவது இருக்குமா? ’இதெல்லாம் நடக்கிற காரியமாடா மண்டையா?’ என்று குப்பைக் கூடையில் போடுவதற்குச் சிரமமாக இருக்கும் அழைப்பிதழ்கள் கிழித்துக் குப்பைக்கு அனுப்பப்படும். இதெல்லாம் கேட்டால் அப்படி அழைப்பிதழ் அடிக்கும் நண்பர்களுக்கு வருத்தமாகக் கூட இருக்கும். ஆனால் உண்மை அது தான். மேலும் ஓர் அழைப்பிதழ் உருவாக்க எத்தனை மரத்துண்டுகள் தேவை என்பதையும் கணக்கில் கொண்டால், உயர்தரமான அழைப்பிதழ் என்று சொல்லப்படும் ஒன்றை உருவாக்க சூழலையும் நாம் கெடுப்பது புரியும்.


இந்த வரிசையிலிருந்து வேறுபட்டவர் அருமைத் தம்பி பிரகாஷ் செல்வராசு. கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது தங்கை திருமணத்திற்கு ஓர் ஆண்டின் நாள்காட்டியை வடிவமைத்து அதையே அழைப்பிதழாக்கி பயன்படுத்த வைத்தார். கடந்த வாரம் நடைபெற்ற வரது திருமணத்திற்கான அழைப்பிதழை பயன்முடிந்ததும் தூக்கி மண்ணில் போடுங்கள் என்கிறார். அது உரமாவதற்கு அல்ல - விதையாவதற்கு! ஆம். அவர் தந்த அழைப்பிதழுக்குள்ளேயே விதைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை விதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கைத் தயாரிப்பு காகித அட்டைகள். நீங்கள் மண்ணில் தூக்கிவீசுவதோடு மட்டுமல்லாமல், அதை நீரூற்றி வளர்த்தால், அடுத்த தலைமுறைக்கு நம் பரிசாகவும் அல்லவா இருக்கும்!


இத்தகைய பயனுடைய முயற்சிக்கு அவர் மட்டுமல்லாது நண்பா அறக்கட்டளையில்அவருடன் இருக்கும் ராதா கிருஷ்ணன், சாரதா, கார்த்திகேயன் மற்றும் தோழர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தம்பி பிரகாசுக்கும், அவர் தன் வாழ்விணையர் அம்பிகா பிரியதர்ஷினிக்கும்  இனிய வாழ்த்துகள்!!

கருத்துகள்

ela இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.  எது? இது தான் அது!  "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."  பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்க...