முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’நறுக்கு’த் தீனி (அக்டோபர் 2012)

மினி ப்ளாக்குகள் எனப்படும் ட்விட்டரும், பேஸ்புக்கும் வந்த பிறகு, விரிவாக எழுதுவதற்கான அவசியமோ, பெரிய தயாரிப்போ இல்லாமல் கூட, உடனுக்குடன் தோன்றும் கருத்தை எழுதிவிட முடிகிறது. அதனால் வலைப்பூவில் எழுத நினைக்கும் செய்திகள் கூட அங்கேயே முடிந்துவிடுகின்றன. அல்லது சோம்பலால் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுப் போகின்றன. 

எனவே அவற்றை அப்படியே இங்கு பதிவு செய்யவோ, அல்லது கொஞ்சம் விரிவாக்கி எழுதவோ வேண்டும் என்று பல காலமாக நினைத்துள்ளேன். அதற்கான பகுதிக்கு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்து, யோசித்தே தாமதித்துவிட்டேன். நல்ல பெயரோ என்னவோ- இப்ப வச்சாச்சு... தொடங்கியாச்சு...
நறுக்குத் தீனி

விஜயகாந்த் கோபம்?

விஜயகாந்த் வீடியோவைப் பார்த்தேன். ‘நீ யார்’ என்று அந்த பத்திரிகையாளரைப் பார்த்துக் கேட்கிறார். அவர் எந்த பத்திரிகையிலிருந்து வருகிறார் என்று கடைசி வரை சொன்னதாகத் தெரியவில்லை. அதன் பிறகு பத்திரிகையின் / தொலைக்காட்சியின் பெயரோடு வந்து கேட்டவர்களுக்கு அவரின் பதில் ஓரளவு மரியாதையாகத் தான் இருக்கிறது. அதற்கும் பிறகு மீண்டும் அந்த நபர் வந்து வம்பிழுக்க இழுக்க வேகம் கூடுகிறது. (அவருக்கு ’சுள்’ளுனு ஏறத் தான் செய்யும்.)

இப்போ என்னுடைய கேள்வி, அந்த பத்திரிகையாளர் எந்த பத்திரிகையைச் சேர்ந்தவர்? ஏன்னா, ரொம்பப் பேரு பத்திரிகையாளர்ங்கிற பேர்ல சுத்திக்கிட்டு திரியிறாங்க... இவங்க எழுதவும் மாட்டாங்க... யாரும் போடவும் மாட்டாங்க... ஆனா பத்திர்கையாளன்னு பொறுக்கித் திங்கிறதுக்கு நிறையபேர் இருக்கான். அதுக்காகக் கேட்கிறேன். தெரிஞ்சுக்கத் தான் கேட்கிறேன்.
(30.10.2012)

பள்ளிக் கல்விக்கு நுழைவுத் தேர்வு
உயர் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைப்பதா? என்று நாம் கண்டித்தபோது, உயர் கல்வி படிப்போருக்கு தகுதி, திறமையை அளக்க அளவுகோல் வேண்டாமா என்றெல்லாம் வாயளந்தார்கள் இப்போது எங்கே? பள்ளிக் கல்விக்கும் நுழைவுத் தேர்வு வைப்பது பற்றிப் பேசுகிறார் கபில் சிபல். 

இடப் பற்றாக்குறை இருந்தால் தானே நுழைவுத் தேர்வு வேண்டும். பள்ளிக் கல்விக்கு இடம் தரமுடியாவிட்டால் என்ன மயிருக்கு ஒரு அரசு? ஒரு மனித வள மேம்பாட்டு அமைச்சர்? நுழைவுத் தேர்வை எங்கும் நுழைய விடக் கூடாது என்று சமூக நீதியாளர்கள் சொல்வது ஏன் என்று இப்போதாவது தெரிகிறதா?

(29.10.2012)

திமுக தொடங்கிய மின் திட்டங்களும், அதிமுகவின் தேர்தல் கணக்கும்
தி.மு.க தொடங்கிய மின் திட்டங்கள் குறித்தும், அது ஏன் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருக்கிறது என்பது குறித்தும் மக்களுக்கு பிரச்சாரம் செய்யவில்லையானால, அவை செயல்பாட்டுக்கு வரும்போது, ஏதோ ஜெயலலிதாவால் நடந்தது என்பதைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் நடக்கும். இதற்காகத்தான் பல திட்டங்கள் தொடக்கத்திற்காக மட்டும் காத்திருக்கின்றன. போல்ட் நட்டு மாற்றப்படவேண்டிய விசயங்களும் அப்படியே இருக்கின்றன.
(12.10.2012)

ஆரியத் தொலைக்காட்சியின் ’சூரிய வணக்கம்’!
ஆரியத் தொலைக்காட்சியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் ஒரே பார்ப்பன மயம்! சொரி விட் அடிக்கும் பாஸ்கர் (சம்பளத்தைக் குச்சியில் வச்சு தூக்கிக் கொடுத்தா, சம்பளத்தை உசத்திக் கொடுக்கிறதாம்), ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜோசியத்துக்கு ஒரு நேரம், இது போக புதுசா ஆன்மீகக் கதைகள் வேறயாம்! ஆன்மீகக் கதைகள் என்ன புதுசுன்னு கேக்குறீங்களா? அதுவும் நியாயம் தான். 

சுகிசிவம் மாதிரியே வாயில லைட்டா வெத்தல போட்டுக் கொதப்பின ஸ்டைல்ல பேசிற ஆளு ஒன்ன கொண்டாந்து இறக்கியிருக்காய்ங்க... ஏப்பா.. இந்த ஆன்மீக லிஸ்டுல முஸ்லிம், கிறிஸ்துவர், பவுத்தர், பார்சி, ஜைனர் இவங்கள்லாம் வர மாட்டாங்களா? கேட்டா எல்லா மதங்களின் சிறப்பு நாள்லயும் இவுரே வாயளப்பாருன்னுவானுங்க... அது ஏன் இந்து மதக்காரரே, நெத்தியில பொட்டு வச்சுக்கிட்டு எல்லா மதத்தையும் பத்திப் பேசணும். சிலுவை போட்டுக்கிட்டு ஒரு பாதிரியோ, குல்லா வச்சுக்கிட்டு ஒரு முல்லாவோ இந்து மதத்தையும் பத்தி பேச மாட்டாங்களா?

’இல்ல இந்துக்கள் நிறைய இருக்கோம்...னு’ வாயத் தொறந்தீங்க... அந்த மைசூருனால தான் நாங்களும் இந்து மதத்தை அதிகம் டார்கெட் பண்றோம்னு திரும்பவும் அடிச்சுச் சொல்லுவோம். சரி, டிராக் மாற வேண்டாம். அந்த எழவெடுத்த சூரிய வணக்கம் மட்டுமில்ல... புராணக் குப்பைகள், மடமைத் தொடர்கள்... இப்படி அந்தக் காலத்து (இந்தக் காலத்தும்) டிடி மாதிரி இருக்கிறதை ஆரியத் தொலைக்காட்சின்னு தான் சொல்ல முடியும். சூரியத் தொலைக்காட்சின்னு எல்லாம் சொல்ல முடியாது!
(10.10.2012)

பொது வாழ்க்கையின் பாலபாடம்!
திருமா விழாவில் 100 பொற்காசுகள் பெற்றதற்கும், அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டதற்கும் ‘கலிகாலம்’ ரேஞ்சுக்கு கவலைப்படும் தோழர்களே! சிந்திப்பீர்!!

100 பொற்காசுகளை வைத்துக் கொண்டு அவரென்ன காசுமாலையா செய்துகொள்ளப் போகிறார். இயக்கத்தின் நிதிக்குப் பயன்படப்போகிறது. ஒரு தொலைக்காட்சி தொடங்கவேண்டும்.. பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தவேண்டும் என்ற அவசியத்திற்குப் பயன்படப்போகிறது. 

ஓரிரு பிரச்சினைகளை வைத்துக் கொண்டெல்லாம் ஒருவரை ஒரேடியாக ஒதுக்கிவிடமுடியாது. நாராயணசாமி - அணு உலை ஆதரவாளர் என்ற ஒரே விசயத்திற்காக மட்டும் அவரை எப்போதும் எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தில்லியில் குரல் கொடுக்கக் கூடியவர்களில் அவரும் ஒருவர். 

அடிப்படைக் கொள்கைகளில் மாறுபடுவோரிடமும் கூட சில நிலைப்பாடுகளில் நாம் ஒத்துப் போவோம்; அதற்காகக் கைகோர்த்து நிற்போம். 

நிலைப்பாடுகளில் மாறுபாடும், அடிப்படைகளில் ஒத்துப் போவோரிடமும் நாம் அதிகள் வெறுப்பு பாராட்ட வேண்டியதில்லை. இது பொதுவாழ்க்கையின் பாலபாடம்.
(02.10.2012)

இது செய்தியா? கதையா?

தினமலரின் அளப்புகளுக்கு ஓர் அளவுகோல்!
கரண்ட் கட் ஆன பெட்ரோல் பங்க்-கில் கணவன் - மனைவி மாறினார்கள் என்றொரு செய்தி இன்று தினமலரில் வந்துள்ளது. இதே செய்தியை பல மாதங்களுக்கு முன் படித்து எடுத்து வைத்திருந்தேன். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதையும், இது செய்தியா? கதையா என்பதையும் நீங்களே பார்த்துக் கொள்ளலாம்.

தினமலரின் இன்றைய கதை (2012 அக்டோபர் 1): http://www.dinamalar.com/News_Detail.asp?Id=557671

கூடலின் அன்றைய (2011 டிசம்பர் 11) செய்தி: http://www.koodal.com/news/tamilnadu.asp?id=70620

தினமலரின் இதர பித்தலாட்டங்களை எனது முந்தைய பதிவுகளிலும் தேடிப் பார்க்கலாம்.
(01.10.2012)








கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பல தகவல்களின் தொகுப்பிற்கு நன்றி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam